தெம்பனிஸ் காப்பிக்கடையில் தீச்சம்பவம்; தப்பிய ஊழியர்கள்

தெம்பனிஸ் காப்பிக்கடையில் தீச்சம்பவம்; தப்பிய ஊழியர்கள்

1 mins read
62d9196f-138f-42c9-9c88-67dccce66cef
காப்பிக்கடையில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு அதிகாரிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தெம்­ப­னிஸ் வட்­டா­ரத்­தில் 15

உண­வுக்­க­டை­க­ளைக் கொண்ட காப்­பிக்­கடை ஒன்று நேற்று தீக்கு இரை­யா­னது.

தெம்­ப­னிஸ் ஸ்தி­ரீட் 81 புளோக் 823Aல் உள்ள அந்­தக் காப்­பிக்

கடை தீப்­பி­டித்­துக்­கொண்ட சில நிமி­டங்­க­ளி­லேயே முற்­றி­லும் அழிந்­தது.

காப்­பிக்­க­டை­யில் இருந்த மீன் சூப் கடை­யில் முத­லில் தீப்­பி­டித்­துக் கொண்­ட­தாக நம்­பப்­ப­டு­கிறது.

"மீன் சூப் கடை­யில் பணி

யாற்­றிக்­கொண்­டி­ருந்த ஊழி­யர்­கள் உட­ன­டி­யாக கடை­யை­விட்டு வெளியே ஓடி­னார்.

"நானும் என்­னு­டன் வேலை பார்க்­கும் மற்­றொ­ரு­வ­ரும் தீயை அணைக்க முயற்சி செய்­தோம்.

"ஆனால் தீயின்­மீது தண்­ணீர் பட்­ட­தும் அது கொழுந்­து­விட்டு எரி­யத் தொடங்­கி­யது. சிறிது நேரத்­தில் காப்­பிக்­கடை முழு­வ­தும் தீ பர­வி­யது. புகை வெளி­யே­றும் குழாய்க்­குத் தீ பர­வி­ய­தும் தப்பி ஓடு­மாறு அனை­வ­ரி­ட­மும் கத்­தி­னேன். நாங்­கள் தப்பி ஓடி­ய­போது எங்­க­ளுக்கு மேல் இருந்த புகை வெளி­யே­றும் குழாய்­கள் வெடித்­தன," என்று காப்­பிக்­க­டை­யில் இருந்த கடை ஒன்­றின் ஊழி­ய­ரான 50 வயது திரு டான் யோங் செங் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் தெரி­வித்­தார்.

சம்­ப­வத்­தில் யாருக்­கும் காயம் ஏற்­ப­ட­வில்லை என நம்­பப்­ப­டு­கிறது. தீச்­சம்­ப­வம் குறித்து விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது.