காந்தி உணவகத்தின் நிர்வாகம் மாறினாலும் உணவின் சுவை மாறாது

இந்­திய சமூ­கத்­தின் பிர­ப­ல­மான உண­வ­கங்­களில் ஒன்­றாக கடந்த 50 ஆண்டு காலம் நியா­ய­மான விலை­யில் அறு­சுவை உணவு வழங்கு­வ­தற்குப் பெயர் பெற்­றது காந்தி உண­வ­கம். ஆகஸ்ட் 2 முதல் உண­வ­கத்­தின் நிர்­வா­கம் ‘கேஷு­வ­ரினா கறி’க்கு மாறுகிறது.

வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க காந்தி உண­வ­கம் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழக்­கம்­போல இயங்­கும் என்று நம்­பிக்­கை­ய­ளித்­தார் கேஷு­வ­ரினா கறி உண­வ­கத்­தின் உரி­மை­யா­ளர் திரு இளங்கோ சுப்­பி­ர­ம­ணி­யம்.

“நிர்­வா­கம் மட்­டும்­தான் மாற­ உள்­ளது. உண­வ­கத்­தின் பெயர், உண­வின் தரம், விலை ஆகி­யவை வழக்­கம்­போல இருக்­கும்,” என்று கூறி­னார் திரு இளங்கோ, 50.

சமூக ஊட­கங்­களில் காந்தி உண­வ­கத்­தின் நிர்­வாக மாற்­றம் குறித்து பல­ரும் கருத்து தெரி­வித்து வரும் நிலை­யில் இவ்­வாறு அவர் கூறி­னார். அடுத்த வாரம் திங்­கள் முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை சந்­தர் ரோட்­டில் அமைந்­துள்ள காந்தி உண­வ­கம் புதுப்­பிப்­புப் பணி­க­ளுக்கு மூடப்­படும். அதற்கு பின்­னர் வழக்­கம்­போல அது பொது­மக்­க­ளுக்­குத் திறக்­கப்­படும்.

காந்தி உண­வ­கத்­தின் பிர­ப­லத்­திற்கு அதன் முத­லா­ளி­யும் தலைமை சமை­யல்­கா­ர­ரு­மான திரு பக்­கி­ரி­சாமி சிதம்­ப­ரம் முத­லி­யார் மூல கார­ண­மா­வார்.

ஓய்­வு­பெற திட்­ட­மிட்­டுள்ள திரு பக்­கி­ரி­சாமி, தற்­போது உண­வ­கத்தை வேறொரு நிர்­வா­கத்­திற்கு விற்­றது சிறந்த முடிவு என்­றும் நிர்­வாக மாற்­றத்­திற்குப் பின்­ன­ரும் சிறிது காலம் கடை­யின் சமை­யலை வழி­ந­டத்­து­வார் என்­றும் உறு­தி­ அளித்­தார் 79 வய­தா­கும் திரு பக்­கி­ரி­சாமி.

“புதி­தாக எது­வும் செய்­யா­மல் பாரம்­ப­ரிய முறை­யில் சமைக்­கிறோம். வழக்­க­மான சாப்­பாடு என்­றா­லும் குறை இல்­லா­மல் சமைக்­கி­றோம். இத­னால்­தான் பல ஆண்டு­க­ளாக நிறைய பேர் திருப்­தி­யு­டன் வந்து செல்­கின்­ற­னர்,” என்­றார் திரு பக்­கி­ரி­சாமி. வய­தின் மூப்பு கார­ண­மாக கிட்­டத்­தட்ட 10 ஆண்­டு­க­ளாக மகன் திரு ராஜ்­மோ­க­ன் உத­வி­யில் உண­வ­கத்தை வழி­ந­டத்தி வரு­கி­றார் திரு பக்­கி­ரி­சாமி.

“அப்பா 80 வயதை எட்­ட­வுள்­ளார். 50 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக கடி­னப்­பட்டு உழைத்த அவர், இப்­போது ஓய்வு எடுக்­கும் காலம் வந்து­விட்­டது. தற்­போது உண­வ­கத்­தில் 12 ஊழி­யர்­கள் உள்­ள­னர். சமை­யல், உண­வக நிர்­வா­கத்­தில் மேலும் சிறிது காலத்­திற்கு வழி­காட்ட அவர் தொடர்ந்து இருப்­பார்,” என்­றார் திரு ராஜ்­மோ­கன், 42.

மூன்று தலை­மு­றை­க­ளாக காந்தி உண­வ­கத்­தின் உணவை விரும்பி நாடும் வாடிக்­கை­யா­ளர்­கள் கஃபூர் குடும்­பத்­தி­னர்.

“97 வய­தான என் தந்தை முதல் 20 வய­தான என் மகன் வரை அனை­வ­ரும் காந்தி உண­வ­கத்­தின் உணவை விரும்பி சாப்­பி­டு­கி­றோம். சைவ, அசைவ சாப்­பாடு இரண்­டுமே சிறப்­பாக இருக்­கும். புதிய நிர்­வா­கம் தொடர்ந்து இந்­தச் சுவையை நிலை­நாட்­டி­னால் நன்­றாக இருக்­கும்,” என்­றார் ‘புரோப்­நெக்ஸ்’ நிறு­வ­னத்­தில் பணி­யாற்­றும் திரு நிஸாம் கஃபூர், 54.

1993ஆம் ஆண்­டில் இந்­தி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு கட்­டு­மானத் துறை­யில் வேலை செய்ய வந்­த­போது திரு தச­ர­தன் பெரு­மாள் என்­ப­வர் நிதி நெருக்­க­டி­யில் இருந்­தார். அச்­ச­ம­யத்­தில் காந்தி உண­வ­கத்­தில் அவ­ருக்கு ஒரு வேளை சாப்­பாடு, ஒரு வெள்ளி விலை­யில் வழங்­கப்­பட்­டதை நினை­வு­கூர்ந்­தார் திரு தச­ர­தன்.

“காந்தி உண­வ­கம் வியா­பா­ரத்­திற்கு மட்­டு­மல்­லா­மல், தர்­மத்­திற்­கும் இயங்­கு­கிறது. இங்கு வந்த முதல் மாதத்­தில் ஒரு நாளுக்கு இரண்டு வெள்­ளி­தான் சாப்­பாட்­டுக்கு செல­வ­ழிக்க முடி­யும். குறைந்த விலை என்­றா­லும் வயிறு நிறை­யும் சாப்­பாட்டை வழங்­கி­னர். இன்­று­வரை அதைப் பற்றி என் குழந்­தை­க­ளி­டம் சொல்­வேன்,” என்­றார் தற்­போது சொத்து விற்­பனை முக­வ­ராக உள்ள தச­ர­தன்.

“அடிக்­கடி குடும்­பம், நண்­பர்­களை அழைத்­துச் செல்­லும் இட­மாக காந்தி உண­வ­கம் உள்­ளது. உணவு தரம் உட்­பட வாடிக்­கை­யா­ளர் சேவை­யும் அற்­பு­த­மாக இருக்­கும். எவ்­வ­ளவு சாப்­பிட்­டா­லும் விலை நியா­ய­மாக இருக்­கும். நிர்­வா­கம் மாறி­னா­லும் இந்த நற்­சேவை தொடர்ந்து இருக்க விரும்­பு­கிறேன்,” என்­றார் திரு பிரஸ்­டன் சாமு­வேல், 26.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!