தொற்றுக்கு ஆளான பேருந்து ஓட்டுநர்கள் 10%க்கும் குறைவு

பேருந்துச் சந்­திப்பு நிலை­யங்­களில் பணியாற்றும் 9,500 பேருந்து ஓட்டுநர்களில் கொவிட்-19 தொற்று கார­ண­மாக பாதிக்­கப்­பட்டு உள்ள வர்களின் விகி­தம் 10%க்கும் கொஞ்­சம் குறைவு என்று போக்கு­வரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன் நேற்று தெரி­வித்­தார்.

இருந்­தா­லும் அத­னால் பேருந்துச் சேவை­கள் பெரி­தாக பாதிக்­கப்­ப­ட­வில்லை என்­றார் அவர்.

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணைய மும் பேருந்­துச் சேவை நிறு­வ­னங்­களும் நட­வ­டிக்­கை­களைச் சீர­மைத்து வளங்­களைத் தேவைக்­கேற்ப திருப்­பி­விட்­டதே சேவை­கள் பாதிக்­கா­மல் தொடர்ந்து இடம்­பெற்­ ற­தற்­கான கார­ணம் என்று போக்கு­வ­ரத்து அமைச்சு மாநாடு ஒன்­றை­யொட்டி பேசிய அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

ஐந்து விரை­வுப் பேருந்­துச் சேவை­கள் மட்­டுமே மீட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­தா­க­வும் இதர சேவை­கள் தொடர்ந்து செயல்­பட்டு வரு­வ­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

அந்த ஐந்து பேருந்­துச் சேவை­களை­யும் கோ-அஹெட் நிறு­வ­னம் நடத்­து­கிறது. அவை செப்­டம்­பர் 15ஆம் தேதி தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டன. பய­ணி­கள் சில­ருக்குக் கூடு­தல் தாம­தம் ஏற்­ப­டக்­கூ­டும் என்­பதை ஒப்­புக்­கொண்ட அமைச்சர், நிலை­மையைப் புரிந்­து­கொண்டு செயல்­ப­டும்­படி அவர்­க­ளைக் கேட்டுக்­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!