பரிசோதனை செய்ய புக்கிட் மேரா வியூவில் நீண்ட வரிசை

கொரோனா கிருமி பரி­சோ­த­னைக்­காக புக்­கிட் மேரா வியூ புளோக் 125Aல் அமைக்­கப்­பட்­டுள்ள தற்­கா­லிக பரி­சோ­த­னைக்­கூ­டம் நேற்று பொது­மக்­க­ளுக்­கா­கத் திறக்­கப்­பட்­ட­தும் குடி­யி­ருப்­பா­ளர்­கள் நீண்ட வரி­சை­யில் காத்து நின்­ற­னர்.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் அங்கு நேற்று காலை 10 மணிக்­குச் சென்­ற­போது, அங்கு இரு வரி­சை­கள் இருந்­தன. ஒன்­று முன்­கூட்­டியே பதிவு செய்­தோ­ருக்­கா­னது. மற்­றது பதிவு செய்­யா­த­வர்­களின் வரிசை. மிக நீண்டு இருந்­த அவ்வரிசையில் ஏறக்­கு­றைய 120 பேர், பெரும்­பா­லும் வய­தா­ன­வர்­கள் நின்­ற­னர். நேற்­றைக்­கான பதிவு எண்­ணிக்கை முடிந்­து­விட்­ட­தால், மீண்­டும் அடுத்த இரு­நாட்­களில் வரு­மாறு அவர்­களுக்­குக் கூறப்­பட்­ட­து.

காலை 10 மணிக்கு அங்கு வந்த திரு­வாட்டி சாந்தி நடே­சன், 58, குறைந்­தது ஒரு மணி நேரம் காத்­தி­ருப்­ப­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கூறி­னார். பரி­சோ­த­னைக்கு ராஃபிள்ஸ் மெடிக்­க­லில் பதிவு செய்­தி­ருந்ததாகக் கூறிய அவர், அதை ரத்­து­செய்து விட்டு புளோக் 125Aல் பரி­சோ­தனை செய்ய முடிவு செய்­த­தாகச் சொன்­னார்.

"நான் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோன் பெரே­ரா­வு­டன் பேசினேன், அவர், நான் அவ்­வ­ளவு தூரம் செல்ல வேண்­டி­ய­தில்லை, அருகி லேயே பரி­சோ­தனை செய்­து­கொள்­ ள­லாம் என்றார். ஆனால் இவ்­வ­ளவு நேரம் காத்­தி­ருக்க வேண்­டும் என்று நான் எதிர்­பார்க்­க­வில்லை," என்று முன்­னாள் பள்ளி நூல­க­ரான திரு­வாட்டி சாந்தி கூறி­னார்.

தற்­கா­லி­கக் கூடத்­துக்கு நேற்று சென்­றி­ருந்த தஞ்­சோங் பகார் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­வாட்டி ஜோன் பெரேரா, பரி­சோ­தனை செய்­து­கொள்ள இணை­யத்­தில் பதிவு செய்­வது எப்­படி என்று பல வய­தான குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­குத் தெரிந்­தி­ருக்­காது, அவர்­கள் தற்­கா­லிக பரி­சோ­த­னைக்­கூ­டத்­துக்கு நேர­டி­யா­கச் செல்­வார்­கள் என தாமும் சுகா­தார அமைச்­சும் எதிர்­பார்த்த­தா­கக் கூறி­னார்.

"எனவே, பாது­காப்­பான தூர இடை­வெ­ளியை உறு­தி­செய்ய பாது­காப்பு தூர இடை­வெளி தூதர்­களை அங்கு அமைச்சு பணி­யில் ஈடு­படுத்­தி­யது. மேலும் தொடக்க நேரத்­தில் கூட்­டத்தை குறைப்­ப­தற்­காக, தங்­கள் குடும்­பத்­தில் உள்ள முதி­ய­வர்­க­ளுக்கு இணை­யத்­தில் முன்­பதிவு செய்ய உத­வு­மாறு குடி­யி­ருப்­பா­ளர்­களை நான் கேட்­டுக்­கொண்­டேன்," என்­றார் அவர்.

புளோக் 115ல் உள்ள புக்­கிட் மேரா வியூ சந்தை மற்­றும் உண­வங்­காடி நிலை­யத்­தில் புதிய கொவிட்-19 கிரு­மித் தொற்­றுக் குழு­மம் உரு­வா­கி­யதைத் தொடர்ந்து, புளோக் 116ல் உள்ள கடைக்­கா­ரர்­கள் 85 பேருக்கு கட்­டாய கொவிட்-19 பரி­சோ­த­னையை மேற்­கொள்­வ­தற்­காக இந்த பரி­சோ­த­னைக்­கூ­டம் அமைக்­கப்­பட்­டது. அவர்­க­ளுக்­கான பரி­சோ­தனை நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது.

மே 25 முதல் ஜூன் 12 வரை­யில் 115 புக்­கிட் மேரா வியூ சந்தை, உண­வங்­காடி நிலை­யத்­துக்கோ அரு­கில் உள்ள புளோக் 116ல் உள்ள கடை­க­ளுக்கோ சென்ற குடி­யி­ருப்­பா­ளர்­களும் பொது­மக்­களும் இல­வ­ச­மா­கப் பரி­சோ­த­னை­க­ளைச் செய்­து­கொள்ள வச­தி­யாக நேற்று அக்­கூ­டம் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­குத் திறக்­கப்­பட்­டது.

அங்­குள்ள 182 கடை­களும் சுத்­தம் செய்­யும் பணி­க­ளுக்­காக ஞாயிற்­றுக்­கி­ழமை மூடப்­பட்டு நேற்று வரை­யில் பணி­கள் நடை­பெற்­றன. சந்­தை­யில் மே 25 முதல் பணி­யாற்றி வந்த ஊழி­யர்­கள் அனை­வ­ரும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளுக்கு கிரு­மி பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கும்.

நேற்று முன்தின நிலவரப்படி புக்கிட் மேரா வியூ சந்தை, உணவு அங்காடி கிருமித்தொற்று குழு மத்துடன் தொடர்புடைய 16 சம்ப வங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!