ஜூரோங் மீன்பிடித் துறைமுகக் குழும நிலைமை மட்டுப்பட்டு வருகிறது

கடந்த மூன்று நாள்­க­ளாக ஜூரோங் மீன்­பி­டித் துறை­மு­கக் குழுமத்­து­டன் தொடர்­பி­ருந்த வகை­யில் நூற்­றுக்கு மேற்­பட்ட கொவிட்-19 தொற்று பாதிப்­பு­கள் பதி­வா­யின. ஆனா­லும். பாதிப்பு எண்­ணிக்கை குறைந்து வரு­வதால் நிலைமை மட்­டுப்­பட்டு வரு­கிறது என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­து இருக்கிறார்.

கொவிட்-19 தொற்­று­முன் தனி­மைப்­ப­டுத்­தப்­படும் விகி­தம் அதி­க­ரித்து இருப்­பது ஒரு நேர்­ம­றை­யான அறி­கு­றி­யா­கப் பார்க்­கப்­படு­கிறது. இம்­மா­தம் 19ஆம் தேதி, 163 பேர் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­போது, தொற்று கண்­ட­றி­யப்­ப­டு­முன் 27 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர். இப்­போது அவ்­வி­கி­தம் கிட்­டத்­தட்ட 40% என்ற அள­வில் இருப்­ப­தாக அமைச்­சர் ஓங் குறிப்­பிட்­டார்.

அக்­கு­ழு­மத்­தில் முதன்முதலில் இம்­மா­தம் 16ஆம் தேதி கிரு­மித்­தொற்று கண்­ட­றி­யப்­பட்­டதை­ அடுத்து, கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­க­வும் முழு­மை­யா­கத் தூய்­மைப் பணி­களை மேற்­கொள்­ள­வும் ஏது­வாக கடந்த 17ஆம் தேதி­யில் இருந்து 31ஆம் தேதி­வரை அதனை மூட உத்தரவிடப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!