தொழில்துறை ஆலோசனை, அறப்பணி நிகழ்ச்சி தனியார் வீடுகளுக்கான இடங்கள் 25% அதிகரிப்பு

அர­சாங்க நில விற்­பனைத் திட்­டத்­தின் கீழ் உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட இடங்­களில் இருந்து கொடுக்­கப்­படும் தனி­யார் வீடு­க­ளுக்­கான இடங்­கள், இந்த ஆண்­டின் பிற்­பகு­தி­யில் 25% அதி­க­மாகி 2,000 ஆக இருக்கும்.

இந்த ஆண்­டின் முதல் பாதியில் 1,605 வீடு­க­ளுக்­கான இடங்­கள் கொடுக்­கப்­பட்­டன.

உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட இடங்­களில் தனி­யார் வீடு­க­ளுக்­கான இடங்­களை மித­மாக அதிகமாக்க அர­சாங்­கம் முடிவு செய்­துள்ள தாக தேசிய வளர்ச்சி அமைச்சு நேற்று தெரிவித்­தது.

கடந்த ஓராண்­டில் வலு­வான தேவை காரணமாக விற்­கப்­ப­டா­மல் இருக்­கும் தனி­யார் வீடு­கள் குறைந்­துள்­ளன. 2020ல் மந்­த நிலையில் இருந்து பொரு­ளி­யல் மீண்டு வந்த போதி­லும் பொரு­ளி­ய­லிலும் தொழி­லா­ளர் சந்­தை­யி­லும் நிச்ச­ய­மற்ற நிலை தொடர்­கிறது என்று அமைச்சு கூறி­யது.

2020ல் இரண்­டா­வது பாதி­யில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட இடங்­களில் இருந்து தனி­யார் வீடு­க­ளுக்­குக் கொடுக்­கப்­பட்ட இடங்­கள் 23% குறைந்து 1,370 ஆக இருந்­தன. அவை இந்த ஆண்டு முதல் பாதி­யில் 17% அதி­க­மாக்­கப்­பட்­டன.

இந்த ஆகப்­பு­திய உறு­திப்­படுத்­தப்­பட்ட இடங்­களில் நான்கு தனி­யார் குடி­யி­ருப்பு இடங்­கள் இருக்­கின்­றன. அவற்­றில் எக்­ஸி­கி­யூட்­டிவ் கூட்­டு­ரிமை வீடு­க­ளைக் கட்­டு­வ­தற்­கான ஓர் இட­மும் இருக்­கிறது. இந்த நான்கு இடங்­க­ளிலும் ஏறத்­தாழ 2,000 தனி­யார் வீடு­கள் கட்­டப்­படும். அவற்­றில் 375 எக்­ஸி­கி­யூட்­டிவ் கூட்­டு­ரிமை வீடு­க­ளாக இருக்­கும்.

ஒதுக்­கி­வைக்­கப்­பட்­டுள்ள இடங்­களில் மேலும் 4,860 தனியார் வீடு­கள் கட்­டப்­படும். ஆக மொத்­தம் 6,860 தனி­யார் வீடு­கள் விற்­பனைக்கு வரும். இது இந்த ஆண்­டின் முதல் பாதி­யில் விற்­பனைக்கு வந்த 7,045 வீடு­க­ளை­விட 2.6% குறை­வா­னது.

இந்த ஒதுக்கப்பட்ட இடங்களில் ஆறு தனியார் குடியிருப்பு இடங்கள், இரண்டு பல நோக்கு இடங்கள், ஒரு ஹோட்டல் இடம் ஆகியவை அடங்கும்.

சிங்­கப்­பூ­ரில் ஜூன் 24 முதல் ஜூலை 30 வரை 30 இணைய வட்­ட­மேசை கலந்­து­ரை­யா­டல்­கள் நடக்­கின்­றன.

இந்த நிகழ்ச்­சிக்கு ‘நம்­பிக்கை உணவு விழா’ என்று பெயர். ‘மக்­கான் ஃபார் ஹோப்’ அமைப்பு நடத்தும் அந்த விழா­வில் புதிய தொழில்­மு­னை­வர்­க­ளுக்கு தொழில்­நுட்பத்­து­றைத் தலை­வர்­கள் பல ஆலோ­ச­னை­களை வழங்கு­வார்­கள்.

அதே­வே­ளை­யில் ஃபெய் இயூ சமூ­கச் சேவை­கள் என்ற அமைப்­பின் மூலம் நன்மை பெறு­வோ­ருக்­காக $125,000 திரட்­டு­வ­தும் நோக்­கம். ஒவ்­வொரு கலந்­து­ரை­யா­ட­லின் போதும் சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த, ஆசி­யா­வைச் சேர்ந்த முத­லீட்­டா­ளர் பத்து தொழில்­முனை­வோ­ரு­டன் சேர்ந்­து­கொண்டு தலை­சி­றந்த ஆலோ­சனை­களை வழங்­கு­வார்.

கலந்­து­கொள்­வோ­ரின் வீடு­களுக்கு சோல் ஃபுட், போப் ஜாய் தாய் போன்ற சமூக நிறு­வனங்­களி­ட­மி­ருந்து உணவு அனுப்­பப்­படும். விழாவை நடத்­து­வோர் குறைந்­த­பட்­சம் $1,000 செலுத்­து­வர். கலந்­து­கொள்­வோர் ஒரு நிகழ்ச்­சிக்குக் குறைந்­தது $100 செலுத்­து­வர். இவர்­கள் www.makanforhope.org என்ற முக­வ­ரி­யில் பதி­யலாம். https://www.giving.sg/campaigns/makanforhope 2021 என்ற முக­வரி மூலம் மக்­களும் நன்­கொடை வழங்­க­லாம்.

அதன் மூலம் திரட்­டப்­படும் தொகை 1,500க்கும் மேற்­பட்­ட­வர்­களுக்கு உத­வும். குறைந்த வரு­வாய்க் குடும்­பங்­க­ளைச் சேர்ந்த சிறப்பு உதவி தேவைப்­படும் பிள்­ளை­கள், முதி­ய­வர்­கள் ஆகி­யோர் இவர்களில் அடங்­கு­வர்.

இத­னி­டையே, இது­பற்றி கருத்து தெரி­வித்த லாப­நோக்­கற்ற ‘மக்­கான் ஃபார் ஹோப்’ அமைப்­பின் தலை­வர் திரு­வாட்டி எல்சி டான், சிறப்பு உத­வி­தேவைப்­ப­டக்­கூ­டிய பிள்­ளை­க­ளுக்­கும் குறைந்த வரு­வாய் குடு­ம்பங்­களைச் சேர்ந்த பிள்­ளை­க­ளுக்­கும் உதவி வரு­வ­தால் தாங்­கள் ஃபெய் இயூ சமூ­கச் சேவை­கள் அமைப்­புக்கு உதவ முடிவு செய்­த­தா­கக் கூறி­னார்.

மக்­கான் ஃபார் ஹோப் அமைப்பு இந்­த­ஆண்டு ஏப்­ர­லில்­செ­யல்­ப­டத் தொடங்­கி­யது. அது முதல் பல அமைப்­பு­க­ளுக்கு இது உதவி இருக்­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!