ஆசானும் இவரே, மாணவரும் இவரே

இல்­ல­த­ர­சி­யாக இருந்து மூன்று பிள்­ளை­க­ளை­யும் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பட்­டப்­ப­டிப்பு மேற்­கொள்ள மூல கார­ண­மாக விளங்­கி­ய­வர் 61 வயது திரு­மதி ரிபெக்கா அல்லி நாயர்.

பிள்­ளை­க­ளின் ஆரம்பக் கல்வி பய­ணத்­தில் ஐயங்­களை தீர்த்த திரு­மதி நாய­ருக்கு சிறு வய­தி­லி­ருந்தே தமிழ் மொழி மீது பேரார்­வம்.

விக்­டோ­ரிய பள்­ளி­யில் ‘ஏ’ நிலை தேர்­வு­களை முடித்­த ­பி­றகு மேற்­ப­டிப்பை தொடர வேண்­டும் என்று விரும்­பி­னா­லும் அப்­போது குடும்ப சூழ்­நிலை ஈடு­கொ­டுக்­க­வில்லை.

1980களில், முந்­தைய தேசிய கல்வி கழக நூல­கத்­தில் பணி­யாற்ற தொடங்­கிய இவர், திரு­ம­ணம் புரிந்து, முதல் பிள்ளை பிறக்­கும் வரை­ அப்­ப­ணி­யில் ஈடு­பட்­டார்.

பிள்­ளை­களை வளர்க்­கும் பொறுப்­பில் கவ­னம் செலுத்­தி­ய­வாறு பகுதி நேர­மாக துணைப்­பாட ஆசி­ரி­ய­ரா­க­வும் உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­க­ளுக்கு உதவி வந்­தார்.மூன்று பிள்­ளை­கள் பெரி­ய­வர்­கள் ஆனா­தும் தம் நீண்ட நாள் ஆசை மீண்­டும் கதவை தட்­டி­யது.

“தொன்­மை­யான தமிழ் மொழி­யின் ஆழத்தை அறி­வ­தற்­கான ஏக்­கம் என்­னுள் இருந்­தது. சங்க இலக்­கிய காலத்­தி­லி­ருந்து நடை­முறை காலம் வரை­ தமிழ் இலக்­கி­யத்­தின் உரு­மாற்­றத்தை இன்­னும் ஆழ­மாக புரிந்­து­கொள்ள வேண்­டும் என்ற தேடலால் பட்­டப்­ப­டிப்பை தொடர முடி­வெ­டுத்­தேன்,” என்று கூறி­னார் சுமார் 36 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு பட்­டப்­ப­டிப்பை மேற்­கொண்ட திரு­மதி நாயர்.

குடும்­பம் இம்­மு­டி­வுக்கு ஆத­ர­வ­ளிக்க, 2015ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பகுதி நேர­மாக தமிழ் மொழி, இலக்­கி­யம் கூடிய ஆங்­கில மொழி படிப்­ப­டிப்பை மேற்­கொள்ள தொடங்­கி­னார்.

இதற்­கி­டை­யில் கல்­விச் சூழ­லில் எத்­த­னையோ மாற்­றங்­கள் ஏற்­பட்­டுள்ள நிலை­யில் இவற்­றை­யெல்­லாம் சமா­ளிக்க முடி­யுமா என்ற சிறு ஐயம் திரு­மதி நாய­ரின் மன­தில் தோன்­றி­யது.

ஆனால் ‘ஒரு காரி­யத்­தில் ஈடு­பட நினைத்தால் அதி­லி­ருந்து பின்­வாங்­கா­மல் முழு­மை­யாக முடிக்க வேண்­டும்’ எனும் இவ­ரது கொள்கை, வந்த அனைத்து கற்­றல் சவால்­க­ளை­யும் முறி­ய­டிக்க உத­வி­யது. நண்­ப­ரி­டம் கணினி விசைப்­ப­ல­கை­யில் தமிழ் எழுத்­து­களை ‘டைப்’ செய்ய கற்­றுக்­கொண்டு, இளம் வகுப்பு மாண­வர்­க­ளு­டன் சேர்ந்து குழு வகுப்பு நட­வ­டிக்­கை­க­ளி­லும் ஈடு­பட்டு, தொழில்­நுட்ப உத்­தி­களை படி­ப்

ப­டி­யாகக் கற்­றுக்­கொன்­டார் திரு­மதி நாயர். கடந்த மே 4ஆம் தேதி நடந்த சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழக பட்­ட­ம­ளிப்பு விழா­வில் தமது பட்­ட­தா­ரி­யா­கும் நீண்ட நாள் கனவு நன­வா­னது.

“மனம் இருந்­தால் மார்­க்கம் உண்டு. மன­தை­யும் உட­லை­யும் திட­மாக வைத்­துக்­கொண்­டால் சாதிப்­ப­தற்கு எல்­லை­கள் இல்லை. வாழ்­நாள் கற்­ற­லுக்கு வயது தடை­யில்லை,” என்று கூறி­னார் திரு­மதி நாயர். இந்த கல்வி பாதை­யில் தொடர்­வ­தற்கு ஊக்­கம் தந்த தமது தமிழ் ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் தம்­மு­டம் முன்பு பணி­யாற்­றிய பேரா­சி­ரி­யர் கோபி­நா­த­னுக்­கும் இது ஒரு பெரு­மைக்­கு­ரிய நிகழ்வு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!