‘வெளிப்படையாக கலந்துறவாட பாதுகாப்பான தளங்கள் தேவை’

சிங்­கப்­பூ­ரில் வாழும் பெரும்­பான்மை­ யி­ன­ருக்­குச் சிறப்­புச் சலு­கை­கள் இருப்­பதை ஒப்­புக்­கொள்­வ­தும் சிறு­மைப்­பன்­மை­யி­னர் அதைப் பற்றி கருத்­து­கள் வெளிப்­ப­டுத்த பாது­காப்­பான தளங்­கள் இருப்­ப­தும் இன­நல்­லி­ணக்­கத்­திற்கு வழி­வ­குக்­கும் என்­று இன­வா­தம் குறித்த கருத்­த­ரங்கு ஒன்­றில் பங்­கேற்ற இளை­யர்­க­ள் தெரிவித்தனர்.

‘மாஜுலா கருத்­த­ரங்கு: இன வேறு­பாடின்றி’ (ஃபோரம் மாஜுலா: ரிகாட்­லர்ஸ் ஆஃப் ரேஸ்) எனும் அந்தக் கலந்­து­ரை­யா­டலை ‘தி பிசி­னஸ் டைம்ஸ்’ நாளி­த­ழின் ஆத­ர­வு­டன் சிங்­கப்­பூ­ரின் 56ஆம் தேசிய தினத்தை முன்­னிட்டு தமிழ் முர­சும் மலாய் நாளி­தழான பெரித்தா ஹரி­யா­னும் இணைந்து ஏற்­பாடு செய்­தன.

இன­வா­த­மும் நீக்­கு­போக்­கான இன­வா­த­மும்; பெரும்­பான்­மை­யி­ன­ருக்­குச் சிறப்புச் சலு­கை­கள்; இனங்­ க­ளுக்­கி­டை­யி­லான உற­வு­களை வலுப்­ப­டுத்­தும் வழி­மு­றை­கள் ஆகிய மூன்று கருப்­பொ­ருள்­களில் கருத் ­த­ரங்கு நடந்தது.

எந்தவொரு நாட்­டையோ அல்­லது சுற்­றுச்­சூ­ழல் கட்­ட­மைப்­பையோ எடுத்­துக்­கொண்­டா­லும் அதில், வெளிப்­ப­டை­யா­கத் தெரி­யாத சிறப்­புச் சலு­கை­கள் பெரும்­பான்­மை­யி­ன­ருக்கு இருக்­கவே செய்­யும் என்­றார் குமாரி மிரு­துளா குமார், 21.

“பெரும்­பான்­மை­யி­ன­ருக்­குச் சிறப்­புச் சலு­கை­கள் இருப்­ப­தில் தவ­றில்லை. ஆனால் அந்­தச் சலு­கை­களை உண­ரா­மலோ அல்­லது அதைத் தவ­றான முறை­யில் மற்­ற­வர்­க­ளைப் பாதிக்­கும் வகை­யிலோ தனது சுய­ந­ல­னுக்கு பயன்­ப­டுத்­தும்­போதே அது தவ­றா­கிறது,” என்­றார் நன்­யாங் தொழில்­நுட்பப் பல்­க­லைக்­க­ழ­கத் தமிழ் இலக்­கிய மன்­றத்­தின் தலை­வ­ராக அண்­மை­யில் பொறுப்­பேற்ற குமாரி மிரு­துளா.

பெரும்­பான்­மை­யி­ன­ரின் சிறப்­புச் சலு­கை­களும் சிறுப்­பான்­மை­யி­ன­ரின் மனப்­பான்­மை­களும் எந்­த­வொரு சமு­தா­யத்­தி­லும் வழக்­க­மாக கைகோர்க்­கும் என்­றார் மெண்­டாக்கி மன்­றத்­தின் தலை­வ­ரும் கருத்­த­ரங்­கின் மலாய் பேச்­சா­ள­ரு­மான குமாரி ஃபரிடா முகம்­மது சாட், 32.

“ஒரு குறிப்­பிட்ட இனத்­தின் அடை­யா­ள­மா­கவோ அல்­லது ஒரு குறிப்­பிட்ட பிரி­வி­ன­ரா­கவோ தங்­க­ளைத் தனித்து அடை­யா­ளப்­ப­டுத்­தா­மல் சமு­தா­யம், பொரு­ளா­தா­ரம், வேலை­யி­டம் என எல்லா இடத்­தி­லும் தங்­கள் மதிப்­பைக் கூட்­ட­வும் பங்­க­ளிக்­க­வும் சிறுப்­பான்­மை­யி­னர் விரும்­பு­வர் என்று நினைக்­கி­றேன்,” என்­றார் குமாரி ஃபரிடா.

விரை­வாக தக­வல்­க­ளைப் பெற வகை­செய்­யும் சமூக ஊட­கங்­களும் தற்­போது நிலவி வரும் கிரு­மித்­தொற்று சூழ­லும் இனம், இன­வா­தம் குறித்த விழிப்­பு­ணர்­வை­யும் உணர்ச்­சி­க­ளை­யும் அதி­க­ரித்­துள்­ளது என்­றார் கருத்­த­ரங்­கில் பேசிய திரு சோ வேஹவ், 36.

“எல்­லோ­ரும் அதிக மன­ உளைச்­ச­லுக்கு உட்­பட்­டுள்­ள­னர். இது­போல் என்­றும் நடந்­த­தில்லை. இது இன­வா­தப் பிரச்­சி­னை­களில் மட்­டு­மல்ல, உல­க­மெங்­கும் அதி­க­ரித்து வரும் மணமுறிவுகளிலும் பிர­தி­ப­லிக்­கிறது, “ என்­றார் அடித்­தள அமைப்பு ஒன்­றுக்கு தலை­வ­ராக இருக்­கும் திரு சோ.

சமூக ஊட­கங்­கள் இன­வா­தம் குறித்த கருத்­து­க­ளைப் பகிர தளங்­களை வழங்­கி­னா­லும் அது பெரும்­பான்­மை­யி­ன­ருக்­கும் சிறு­பான்­மை­யி­ன­ருக்­கும் இடையே புரிந்­து­ணர்வை வலுப்­ப­டுத்­தும் வகை­யில் இருக்­க­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார் மிரு­துளா.

“வெவ்­வேறு பிரி­வி­னர்­க­ளி­டையே நாக­ரி­க­மான கலந்­து­ரை­யா­டல்­க­ளை­யும் தொடர்­பு­க­ளை­யும் ஊக்­கப்­ப­டுத்தி அதி­க­ரிக்க ­வேண்­டும். அடிப்­ப­டை­யில் இது சிறுப்­பான்­மை­யி­ன­ருக்­கும் பெரும்­பான்­மை­யி­ருக்­கும் இடை­யி­லான பிரச்­சினை இல்லை. ஒருவருடன் ஒருவர் போட்டி போடுவதல்ல. ஆனால் ஒரு­வ­ருக்கு ஒரு­வர் எப்­படி ஆத­ரவு ­அளிக்­கி­றோம், எப்­படி புரிந்­து­கொள்­கி­றோம் என்­ப­தைப் பற்­றி­ய­தாக இருக்­க­வேண்­டும். மேலும் பல வெளிப்­ப­டை­யான கலந்­து­ரை­ யாடல்­க­ளுக்கு இது வழி­வ­குக்­கும்,” என்­றார் குமாரி மிரு­துளா.

கருத்­த­ரங்­கில் பங்­கேற்­காத வேறு இந்­திய, சீன, மலாய் சமூ­கங்­க­ளைச் சேர்ந்த அறு­வ­ரின் கருத்­து­களும் உரை­யா­ட­லில் பகி­ரப்­பட்­டன.

நிதி ஆலோ­ச­கர்­க­ளாகப் பணி ­பு­ரி­யும் 34 வயது திரு­மதி ஹபிடா ஷா, 31 வயது திரு அனி‌ஷ் மயூ­ரன் ஆகி­யோர் இந்­திய சமூ­கத்­தைப் பிர­தி­நி­தித்­த­னர்.

இந்தக் காணொ­ளி­கள் கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்கு வழி­காட்­டி­யா­க­வும் அமைந்­தன.

46 நிமிட கருத்­த­ரங்கை தமிழ் முரசு செய்­தி­யா­ளர் திரு இர்­ஷாத் முஹம்­மது, பெரித்தா ஹரி­யான் செய்தியாளர் ‌‌‌திரு­வாட்டி ஷாஹிதா சர்­ஹீத் ஆகி­யோர் வழி ­ந­டத்­தி­னர். ஆகஸ்ட் 5ஆம் தேதி பதிவு செய்­யப்­பட்ட இக்­க­ருத்­த­ரங்கு, நேற்று மாலை இணை­யத்­தில் வெளி­யி­டப்­பட்­டது.

“சிங்­கப்­பூ­ரில் பிர­தா­ன­மான இரு சிறு­பான்மை இனங்­க­ளைப் பிர­தி­நி­திக்­கும் இரண்டு நாளி­தழ்­கள் இணைந்து இந்தக் கருத்­த­ரங்கை ஏற்­பாடு செய்­தது பொருத்­த­மாக இருந்தது. இந்தப் பிரச்­சி­னை­களை நாம் முறை­யாகச் சமா­ளிக்­க­ வேண்­டும். ஒன்­று­பட்ட சமு­தா­யத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு சிங்­கப்­பூர் உருவாக்கப்பட்டுள்ளது. அதை நாம் அலட்­சி­ய­மாக எடுத்­துக்­கொள்­ளக்­கூ­டாது. இப்­பி­ரச்­சி­னை­களை ஒதுக்­க­வும் கூடாது,” என்­றார் தமிழ் முர­சின் செய்தி ஆசி­ரி­ய­ரும் மின்­ன­லக்க ஆசி­ரி­ய­ரு­மான திரு தமி­ழ­வேல்.

“தனிப்­பட்ட அம்­சங்­க­ளை­விட பெரி­தா­னது நம் தேசம் என்­பதை எல்­லோ­ரும் ஒத்­துக்­கொள்­ள­லாம். ஒரு­வ­ருக்கு ஒரு­வர் புரிந்துணர்வை அதி­க­ரிக்­க­வும் சமு­தா­யப் பிணைப்பை வலுப்­ப­டுத்­த­வும் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான உற­வு­ க­ளைப் பற்­றிய கலந்­து­ரை­யா­டல்­களை, எவ்­வ­ளவு கடி­ன­மாக இருந்­தா­லும், தொடர்­வது முக்­கி­யம்,” என்­றார் பெரித்தா ஹரி­யான் ஆசி­ரி­ய­ருக்கு உத­வி­யா­ள­ரான திரு நஸ்ரி ஹாடி சப்­பா­ரின்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!