சிங்கப்பூருக்கு திரும்பும் நாளை எதிர்நோக்கி இருக்கும் தமிழகத்தின் ‘குட்டி சிங்கப்பூர்’வாசிகள்

தமிழ்­நாட்­டின் மைய நக­ரான திருச்சி அருகே உள்ள மன்னார்குடி, புதுக்­கோட்டை, உள்­ளிக்­கோட்டை, ஆலங்­குடி போன்ற ஊர்­க­ளைச் சேர்ந்­த­ பலரும் வேலை பார்க்­க­வும் தொழில் தொடங்­க­வும் 1920களில் இருந்தே சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­வர்­கள்.

சிங்­கப்­பூ­ரில் குடி­மக்­க­ளாக இருக்­கும் 500,000 தமிழ் வம்­சா­வளி மக்­களில் அவர்­க­ளின் விகி­தாச்­சா­ரம் அதி­கம்.

அந்த ஊர்­களை உள்­ள­டக்­கிய வட்டாரம் 'குட்டி சிங்­கப்­பூர்' என்று கூட குறிப்­பி­டப்­ப­டு­கிறது.

என்­றா­லும் கொவிட்-19 கார­ண­மாக அந்­தப் பகு­தி­க­ளைச் சேர்ந்த பல ஊழி­யர்­கள் சிங்­கப்­பூ­ரில் இருந்து சொந்த ஊருக்­குத் திரும்பி இருக்­கி­றார்­கள். வேலை இல்­லா­ததும் தங்­கள் பெற்­றோரைப் பார்த்துக்கொள்ள வேண்­டிய தேவை கார­ண­மா­க­வும் அவர்­கள் ஊர் திரும்பி இருக்­கி­றார்­கள்.

இருந்­தா­லும் கூட மீண்­டும் எப்­போது சிங்­கப்­பூர் திரும்­ப­லாம் என்ற எதிர்­பார்ப்­பு­டனேயே அவர்­கள் ஒவ்­வொரு நாளை­யும் கடத்தி வரு­கிறார்­கள்.

சிங்­கப்­பூ­ரில் இரண்­டாண்டு காலம் எண்­ணெய் துரப்­பண நிறு­வ­னத்­தில் பணி­யாற்­றிய இந்­தி­ர­ஜித் வீர­கு­மார், 29, என்­ப­வர் சென்ற ஆண்டு அக்­டோ­ப­ரில் மேல­தி­ருப்­பா­லக்­குடி என்ற தன் கிரா­மத்­திற்குத் திரும்­பி­விட்­டார்.

சிங்­கப்­பூ­ருக்கு மீண்­டும் வர இப்­போது கடு­மை­யாக அவர் முயற்­சித்து வரு­கி­றார்.

சிங்­கப்­பூ­ரில் ஒரு கட்­டு­மான நிறு­வ­னத்­தில் கட்­டு­மான இட மேற்­பார்­வை­யா­ள­ராக வேலை பார்த்த தன­பா­லன் மணி­பா­லன், 43, என்ற ஊழி­யர் விடு­முறை நிமித்­தம் தனது ஊருக்­குத் திரும்­பி­னார்.

தங்­கள் வொர்க் ­பர்­மிட் அல்­லது எஸ் பாஸ் காலா­வ­தி­யா­வ­தற்கு முன்பே சிங்­கப்­பூர் திரும்­பி­விட வேண்­டும் என்று ஊர் திரும்­பிய ஒவ்­வொ­ரு­வ­ரும் மிக­வும் நாட்­ட முடன் இருப்­ப­தாக இவர் கூறு­கிறார். புதி­தாக வேலை பெறு­வது அவ்­வ­ளவு சுல­பம் அல்ல என்­பதே இதற்­கான கார­ணம் என்று திரு தன­பா­லன் விளக்­கி­னார்.

சிங்­கப்­பூ­ரில் வேலை பார்க்க புதி­தாக வேலை அனு­ம­திச் சீட்டு (வொர்க்­ பர்­மிட்) பெற வேண்­டு­மானால் $4,500 முதல் $5,000 வரை செல­வா­கும். எஸ் பாஸ் பெற $6,000 முதல் $8,000 வரை பணம் செல­வழிக்க வேண்­டும்.

இது ஒரு­பு­றம் இருக்க, சிங்­கப்­பூர் திரும்­பி­ய­தும் கட்­டாய தனிமை உத்­த­ரவை நிறை­வேற்ற மேலும் $2,200 தேவைப்­படும் என்று அந்த ஊழி­யர் விளக்­கி­னார்.

"என்­னு­டைய தாயார், மனைவி, பிள்­ளை­க­ளு­டன் சில நாட்­கள் தங்கி இருக்க வேண்­டும் என்­ப­தற்­காக இந்­தியா திரும்­பி­னேன். விசா அடுத்த மாதம் முடி­கிறது. அதற்­குள்­ளாக சிங்­கப்­பூர் சென்­று­விட வேண்­டும் என்று விரும்­பு­கிறேன்," என்றார் திரு தன­பா­லன்.

இருந்தாலும் இந்­தி­யா­வில் கொவிட்-19 இரண்­டா­வது அலை கார­ண­மாக சிங்­கப்­பூர் பயண கட்டுப்­பா­டு­க­ளைக் கடு­மை­யாக்கி இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ரில் மின்­சா­ரத் துறை ஊழி­ய­ராக வேலை பார்த்து வந்த நல்­ல­தம்பி தமி­ழரசன், 42, என்­ப­வர் சென்ற ஆண்டு சிங்­கப்­பூர் திரும்பி­வி­ட­லாம் என்று பல நாட்­க­ளாக காத்­தி­ருந்­தார்.

ஆனால் அது இய­லா­மல் போகவே தன்­னு­டைய உள்­ளிக்­கோட்டை கிரா­மத்­தில் விவ­சா­யி­களுக்­காக உண­வ­கம் ஒன்றை இவர் தொடங்கி இருக்­கி­றார்.

சிங்­கப்­பூ­ரில் ஆறாண்டு காலம் கட்­டு­மான இட மேற்­பார்­வை­யா­ள­ராக வேலை பார்த்த ரங்­க­ரா­ஜன் நட­ரா­ஜன் என்ற 34 வயது கவி­ஞர், சிங்­கப்­பூ­ரில் தான் வாழ்ந்த வாழ்க்கை நினை­வ­லை­க­ளு­டன் தன் கிரா­மத்­தில் இருந்து வரு­கிறார்.

சிங்­கப்­பூ­ரில் வேலை பார்த்­த­போது 2014ல் நடந்த முத­லா­வது வெளி­நாட்டு ஊழி­யர் கவிதைப் போட்­டி­யில் பங்­கெ­டுத்­து இவர் பரிசு பெற்­றார்.

திரு ரங்­க­ரா­ஜன் சென்ற ஆண்டு ஜூலை­யில் தன்­னு­டைய மனை­வியைக் கவ­னித்­துக் கொள்­வ­தற்­காக சொந்த ஊருக்­குத் திரும்­பி­னார். "வய­லில் பெற்­றோ­ருக்கு உத­வு­கி­றேன். பக்­கத்து ஊரில் ஒரு கடை­யில் வேலை பார்க்­கி­றேன். இப்­போ­தைய எனது வாழ்வு ஓஹோ என்று இல்­லா­விட்­டா­லும் இது­தான் என் வாழ்க்கை என்று காலம் தள்ளு­கி­றேன்," என்று அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரை­விட்டு சென்ற பிறகு இது­வ­ரை­யில் திரு ரங்­க­ரா­ஜன் புதி­தாக எந்­த­வொரு கவி­தை­யை­யும் எழு­த­வில்லை.

சிங்­கப்­பூ­ரில் ஒரு கட்­டு­மான நிறு­வ­னத்­தில் 25 ஆண்டு காலம் கணக்­கா­ள­ராக வேலை பார்த்­த­வர் திரு கரு­ணா­நிதி ராஜா, 53.

இவர் சிங்­கப்­பூ­ருக்குச் சென்­றி­ருக்­கும் ஏழா­வது தலை­முறை குடி­யேறி.

"மத்­திய கிழக்கு வேறு, சிங்­கப்­பூர் வேறு. சிங்­கப்­பூர் பணத்­தைப் பொறுத்தவரை நிலை­யான நாடு. மரி­யா­தைக்கு அங்கு குறைவு இருக்­காது. கலா­சார ரீதி­யி­லும் தொடர்­புள்ள நாடு. தமிழ் பேசு­வோர் அதி­கம், ஒரே மாதி­ரி­யான உணவு," என்று திரு கரு­ணா­நிதி கூறி­னார்.

இவர்­கள் எல்­லாம் ஒரு­பு­றம் இருக்க, மன்­னார்­கு­டி­யைச் சேர்ந்த பேருந்து ஓட்­டு­ந­ரான பி. ஜெய­பி­ர­காஷ், 35, போன்­ற­வர்­களும் இருக்­கி­றார்­கள். இவர் சிங்­கப்­பூ­ருக்கு வந்ததில்லை. ஆனால் இவ­ரு­டைய உற­வி­னர்­கள் பல­ரும் சிங்­கப்­பூ­ரில் வசிக்­கி­றார்­கள்.

'எங்­கள் பகுதி குட்டி சிங்­கப்­பூர்' என்று கூறும் திரு ஜெய­பி­ர­காஷ், சிங்­கப்­பூ­ரின் முதல் பிர­த­ம­ரான திரு லீ குவான் இயூ தனது 92வது வய­தில் 2015ல் மர­ண­ம­டைந்த நாளில் மன்­னார்­கு­டி­யில் பிறந்த தன்­னு­டைய மக­னுக்கு லீ குவான் இயூ ஜெய­பி­ர­காஷ் என்றே பெயர் சூட்டி இருக்­கி­றார்.

இப்­போது இவ­ரின் குடும்ப பெண்­கள் நடத்­தும் கூட்­டு­றவு தொழி­லுக்­கும் பால்­பண்ணை தொழி­லுக்­கும் திரு லீ குவான் இயூ­வின் பெயரே சூட்­டப்­பட்டு இருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!