சிங்கப்பூர்-ஹாங்காங் விமானப் பயணம்: ஜூலையில் மறுஆய்வு

சிங்­கப்­பூர்-ஹாங்­காங் இடையே இரு­த­ரப்பு விமா­னப் பயண ஏற்­பாடு தொடர்­பில் ஜூலை மாதத் தொடக்­கத்­தில் மறு­ஆய்வு இடம்­பெ­றும் என்று போக்­கு­வ­ரத்து அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

கடந்த மாதம் 26ஆம் தேதி சிங்கப்­பூர்-ஹாங்­காங் இரு­த­ரப்­புப் பயணத் திட்­டம் தொடங்­க­வி­ருந்த நிலை­யில், சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 பர­வல் மோச­மா­னதை அடுத்து, அது தள்­ளி­வைக்­கப்­பட்­டது.

அப்­போது முதல், சிங்­கப்­பூ­ரில் சமூ­கத்­தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரு­கிறது. அதே­போல, ஹாங்­காங்­கி­லும் நிலைமை கட்­டுக்­குள் இருக்­கிறது.

இந்­நி­லை­யில், இரு­த­ரப்­புப் பயண ஏற்­பாட்­டின்­கீழ் விமான சேவை­யைத் தொடங்­கும் நாளைத் தீர்­மா­னம் செய்­யு­முன், இரு நாடு­களும் அணுக்­கத் தொடர்­பில் இருக்­க­வும் ஜூலை தொடக்­கத்­தில் நிலைமையை மறு­ஆய்வு செய்­ய­வும் போக்கு­வரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ர­னும் ஹாங்­காங் வர்த்­தக, பொரு­ளி­யல் மேம்­பாட்டு அமைச்­சர் எட்­வர்ட் யாவும் இணங்கி இருப்­ப­தாக அமைச்­சின் அறிக்கை கூறி­யது.

முன்­ன­தாக, அண்­மை­யில் ஹாங்­காங் அமைச்­ச­ரு­டன் பேச்சு நடத்­தி­ய­தா­கக் கூறிய வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங், இரு நாடு­க­ளுக்கு இடையே விமா­னப் பய­ணத்­தைத் தொடங்க பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளைச் செயல்­ப­டுத்த வேண்­டி­யது முக்­கி­யம் என்­பதை இரு நாடு­களும் ஒத்­துக்­கொண்­ட­தா­கக் குறிப்­பிட்­டார்.

"தடுப்­பூசி விகி­தத்தை அதி­கப்­படுத்த வேண்­டி­யது முக்­கி­ய­மான நட­வ­டிக்­கை­களில் ஒன்று," என்று நேற்­றைய செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது கொவிட்-19 தொற்­றுக்­கு எ­தி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரு­மான திரு கான் சொன்­னார்.

எதிர்­கா­லத்­திற்­கான பாது­காப்­பான பய­ணத் திட்­டங்­கள் குறித்த பேச்­சு­வார்த்­தை­கள் தொடர்­வ­தா­கச் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­தார்.

தென்­கொ­ரி­யா­வு­ட­னான இரு­தரப்­புப் பயண ஏற்­பாடு பற்­றிக் கேட்­ட­தற்கு, "இடைக்­கால நோக்­கில், இது­போன்ற திட்­டங்­கள் குறித்து நாம் சிந்­திக்க வேண்­டி­ உள்­ளது. ஆயி­னும், இப்­போ­தைய கிரு­மித்­தொற்று அலை­யில் இருந்து மீண்டு வரும், கட்­டங்­கட்­ட­மா­கத் தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்டு வரும் இவ்­வே­ளை­யில் தென்­கொ­ரி­யா­உடன் இரு­த­ரப்­புப் பய­ணத் திட்­டம் சாத்­தி­ய­மில்லை," என்று திரு ஓங் பதிலுரைத்­தார்.

வேறு நாடு­க­ளுடனும் பயண ஏற்­பா­டு­கள் குறித்து பேச்­சு­ நடத்தி வரு­வ­தா­க­ அவர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!