ஆறு மாதப் பயிற்சி முடியும் முன்னரே வேலை கிடைத்தது

இடைப்பருவ வாழ்க்கைத்தொழிலர்களுக்கு உதவும் மின்னிலக்கத் திறன்கள் திட்டம்

மின்­னி­லக்­கத் திறன்­களில் வேலை தேடிய இடைப்­ப­ருவ வாழ்க்­கைத்­தொ­ழி­லர்­க­ளுக்­கான ஆறு மாத முனைப்­புப் பயிற்­சித் திட்­டம் வெற்றி­க­ர­மாக அமைந்­தது. அந்தப் பயிற்சி பெற்ற 1,300 பேரில் ஏறத்­தாழ பத்து விழுக்­காட்­டி­னர்க்கு பயிற்சி முடி­வ­டை­யும் முன்­னரே வேலை கிடைத்­து­விட்­டது.

இவ்­வாண்டு இறு­திக்­குள் கிட்­டத்­தட்ட 1,500 பங்­கேற்­பா­ளர்­கள் பயிற்­சியை நிறை­வு­செய்­வர் என்று, அதனை நடத்தி வரும் போஸ்­டன் ஆலோ­ச­னைக் குழு­மம் (பிசிஜி) தெரி­வித்­தது.

எஸ்ஜி ஒற்­றுமை இயக்­கத்­தின் இடைப்­ப­ருவ வாழ்க்­கைத்­தொ­ழில் பாதை­கள் - நிறு­வன இணைப்­புத் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக இந்த விரைந்த, ஆழ்ந்த திறன் மேம்­பாட்­டுத் திட்­டம் (Rise) இடம்­பெ­று­கிறது.

பொரு­ளி­ய­லி­லும் வேலை­க­ளி­லும் கொவிட்-19 பர­வல் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யதை அடுத்து, அர­சாங்­கம் கடந்த ஆண்டு இத்­திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

பங்­கேற்­பா­ளர்­க­ளின் மின்­னி­லக்­கத் திறன்­களை மேம்­ப­டுத்தி, அதில் முன்­அ­னு­ப­வம் இல்­லா­த­போ­தும் அவர்­க­ளுக்கு அத்­து­றை­யில் வேலை பெற்­றுத் தர உத­வு­வதே 'ரைஸ்' திட்­டத்­தின் நோக்­கம்.

இதன்வழி, இன்­றியமையாத மின்­னி­லக்­கத் திறன்­களை­யும் செயற்கை நுண்­ண­றிவு போன்ற தொழில்­நுட்ப அடிப்­ப­டை­களை­யும் பங்­கேற்­பா­ளர்­கள் கற்­றுக்­கொள்­வர்.

பயிற்­சி­யா­ளர்­களில் பல­ரும் நிதி சேவை­கள் துறை­யில் இருந்து வந்துள்­ள­தாகக் கூறினார் பிசிஜி குழுமத்­தின் நிர்­வாக இயக்கு­நர் அபர்ணா பரத்­வாஜ்.

இணை­ய­வழி விற்­பனை, சந்­தைப்­ப­டுத்­தல், தரவு அறி­வி­யல், செயல்­பா­டு­கள் போன்ற துறை­களில் பல வேலை­கள் இருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

இத­னி­டையே, 'ரைஸ்' திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக, ஒரு கலப்­பு­முறை வேலைச் சந்­தைக்கு அக்­கு­ழு­மம் நேற்று ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. ஷாப்பி, ஜேபி மோர்­கன், யுஓபி உள்­ளிட்ட நிறு­வ­னங்­கள் உள்­ளிட்ட நிறு­வ­னங்­கள் கிட்­டத்­தட்ட 200 வேலை வாய்ப்­பு­களை வழங்­கின.

ராஃபிள்ஸ் பிளே­சில் அமைந்­துள்ள பிசிஜி அலு­வ­ல­கத்­திற்கு மூத்த அமைச்­சர் தர்­மன் சண்­மு­க­ரத்­னம் நேற்று வரு­கை­பு­ரிந்­தார். வேலைச் சந்­தை­யில் பங்­கேற்ற நிறு­வ­னங்­க­ளு­ட­னும் 'ரைஸ்' திட்­டப் பயிற்­சி­யா­ளர்­க­ளு­ட­னும் அவர் கலந்­து­ரை­யா­டி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!