‘ஆட்டிசம்’ உள்ள சிறாருக்கு ஆதரவுச் செயலி

தொடர்புத்திறன், பேச்சாற்றல், செயலாற்றல் போன்றவற்றில் சிரமத்தை ஒருவர் எதிர்நோக்கும் ஒருவகை குறைபாடு, ‘ஆட்டிசம்’. இக்குறைபாடுடைய சிறார்கள், மற்றவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதில் சவாலை எதிர்நோக்குவார்கள். இளம் பருவத்தில் இக்குறைபாடு ஏற்படும்போது அது முதுமை காலம் வரை தொடரவும் வாய்ப்புள்ளது.

சிறு வயதில் குறிப்பிட்ட சில வார்த்தைகளையும் செய்கைகளையும் மட்டுமே அறிந்திருப்பதால் இக்குறைபாடு உள்ளவர்களால் தங்களின் எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்துவது கடினமாகிறது.

இத்தகைய பிரிவினருக்கு உதவும் வகையில் ‘ஏபிலிப்ஃபை’ (ABL-ify) என்ற செயலி அமைந்துள்ளது.

இதை நண்பர்களாகிய 32 வயது திரு வினோத் குமார், 33 வயது அ. சித்தார்த்தன் உருவாக்கினார்கள். வினோத், சித்தார்த்தன் இருவரும் முழுநேர தேசிய சேவை புரிந்த காலத்தில் நண்பர்களாகினர்.

‘ஆட்டிசம்’ இருக்கும் காரணத்தால் ஒருவரால் சரியாகப் பேச முடியவில்லை என்றாலும் பிறருடன் தொடர்புகொள்வதில் திறமை இல்லை என்று சொல்லிவிட முடியாது என்றார் வினோத். இவர் கனடாவின் தென் ஆசிய ஆட்டிசம் விழிப்புணர்வு நிலையத்தில் கிட்டத்தட்ட மூன்றாண்டுகளாகப் பணியாற்றியுள்ளார். ஆசிய நாட்டினர் பலருக்கு நிலையத்தில் ஆட்டிசம் தொடர்பான தகவல்களை வழங்கும் நிர்வாகியாகப் பணியாற்றினார்.

“செயலி மூலம் எளிதாகத் தொடர்புகொள்ளும் தன்மை வரும்போது தேவையில்லாத சோகமும் கோபமும் குழந்தைக்கு வராது. உதாரணத்திற்கு, இணைய வசதி தேவைப்படும் நேரத்தில் அது இயங்காதபோது இயல்பாக அனைவருக்கும் கோபம் வரும். ஆட்டிசம் உள்ள ஒரு குழந்தை அந்தப் பிரச்சினையைச் சொல்ல முடியாத நிலையில், கோபத்தில் பொருட்களைத் தூக்கி எறியலாம், சுவரில் குத்தலாம். கோபம் அதிகரித்துவிடுகிறது. ஆனால் செயலி மூலம் தன் எண்ணத்தை வெளிப்படுத்த முடிந்தால் இத்தகைய உணர்ச்சிகளை நிதானமாகக் கையாளலாம்,” என்றார் வினோத்.

‘ஆப்பிள்’ செயலி விற்பனைத் தளத்தில் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளிவந்த இந்தச் செயலி, $99.99 விலையில் கிடைக்கிறது. தற்போது ஆங்கிலத்தில் மட்டும் வழங்கப்படும் இச்செயலியை தமிழ், மலாய், சீன மொழிகளிலும் தயாரிக்கத் திட்டம் உள்ளதாகவும் அதற்கான நிதி ஆதரவைத் தேடி வருவதாகவும் கூறினார் வினோத்.

இதுபோன்ற பிற செயலிகள் குறைந்தபட்சம் $300 விலையில் கிடைக்கின்றன என்றும் பெரும்பாலான செயலிகள் மேற்கத்திய நாடுகளுக்காக உருவாக்கப்பட்டவை என்றும் குறிப்பிட்டார் அவர்.

“எனக்கு எப்போதுமே இந்தத் தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் உள்ளது. 2017ஆம் ஆண்டில் நான் சித்தார்த்தை மீண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் சந்தித்தபோது, ஆசிரியர்களுக்கான ஒரு செயலியை உருவாக்க நாங்கள் இருவரும் முடிவெடுத்தோம்.

“கடந்த ஆண்டு கிருமித்தொற்று சூழல் உருவாகியதால் வீட்டிலிருந்தவாறே குழந்தைகளுக்கு உதவ வசதிகள் தேவைப்பட்டன. இச்சூழலில் இதுபோன்ற செயலிகள் மேலும் முக்கியத்துவம் பெற்றுவிட்டன,” என்றார் வினோத்.

பேச்சு நோயியல் நிபுணர் என்டி போன்டி உருவாக்கிய ‘பிஇசிஎஸ்’ என்ற படம் பரிமாற்றத் தொடர்பு செயல்முறை உத்தியை மின்னிலக்க வடிவில் இச்செயலி வழங்குகிறது. வார்த்தைகளுக்கு இணையான படங்களைச் சிறார்கள் தேர்ந்தெடுக்கும்போது ஒரு வாக்கியம் உருவாகிறது. பின்னர் அச்செயலி மூலம் உருவாக்கப்பட்ட வாக்கியம் ஒலி வடிவமாக வாசிக்கப்படும்.

“இச்செயலியைத் தயாரிப்பது கடினமான வேலை அல்ல. ஆனால் ‘ஆட்டிசம்’ உள்ளவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்வது சிரமமாக இருந்தது. இதற்குமுன் உருவாக்கப்பட்ட செயலிகளை வினோத் காட்டியபோதுதான் எனக்கு இது தொடர்பான புரிந்துணர்வு ஏற்பட்டது. இந்தச் செயலி பயன்மிக்கதாக உள்ளது என்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது,” என்றார் சித்தார்த்தன்.

ஏபிலிப்ஃபை குறித்த மேல் விவரங்களுக்கு https://www.ablify.asia/ என்ற இணையத்தளத்தை நாடலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!