அண்டைவீட்டாரின் வழிபாட்டிற்கு இடையூறு: மாதிடம் காவல்துறை விசாரணை

அண்­டை­வீட்­டார் ஒரு­வ­ரின் வழி­பாட்­டிற்கு இடை­யூறு விளை­விக்­கும் வித­மாக மாது ஒரு­வர் பல­மாக ஓசை எழுப்­பிய சம்­ப­வம் குறித்து காவல்­துறை விசா­ரணை நடத்தி வரு­கிறது.

இது­கு­றித்து 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தித்­தா­ளின் கேள்­விக்­குப் பதி­ல­ளித்த காவல் துறை, தன்­னி­டம் புகார் அளிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் சம்பவம் தொடர்பாக 48 வயது மாது ஒரு­வர் விசா­ர­ணைக்கு உதவி வரு­வ­தா­க­வும் தெரி­வித்­தது.

இந்­தச் சம்­ப­வத்­தைக் காட்­டும் 19 வினாடி காணொளி ஒன்றை திரு லிவ­னேஷ் ராமு என்­ப­வர் புதன்கிழமை மாலை ஃபேஸ்புக்­கில் பதி­வேற்­றி­யி­ருந்­தார்.

தமது வீவக வீட்­டிற்கு வெளியே மணி­ய­டித்து அவர் வழி­பாட்­டில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்­த­போது பக்­கத்து வீட்­டி­லி­ருந்து வெளியே வந்த மாது ஒரு­வர், தரை­யி­லி­ருந்த குச்சி ஒன்றை எடுத்து தட்டு போன்ற பொருள் ஒன்­றின் மீது 15 வினா­டி­க­ளுக்கு வேக­மாக அடித்து ஓசை எழுப்­பி­னார்.

தமக்­குப் பின்­னால் நின்­று­கொண்­டி­ருந்த அந்த மாதின் செயலை திரு லிவ­னேஷ் கண்­டு­கொள்­ளா­மல் இருந்­தார்.

திரு லிவ­னேஷ் குனிந்­த­வு­டன் அவர் வழி­பாட்­டின்­போது ஒலித்த மணி­யோசை குறைந்­தது. அதன் பின்­ன­ரும் அந்த மாது தொடர்ந்து சில முறை ஓசை எழுப்­பி­விட்டு தமது வீட்­டிற்­குள் சென்று­ விட்­டார்.

இது­கு­றித்து திரு லிவ­னேஷ் தமது ஃபேஸ்புக் பதி­வில் கூறு­கை­யில், "வழி­பா­டு­களில் ஈடு­படும் பல­ரைப்­போல எங்­க­ளது குடும்­பத்­தில் வாரத்­திற்கு இரு­முறை, ஐந்து நிமி­டங்­கள் நீடிக்­கும் வழி­பாடு இது.

"இந்த வீட்­டில் 20 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக வசித்து வரும் நாங்­கள் இது­போன்ற விவ­கா­ரங்­க­ளைச் சந்­தித்­த­தில்லை. கொவிட்-19 சூழ­லில் ஒரு புதிய இயல்­பு­நிலை ஏற்­பட்­டுள்­ளது என நினைக்­கி­றேன்," என்­றார்.

"சிங்கப்பூர் போலிஸ் படை எங்களை அணுகியது. நாங்கள் அவர்களுடன் ஒத்துழைத்து வரு கிறோம். மேற்கொண்டு எதுவும் இருப்பின் விசாரணை முடிந்த பின் னர் தெரிவிக்கிறோம்.

"நாங்கள் வாக்குமூலம் கொடுத்து உள்ளோம். அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

"இவ்வேளை­யில், எங்­கள் அண்­டை­வீட்­டா­ரின் செயல்­கள் குறித்து நான் கருத்து கூற விரும்­ப­வில்லை.

"சகிப்­புத்­தன்­மை­யின்­மைக்கு எதி­ராக சக சிங்­கப்­பூ­ரர்­கள் ஒரு­மைப்­பாட்­டு­டன் இருப்­பது மன­

நி­றைவு தரு­கிறது. இந்த இக் கட்டான நேரத்தில் ஆதரவையும் அக்கறையையும் வழங்கிய அனை வருக்கும் நன்றி," என்­றார் திரு லிவ­னேஷ்.

வியாழக்கிழமை இரவு 7.10 நிலவரப்படி இந்தக் காணொளி தொடர்பாக 4,700க்கும் மேற்பட்டோர் கருத்து கூறியதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாள் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!