செலவுமிக்க ஆசிய கட்டுமானம்: சிங்கப்பூருக்கு 4வது இடம்

சிங்­கப்­பூர் செல­வு­மிக்க ஆசிய கட்­டுமா­னச் சந்­தை­யில் நான்­கா­வது இடத்­தில் இருப்­ப­தாக ஆய்வு ஒன்று தெரி­வித்துள்­ளது. திறன் படைத்த ஊரி­யர்­க­ளுக்­கான பற்­றாக்­கு­றை­யும் கட்­டு­மா­னப் பொருட்­க­ளின் விலை கூடி­ய­தும் சிங்­கப்­பூ­ரின் இந்த நிலைக்­குக் கார­ணம் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

'டர்­னர் அண்ட் டவுன்­சென்ட் நிறு­வ­னத்­தின் அனைத்­து­ல­கக் கட்­டு­மானச் சந்தை ஆய்வு 2021' இவ்­வி­வ­ரங்­க­ளைக் குறிப்­பிட்­டது.

இதன் கார­ண­மாக இவ்­வாண்­டின் எஞ்­சி­யுள்ள காலம் முழு­வ­தும் கட்­டு­மா­னத் துறை ஏலக்­குத்­தகை விலை­கள் ஏற்ற இறக்­க­மா­கத் தொட­ரும் என்று எதிர்­பார்க்­கப்

­ப­டு­வ­தாக அறிக்கை குறிப்­பிட்­டது.

ஏலக்­குத்­தகை விலை­கள் 6 விழுக்­காடு முதல் 10 விழுக்­காடு வரை­யில் இருக்­கக்­கூ­டும் என இதற்கு முன்­னர் முன்­னு­ரைக்­கப்­பட்­ட­தைக் காட்­டி­லும் அதி­க­மாகி 10 விழுக்­காடு முதல் 15 விழுக்­காடு வரை­யில் செல்­லலாம் என இப்­போது மதிப்­பி­டப்­ப­டு­கிறது.

இவ்­வாண்­டின் கட்­டு­மா­னத் துறை 5 விழுக்­காடு என்­னும் சிறிய அள­வி­லான வளர்ச்­சியை எட்­டி­யது.

கடந்த ஆண்­டின் நான்கு காலாண்­டு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்த வளர்ச்சி தெரிய வந்­துள்­ளது.

கொவிட்-19 சூழல் கார­ண­மாக முடக்கிவைக்­கப்­பட்­டி­ருந்த பெரும்­பா­லான கட்­டு­மான நட­வ­டிக்­கை­கள் மீண்­ட­தைத் தொடர்ந்து இவ்­வாண்டு வளர்ச்சி சாத்­தி­ய­மா­ன­தாக ஆய்வை மேற்­கொண்ட சொத்­துச் சந்தை ஆலோ­சனை நிறு­வ­னம் கூறி­யது.

மேலும், இவ்­வாண்டு ஏப்­ரல் மே மாதங்­களில் தெற்­கா­சிய வெளி­நாட்­டுத் தொழி­லா­ளர்­க­ளுக்கு எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டது கட்­டு­மான நட­வ­டிக்­கை­க­ளின் வேகத்­தைத் தணித்­துள்­ளது.

வரும் காலாண்­டு­க­ளி­லும் இத்­து­றை­யின் வளர்ச்­சி­யில் இது பாதிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும் என்­றது இந்­நி­று­வ­னம்.

திறன்­ப­டைத்த ஊழி­யர்­கள் போது­மான அள­வில் கிடைக்­கா­த­தன் கார­ண­மாக ஊழி­யர்­க­ளுக்­கான செல­வுகள் கூடின. குறிப்­பாக, இயந்­தி­ரம் மற்­றும் மின்­சா­ரம் தொடர்­பான பணி­களில் இந்த செலவு அதி­க­ரிப்பு காணப்­பட்­டது.

கட்­டு­மா­னத்­திற்­கான பொருட்­கள் சிங்­கப்­பூ­ரில் உயர்ந்­து­விட்­டன. கடந்த ஆண்டு டிசம்­பர் மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் இவ்­வாண்டு ஜூன் மாதம் உலோ­கக் கம்­பி­

க­ளின் விலை­யில் 36.2 விழுக்­கா­டும் சிமெண்ட் விலை­யில் 6 விழுக்­கா­டும் உயர்ந்­தி­ருந்­தன.

உலக விநி­யோ­கத் தொட­ரில் ஏற்­பட்ட இடை­யூ­று­கள், அதி­க­ரித்த தேவை­கள், கட்­டு­மா­னப் பொருட்­

க­ளைப் பெறு­வ­தில் போட்டி போன்­ றவை உல­கச் சந்­தை­யில் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­ய­தைத் தொடர்ந்து சிங்­கப்­பூ­ரில் அதன் தாக்­கம் விலை ஏற்­றத்­திற்­குக் கார­ண­மாக அமைந்­து­விட்­டது.

இவ்­வாண்­டின் முதல் காலாண்­டில் ஏறக்­கு­றைய $5.7 பில்­லி­யன் மதிப்­புள்ள கட்­டு­மா­னக் குத்­த­கை­கள் வழங்­கப்­பட்­ட­தாக சொத்­துச் சந்தை ஆலோ­சனை நிறு­வ­னத்­தின் சிங்­கப்­பூர் சந்தை நில­வர அறிக்கை குறிப்­பிட்­டது. இது இதற்கு முந்­திய காலாண்­டைக் காட்­டி­லும் 0.1 விழுக்­காடு குறைவு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!