சமூக பராமரிப்பு மையம்: $5.6 மி. நிதி திரட்டிய கோ

மரீன் பரேடில் புதிய ஒருங்­கி­ணைந்த சமூ­கப் பரா­ம­ரிப்பு மையம் கட்­டப்­பட உள்­ளது.

ஓய்­வு­பெற்ற கௌரவ மூத்த அமைச்­சர் கோ சோக் டோங், தமது இரண்­டா­வது நூலின் வெளி­யீட்­டின் மூலம் திரட்­டப்­படும் நிதி இந்த மையத்­தைக் கட்­டு­வ­தற்­கா­கப் பயன்­ப­டுத்­தப்­படும் என்று கூறி­னார்.

2024ஆம் ஆண்­டுக்­குள் கட்டி முடிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­படும் இந்த மையம், வருங்­கால மரீன் பரேட் எம்­ஆர்டி நிலை­யத்­து­டன் மரீன் பரேட் சமூ­கக் கட்­ட­டத்தை இணைக்­கும். அந்­தச் சமூ­கக் கட்­ட­டத்­தில் தற்­போது சமூக மன்­ற­மும் நூல­க­மும் உள்­ளன.

அத்­து­டன், சம்­பள ஏற்­ற­த்தாழ்வு, சமூக முன்­னேற்­றம் ஆகி­ய­வற்றை ஆராய்­வ­தற்கு நிதி­ய­ளிக்­கும் புதிய அற­நி­று­வ­ன­மும் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­காக 100க்கும் மேற்­பட்டவர்கள் 5.6 மில்­லி­யன் வெள்­ளிக்கும் அதி­க­மாக நன்­கொடை அளித்­துள்­ள­னர்.

இந்த இரண்டு புதிய திட்­டங்­களை திரு கோ கடந்த வெள்­ளிக்­கி­ழமை, 'ஸ்டேன்­டிங் டால்: தி கோ சோக் டோங் யர்ஸ்' என்ற தலைப்­பி­லான தமது புத்த வெளி­யீட்­டுக்­கான மெய்­நி­கர் நிகழ்ச்­சி­யின்­போது அறி­வித்­தார்.

திரு கோவின் சுய­ச­ரி­தை­யைக் கொண்­டுள்ள முதல் நூலான 'டால் ஆர்­டர்', நவம்­பர் 2018ல் வெளி­யி­டப்­பட்­ட­போது அது 2 மில்­லி­யன் வெள்­ளிக்கு மேல் வசூ­லித்­தது. அந்த நிதி, மரீன் பரேட் குடும்­பங்­களை ஆத­ரிக்­கும் 'எடி­யு­கிரோ' திட்­டத்­திற்­கும் ' மீடி­யா­கார்ப் எனே­பல் ஃபன்ட்' திட்­டத்­திற்­கும் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

இவ்­வாண்டு மே மாதம் வெளி­யி­ட­வி­ருந்த இரண்­டா­வது நூல், கொவிட்-19 நில­வ­ரத்­தின் கார­ண­மாக ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

'ஸ்டேன்­டிங் டால்' புத்­த­கம், முன்­னைய ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி ஆசி­ரி­யர் பே ஷிங் ஹுவே­யால் எழு­தப்­பட்­டது.

தாம்­சன் ஈஸ்ட்­கோஸ்ட் ரயில் பாதை­யைக் கட்­டும்­போது கட்­டப்­பட்ட 4,000 சதுர மீட்­டர் சுரங்க இடத்­தில் புதிய சமூக மையம் கட்டப்­படும் என்­றார் திரு கோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!