கமலா ஹாரிஸ் வருகை நல்லுறவுக்கு நல்ல வாய்ப்பு

அமெரிக்க துணை அதிபர் சிங்கப்பூர் வருவது பற்றி வெளியுறவு அமைச்சர் கருத்து

அமெ­ரிக்க துணை அதி­பர் கமலா ஹாரி­ஸ் சிங்­கப்­பூர் வரு­கி­றார். அந்த வருகை அவ­ருக்­கும் சிங்­கப்­பூர் பிர­த­மர் லீ சியன் லூங்­கிற்­கும் இடை­யில் நல்­லு­றவை பலப்­ப­டுத்­திக்­கொள்ள கிடைக்­கும் மிக நல்ல வாய்ப்­பாக இருக்­கும் என்று வெளி­யு­றவு அமைச்­சர் டாக்­டர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

அமெ­ரிக்க துணை அதி­பர் முத­லில் சிங்­கப்­பூ­ருக்கு வருகை அளிப்பது மிக­வும் மகிழ்ச்சி அளிப்­ப­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­துக்கு அளித்த பேட்­டி­யில் டாக்­டர் விவி­யன் கூறி­னார்.

திரு­வாட்டி கமலா ஹாரி­ஸின் வருகை அவ­ரு­டைய சொந்த ராஜ­தந்­திர வியூ­கத்­தில் ஆசி­யா­வின் முக்­கி­யத்­து­வத்தை எடுத்­துக்­காட்டு­ வ­தா­க­வும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

திரு­வாட்டி கமலா ஹாரிஸ் சிங்­கப்­பூ­ரில் இருக்­கை­யில், கொவிட்-19 தொற்­றில் இருந்து மீண்டுவர ஒத்­து­ழைப்­ப­தன் தொடர்­பில் முன்­னேற்­றத்­தைச் சாதிக்­க­லாம் என தாங்கள் நம்­பு­வதாக அ­மைச்­சர் கூறினார்.­

அதோடு மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல், பசுமை பொரு­ளி­யல், இணை­யப் பாது­காப்பு ஆகி­ய­வற்­றி­லும் ஒத்­து­ழைப்­ப­தில் முன்­னேற்­றம் காணலாம் என்று டாக்­டர் விவி­யன் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

அணுக்­க­மா­கச் சேர்ந்து செயல்­படக்­கூ­டிய ஏரா­ள­மான புதிய துறை­கள் இருப்­ப­தா­க­வும் அவர் கருத்து தெரிவித்தார்.

அமெ­ரிக்க துணை அதி­ப­ரின் இந்­தப் பய­ணம் ஆசி­யா­வுக்­கான அவ­ரின் மிக நல்ல அறி­மு­கப் பய­ண­மாக அமை­யும் என்று டாக்­டர் விவி­யன் கூறி­னார்.

திருவாட்டி ஹாரிஸ் மூன்று நாள் வருகை மேற்­கொண்டு இன்று சிங்­கப்­பூர் வரு­கி­றார்.

அவ­ரு­டன் துணை அதி­பர் அலு­வ­ல­கம், தேசிய பாது­காப்பு, அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சின் மூத்த அதி­கா­ரி­களும் வரு­கி­றார்­கள்.

சிங்­கப்­பூர் அதி­பரை சந்திக்கும் திருவாட்டி ஹாரிஸ் பிறகு பிர­த­மரு­டன் பேச்சு நடத்­து­வார்.

பிர­த­மர் லீயும் அமெ­ரிக்க துணை அதி­ப­ரும் கொவிட்-19 உள்­ளிட்ட பல்­வேறு அம்­சங்­கள் குறித்து விவா­திப்­பார்­கள்.

சிங்­கப்­பூ­ரில் ஒரு ஆர்க்­கிட் மல­ருக்கு திரு­மதி கமலா ஹாரி­ஸின் பெயர் சூட்­டப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. இந்­தப் பய­ணம் அமெ­ரிக்க துணை அதி­பர் ஆசி­யா­வுக்கு மேற்­கொள்­ளும் முத­லா­வது பய­ண­மா­கும்.

டாக்­டர் விவி­யன் ராய்ட்­டர்ஸ் நிறு­வ­னத்­துக்கு அளித்த பேட்­டி­யில் மியன்­மார் பற்­றி­யும் கருத்­துரைத்­தார். மியன்­மா­ரில் ஆசி­யான் அமைப்பு ஏற்­ப­டுத்தி இருக்­கும் முன்­னேற்­றம், நம்­பிய அள­விற்கு ஆற்­ற­லு­டன் இல்லை என்­றும் அவர் குறிப்­பிட்­டார். இருந்­தா­லும் இது ஒரு சிர­ம­மான சூழ்­நிலை என்று அமைச்­சர் கூறி­னார்.

மியன்­மா­ரின் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணும் நோக்­கத்­தில் ஐந்து அம்ச கருத்து இணக்­கத்தை கடந்த ஏப்­ர­லில் ஆசி­யான் அறி­வித்­தது.

அந்த முயற்­சி­க­ளின் ஒரு பகு­தி­யாக புரு­ணை­யின் இரண்­டா­வது வெளி­யு­றவு அமைச்­சரை மியன்­மா­ருக்­கான சிறப்பு தூத­ராக ஆசி­யான் அண்­மை­யில் நிய­மித்­தது.

ஆசி­யான் தலை­வர்­க­ளின் உச்­ச­நிலை மாநாடு நவம்­ப­ரில் நடக்­கிறது. அதற்கு முன்­ன­தாக அந்­தத் தூத­ரின் மியன்­மார் பய­ணம் மூலம் முன்­னேற்­றம் இருக்­கும் என்று தான் நம்­பு­வ­தாக அமைச்­சர் டாக்டர் விவியன் குறிப்­பிட்­டார்.

இருந்­தா­லும் அவ­ருக்கு மியன்­மார் ராணு­வம் முழு அனு­மதி வழங்க வேண்­டி­யது இதில் முக்­கி­ய­மா­னது என்­றார் அவர்.

கொவிட்-19 தொடர்­பான கேள்­விக்­குப் பதி­ல­ளித்த அமைச்­சர், முகக்­க­வ­சம் அணி­வது நிரந்­த­ர­மான அம்­ச­மாக வேண்­டும் என்று தான் கரு­து­வ­தா­கத் தெரி­வித்­தார்.

டிரேஸ்­டு­கெ­தர் பற்றி கருத்­து­ரைத்த டாக்­டர் விவி­யன், அர­சாங்­கத்­திற்­கும் மக்­க­ளுக்­கும் இடையில் நிலவும் நம்­பிக்கை சிங்­கப்­பூ­ருக்கு உள்ள ஓர் அனு­கூ­லம் என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!