கொவிட்-19 விதிமீறிய கடல்துறை நிறுவனங்களின் உரிமம் பறிப்பு

52 தனிநபர், நிறுவனங்களுக்கு $300 முதல் $3,000 வரை அபராதம்

கொவிட்-19 நிர்­வாக நடை­முறை விதி­களை மீறி­ய­தற்­காக கடல்­

து­றை­யைச் சேர்ந்த ஏழு நிறு­வ­னங்­கள் மீதும் 47 தனிப்­பட்­ட­வர்­கள் மீதும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு உள்­ளது.

இந்த எண்­ணிக்­கை­யில் 52 நிறு­வ­னம் மற்­றும் தனிப்­பட்­ட­வர்­க­ளுக்கு $300 முதல் $3,000 வரை­யி­லான அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­ட­தோடு இரு நிறு­வ­னங்­க­ளின் உரி­மம் தற்­கா­லி­க­மாக ரத்து செய்­யப்­பட்­ட­தாக சிங்­கப்­பூர் கடல்­துறை துறை­முக ஆணை­யம் நேற்று கூறி­யது.

இவர்­கள் அனை­வ­ரும் கடந்த ஆண்டு நவம்­பர் முதல் இவ்­வாண்டு ஜூன் வரை­யில் விதி­களை மீறி­யது கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக ஆணை­யத்­தின் அறிக்கை குறிப்­பிட்­டது.

உல்­லா­சக் கப்­பல்­கள், துறை­

மு­கத்­தில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த கப்­பல்­கள் மற்­றும் கடற்­ப­ய­ணத்­தில் ஈடு­பட்­டி­ருந்த கப்­பல்­கள் போன்­ற­வற்­றில் விதி­மீ­றல் நடந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சமூக ஒன்­று­கூ­டல்­க­ளுக்கு அனு­ம­திக்­கப்­பட்ட அதி­க­பட்ச எண்­ணிக்­கை­யைக் காட்­டி­லும் அதி­க­மா­னோர் உல்­லா­சக் கப்­பல்­களில் ஏற்­ற­ப்பட்­டி­ருந்­தது தெரிய வந்­த­தாக ஆணை­யம் கூறி­யது.

மேலும், கட­லோ­ரக் கப்­பல்­துறை பணி­யா­ளர்­கள் பொருத்­த­மான தனி­ந­பர் பாது­காப்­புச் சாத­னங்­களை அணிந்­தி­ருக்­க­வில்லை என்­ப­தும் கண்­ட­றி­யப்­பட்­டது.

மற்­றொரு சம்­ப­வத்­தில், கப்­ப­லில் பணி­யாற்­றும் நீண்­ட­கால அனு­மதி அட்­டை­தா­ரர் ஒரு­வர் ஆணை­யத்­தின் அனு­ம­தி­யின்றி கட­லோ­ரத்­திற்கு வந்­த­தன் மூலம் விதி­களை மீறி­னார்.

இவை தவிர, வீதி­மீ­றல் கண்­ட­றி­யப்­பட்ட மேலும் பல சம்­ப­வங்­கள் குறித்து விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­வ­தாக ஆணை­யத்­தின் அறிக்கை குறிப்­பிட்­டது.

கொவிட்-19 (தற்­கா­லிக நட­வ­டிக்­கை­கள்) சட்­டம் 2020ன் கீழ் பாது­காப்பு இடை­வெளி நடை­முறை விதி­களை மீறு­வோ­ருக்கு ஆறு மாதம் வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யும் $10,000 வரை­யி­லான அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.

மறு­ப­டி­யும் விதி­மீ­றல்­களில் ஈடு­ப­டு­வோ­ருக்­கான அப­ரா­தம் $20,000 வரை­யும் சிறைத் தண்­டனை 12 மாதம் வரை­யும் அதி­க­ரிக்­கப்­படும். விதி­மீ­றல் சம்­ப­வம் நடை­பெற்ற கப்­ப­லின் உரி­மம் 30 நாட்­கள் வரை­யில் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­கப்­படும். கடல்­துறை துறை­முக ஆணை­யம் இந்த நட­வ­டிக்­கையை மேற்­கொள்­ளும்.

கடல்­து­றை­யைச் சேர்ந்த நிறு வனங்­களும் ஊழி­யர்­களும் கொவிட்-19 தொடர்­பான விதி­மு­றை­க­ளைக் கடு­மை­யா­கப் பின்­பற்ற வேண்­டும் என­வும் விதி­களை மீறு­வோர் மீது நட­வ­டிக்கை எடுக்­கத் தயங்­கப் போவ­தில்லை என­வும் ஆணை­யம் தனது அறிக்­கை­யில் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!