உணவுக்கடைகளின் சுத்தம் குறித்து அதிக பேர் அதிருப்தி

உண­வுக்­க­டை­க­ளின் சுத்­தம் குறித்து மக்­க­ளி­டையே திருப்தி குறைந்து வந்­தா­லும் வாடிக்­கை­யா­ளர்­கள் பலர் தங்­கள் பங்கை ஆற்­று­வ­தில்லை.

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக் கழ­கம் நடத்­திய கருத்­தாய்­வில் காப்­பிக் கடை­களில் உணவு உண்­ட­பின், தட்­டு­களை உரிய இடத்­தில் வைப்­போ­ரின் எண்­ணிக்கை பாதிக்­கும் குறைவே எனக் காட்­டு­கிறது.

இந்த அதிர்ப்­திக்­குக் கார­ணம் நோய் தொற்­றால் சுத்­தம் செய்­வ­தின் முக்­கி­யத்­து­வம் குறித்து மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள விழிப்­பு­ணர்வே என்று சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக் கழ­கம் கூறி­யுள்­ளது.

நோய் தொற்­றி­னால் பொது சுகா­தா­ரத்­திற்கு அதிக முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­ப­டு­கிறது என பேரா­சி­ரி­யர் போலீன் டே ஸ்ட்­ரௌன் கூறி­னார். அவர் முனை­வர் மேத்­தியூ மேத்­தி­யூ­சு­டன் இக்­கா­ருத்­தாய்வை மேற்­கொண்­டார்.

2,000 சிங்­கப்­பூர்­க­ளுக்­கும் நிரந்­த­ர­வா­சி­க­ளுக்­கு­மி­டையே நடத்­தப்­பட்ட இக்­க­ருத்­தாய்­வில் உண­வங்­காடி நிலை­யங்­கள், குளி­ரூட்டி வச­தி­யுள்ள உணவு நிலை­யங்­கள் மற்­றும் ஈரச் சந்­தை­க­ளின் சுத்­தம் குறித்த திருப்தி 2019உடன் ஒப்­பி­டு­கை­யில் 3.7% குறைந்­துள்­ள­தைக் காட்­டி­யது.

அநே­கர் உண­வங்­காடி நிலை­யங்­கள் ஈரச்­சந்­தை­கள் குறித்து அதி­ருப்தி அடைந்­துள்­ள­னர்.

காப்­பிக் கடை­யில் உண­வ­ருந்­த­வோ­ரில் 46 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே தங்­க­ளது தட்­டு­களை உரிய இடத்­தில் எடுத்து வைக்க வாய்ப்­புள்­ளது என்­றும் கருத்­தாய்வு காட்­டி­யது. துப்­பு­ர­வா­ளர்­கள் தட்­டு­க­ளைத் தங்­க­ளி­ட­மி­ருந்து எடுத்­துச் சென்­று­வி­டு­வதே இதற்­குக் கார­ணம்.

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக் கழ­கம் முதன்­மு­றை­யாக இவ்­வாண்டு பொதுக் கழி­வ­றை­க­ளின் சுத்­தம் குறித்­தக் கருத்­தாய்­வை­யும் நடத்­தி­யது.

சிங்­கப்­பூர்­களில் 81.6 விழுக்­காட்­டி­னர் திருப்தி அடைந்­துள்­ளதை அது காட்­டி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!