இனவாத கிருமி பரவக்கூடாது; சிங்கப்பூரும் இனவாதப்போக்கும் சேர்ந்திருக்க முடியாது

கொவிட்-19 கிருமித்தொற்று இனம், அச்சம், வன்செயல் ஆகியவற்றுக்கு இடையில் ஒரு தொடர்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்மையில் சிங்கப்பூரரான ஒரு மாது உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது முறைக முகக்கவசம் அணியவில்லை என்பதற்காக தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது இதையே காட்டுகிறது.

உருமாறிய புதிய கொரோனா கிருமி இந்திவில் தலை விரித்து ஆடுவதன் காரணமாக, ஒருவர் எந்த நாட்டவராக இருந்தாலும் அவர் இந்தியர் என்றால் அவர் மீது களங்கம் கற்பிக்கும் ஒரு போக்கு காணப்படுகிறது.

இனத்தையும் நோயையும் தொடர்பு படுத்தும் நெறிகெட்ட பல சம்பவங்களில் அந்தத் தாக்குதல் அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றாக உள்ளது.

இதில் இனம் மட்டும் பார்க்கப்படுவதாகத் தெரியவில்லை. கொவிட்-19 கிருமியை ஒழிக்க முன்னின்று பாடுபடும் டான் டோக் செங் மருத்துவமனையைச் சேர்ந்த சில ஊழியர்களையும் பொதுமக்களில் சிலர் பாரபட்சமாக நடத்தி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இந்திய ஊழியர்கள் அல்ல.

இதில் முதல் அம்சம், அச்சம்.

ஆகைல் அச்சம் என்பது ஒரு தொற்றுநோய். அது தனிப்பட்ட மரண பயத்தைக் கிளப்பி விடுகிறது. இது எங்கும் எப்போதும் காணப்படுகிறது. தொற்று ஏற்படும்போது அது தேவையில்லா மரண பயத்துக்குத் தூபம் போடுகிறது.

இதில் மென்மை, கடுமை என்ற இருவகை மரணங்களுக்கு இடைப்பட்ட வேறுபாடும் தெரியவருகிறது. இதுபற்றி சூசன் சோன்டேக் என்ற அமெரிக்க எழுத்தாளர் 1989ல் தனது ‘எய்ட்ஸ் நோயும் அதன் உருவகங்களும்’ என்ற புத்தகத்தில் எளிமை க விளக்குகிறார்.

மென்மைன மரணம் என்பது எளிதானது. கடுமையான மரணம் என்பது தாங்கிக்கொள்ள இயலாதது என்று குறிப்பிடும் அவர், கடுமைன மரணத்துக்கு எய்ட்ஸ் காரணம் என்று பார்க்கப்படுவது ஒரு கட்டுக்கதை மிரட்டல் என்கிறார்.

கட்டுக்கதை என்பது மிரட்டலுக்கு உட்பட்டுள்ள நிலப்பரப்பில் கூடுகட்டுகிறது. ஆகைல் நிலப்பரப்பு என்பது இரண்டாவது அம்சம்.

ஒரு சமூகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் ஒரு நோயைத் தங்கள் நாட்டினர் மீது வெளியில் இருந்து இடம்பெறும் ஒரு தாக்குதல் என்று நினைக்கும்போது அந்த நோய் ஓர் உருவகமாகி விடுகிறது என்று அந்த அமெரிக்க எழுத்தாளர் சொல்கிறார்.

ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் நோயுடன் தொடர்புடைய காமம் மேற்கத்திய சமூகத்தின் தார்மீக மற்றும் உயிரியல் பண்பு நிலை மீது இடம்பெறும் ஒரு தாக்குதல் என்று பார்க்கப்பட்டது.

கறுப்பின ஆப்பிரிக்கா எய்ட்ஸ் உருவாக்கக் கண்டம் என்றும் வெள்ளையின மேற்கு வெளி நோய்க்குப் பூகோள ரீதியில் இலக்கான ஒன்று என்றும் பார்க்கப்பட்டது. எய்ட்ஸ் இன அடிப்படையிலான களங்கத்துக்கு உட்படுத்தப்பட்டது. இதுபோலவேதான் இப்போது கொவிட்-19 தொற்றும் ஆகி இருக்கிறது.

கொரோனா தோன்றிய இடத்தை வைத்து வூஹான் கிருமி என்றும் சீனா கிருமி என்றும் கூட அது குறிப்பிடப்பட்டது. அதாவது இடம், இனத்துடன் அந்த நோய் தொடர்பு படுத்தப்பட்டது.

இதை வைத்துப் பார்க்கையில், சீனா, வூஹானைச் சேர்ந்தவர்கள் என்று அல்லாமல் சீனர்கள் என்றாலே பல நாடுகளிலும் அலைக்கழிக்கப்பட்டது, தாக்கப்பட்டது, நிந்தைக்கு ஆளானது என்பதில் வியப்பு இல்லை.

இப்போது இந்தி.

இந்திவில் முதலில் தலைகாட்டிய உருமாறிய கிருமி ஓர் இந்திய தரிப்பு என்று பார்க்கப்படுகிறது.

ஒவ்வோர் இந்தியரும் அல்லது இந்தியரைப் போல் தோன்றும் ஒவ்வொருவரும் கிருமியைப் பரப்பி விடுபவராக இருக்கலாம் என்றும் அவரை விட்டு விலகிவிட வேண்டும் என்றும் நினைப்பவர்கள், அந்தக் கிருமியை எதிர்த்து இந்தியர்கள் நடத்தி வரும் இமாலய போராட்டத்தை நினைத்துப் பார்ப்பதில்லை.

பல இன சிங்கப்பூரில் இத்தகைய எண்ணம் ஏற்கப்படாத ஒன்று. இந்த நாட்டின் சமூக மரபணுவே பல கலாசார தன்மைதான். பல இனத்தவரும் அவர்களின் நல்வாழ்வும் இல்லாத, ஒரு சிங்கப்பூரை கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க இயலாத ஒன்று.

இனவாதப் போக்கு என்பது சிங்கப்பூருக்கு எதிரானது.

இதர கலாசாரங்களின் செரிவுமிக்க அம்சங்களால் எட்டப்படாத கலாசாரம் என்று இங்கு எதுவும் இல்லை. வலுவான இன உணர்வு இருக்கிறது என்பது உண்மை. ஆனால் அது கலாசாரங்களை குறிப்பாக யூரேஷியர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் ஆகிய சிறுபான்மை மக்கள் உள்ளிட்ட குடிமக்கள் அனைவரின் மொழிகளையும் காக்கிறது.

சிங்கப்பூரின் இதயமாகத் திகழ்கின்ற எல்லாவற்றையும் உள்ளடக்கிய தேசிய கலாசாரம், அரசும் சமூகமும் பாதுகாக்கும் சட்டங்கள், பழக்கவழக்கங்கள் மூலம் நிலை நாட்டப்படுகிறது.

இங்கு அந்த இந்திய மாது மீது இனவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது பற்றி குறிப்பிட்ட பிரதமர் லீ சியன் லூங், தான் ஏமாற்றமடைந்ததாகவும் மிகவும் கவலை அடைந்ததாகவும் தெரிவித்தார்.

கொவிட்-19, வேலைகள், குடும்பம் பற்றி மக்கள் கவலை அடைந்துள்ளனர் என்பது தனக்குத் தெரியும் என்றும் இருந்தாலும் அது இனவாதப் போக்குகளையும் செயல்களையும் நியாயப்படுத்திவிடாது என்றும் பிரதமர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் ஒரு சிங்கப்பூரர். அவர் அப்படி இல்லாமல் வேறு யாராக இருந்தாலும் அத்தகைய தாக்குதல் தவறானது, அவமானமானது என்று திரு லீ குறிப்பிட்டார்.

“வேலை தொடர்பில் சிங்கப்பூரர்கள் கவலை அடைந்து இருக்கிறார்கள். இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிலர் இனவாதப் போக்கு, வெளிநாட்டினரை வெறுப்பது போன்றவற்றுக்குத் தூபம் போடுகிறார்கள்.

“நாம் கவனமாக இருக்கவில்லை என்றால் இத்தகைய இனவாதப் போக்கு இங்கு வழக்கமாகிவிடும்,” என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் எச்சரித்தார்.

நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் சண்முகம், பொறுப்புள்ள எதிர்த்தரப்புகள் இந்த விவகாரத்தில் உறுதியான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

சிங்கப்பூரில் இனவாத நடத்தையைக் கண்டிக்கும்படி எல்லா உறுப்பினர்களையும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். “பெரும்பாலான சிங்கப்பூரர்கள் கண்ணியமானவர்கள். அவர்களிடம் இனவாதப் போக்கு இல்லை.

“ஆனால் இனவாதப் போக்கு தீயைத் தொடர்ந்து கிளறிவிட்டால் நாம் சங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவோம். இனவாத, அந்நியர் எதிர்ப்புப் போக்கை அனுமதித்தால் சிங்கப்பூர் தோற்றுவிடும்.

“நம்மை வெற்றி பெற வைத்து பெருமைகொள்ள வைத்து உள்ள ஒவ்வொன்றுக்கும் அத்தகைய போக்கு முரண்பட்டது என்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் சண்முகம் குறப்பிட்டார்.

அதாவது தெளிவாகச் சொல்லவேண்டுமானால் சிங்கப்பூரும் இனவாதப்போக்கும் சேர்ந்து வாழ முடிது. பெரும்பாலான சிங்கப்பூரர்கள் இதைப் புரிந்து கொண்டு அதைச் சமூக அளவில் கடைப்பிடிக்கிறார்கள். என்றாலும் சிலர் இப்படி இல்லை.

இவர்கள் பெரும்பாலான சிங்கப்பூரர்களைப் போல் நடந்து கொள்ள இது தக்க தருணம்.

மரண பயமும் தங்கள் வாழ்விட சமூகத்தின் பாதுகாப்பும் புரிந்துகொள்ளக்கூடியவைதான். இருந்தாலும் கொரோனா கிருமிக்கு குறிப்பிட்ட இனமோ சமயமோ நாடோ கிடைது என்பதுதான் உண்மை.

அது மனிதகுலத்தின் பொது எதிரி. அது சிங்கப்பூரின் பொது எதிரி.

அசாத் லத்திஃப் - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தலையங்க எழுத்தாளர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!