தற்காலிக இடங்களில் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள்

பொது­ம­ருத்­து­வ­ம­னை­கள் தங்­கள் வளா­கங்­களில் பொது­மக்­கள் நட­மா­டும் இடங்­கள் சில­வற்­றில் கூடா­ரங்­களை அமைத்து கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளித்து வரு­கின்­றன. அவ­சர சிகிச்­சைப் பிரி­வுக்­குத் திர­ளா­கச் செல்­லும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டோ­ருக்கு சிகிச்சை வழங்க இந்­தத் தற்­கா­லிக சிகிச்­சைப் பகு­தி­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை முதல் ஈஷூன் சமூக மருத்­து­வ­ம­னை­யில் அமைக்கப்பட்டுள்ள தற்­கா­லிகக் கூடங்­களில் சிகிச்சை பெற்­று வந்த­கொவிட்-19 நோயா­ளி­கள் கூ டெக் புவாட் மருத்­து­வ­ம­னைக்கு அனுப்­பப்­பட்டு வரு­கின்­ற­னர். சமூகப் பரா­ம­ரிப்பு அல்­லது சிகிச்சை வசதி­க­ளுக்கு இடம் மாற்­றப்­படுவதற்­குக் காத்­தி­ருக்­கும் வேளை­யில் சுகா­தாரப் பரா­ம­ரிப்பு தேவைப்­படு­வோ­ரைப் பராமரிக்க இந்­தத் தற்­கா­லி­கக் கூடா­ரங்­களை அமைத்­துள்­ள­தாக கூ டெக் புவாட் மருத்து­வ­மனை சென்ற மாதம் 24ஆம் தேதி­யன்று ஃபேஸ்புக் பதிவில் குறிப்­பிட்­டது.

கிட்­டத்­தட்ட இதே காலகட்டத்தில் டான் டொக் செங் மருத்­து­வ­ம­னை­யும் அதிகரித்துள்ள நோயா­ளி­களைக் கவ­னிக்­கத் தனது அவ­சர சிகிச்சை பிரி­வைப் பெரி­தாக்­கி­யது. இங் டெங் ஃபோங் உள்ளிட்ட இதர சில மருத்­து­வ­ம­னை­கள் சென்ற ஆண்டு அமைக்கப்பட்ட கூடா­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­கின்­றன. தங்­கும் விடுதி­களில் வசிக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அதி­க­மா­னோ­ரி­டையே கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­போது அவர்­க­ளுக்கு சிகிச்சை­ய­ளிக்க அக்­கூ­டா­ரங்­கள் அமைக்­கப்­பட்­டன.

அதிக எண்­ணிக்­கை­யில் சேரும் நோயா­ளி­களை முடிந்­த­வரை வேகமா­கக் கவ­னித்து மற்ற வச­தி­க­ளுக்கு அனுப்ப சுகா­தார ஊழியர்­கள் அதிக நேரம் தனி­ந­பர் பாது­காப்பு சாத­னங்­களை அணிந்­த­படி வேலை செய்து வரு­கின்­ற­னர். தற்­போ­தைய சூழ­லில் அவ­சர சிகிச்சைப் பிரி­வுக்கு செல்­லும் நோயா­ளி­க­ள் படுக்கை கிடைக்க காத்­தி­ருக்­க­வேண்­டிய நேரம் 20 மணி­நே­ரத்­திற்­கும் மேல் ஆக­லாம். கொவிட்-19 கிரு­மித்­தொற்று தாக்கம் கடுமையாக இல்லாதவர்கள் கட்டங்­கட்­ட­மாக சமூகப் பரா­ம­ரிப்பு வச­தி­கள் அல்­லது கொவிட்-19 சிகிச்சை வச­தி­களுக்கு அனுப்­பப்­பட்டு வரு­கின்­ற­னர்.

மோச­மாக நோய்­வாய்ப்­ப­டக்­கூ­டிய அபா­யம் உள்ளோர் மருத்­து­வ­மனை­க­ளுக்கு வெளியே தீவிரமாகக் கண்காணிக்க அதி­கா­ரி­கள் கூடு­தல் படுக்­கை­களை அமைத்து வரு­கின்­றனர். கிரு­மித்­தொற்று ஏற்­பட்டோரில் கடுமையாக பாதிக்கப்படாத அல்­லது நோய்க்­கான அறி­கு­றி­கள் இல்லா­தோர் வீட்­டில் இருந்­த­படி குண­ம­டைய வகை­செய்­யும் திட்­டம் நடப்பில் உள்­ளது.

புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்டோரை­விட மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெறும் கொவிட்-19 நோயா­ளி­களின் எண்­ணிக்கை கணி­ச­மாக அதி­கம் என்று சுகா­தார அமைச்­சின் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. புற்­று­நோய்க்­குப் பர­வ­லாக வெளி­நோயாளி சிகிச்சை அளிக்­கப்­படும் வேளை­யில், உயிர்போகும் அபா­யம் அதை­விட மிகக் குறை­வாக இருக்­கும் கொவிட்-19ஐ அவ்­வாறு கையாள்­வது எப்­படி என்­பதை நாம் கற்­றுக்­கொள்­ள­வேண்­டும் என்று ஆசிய பசி­பிக் மருத்­துவ நுண்­ணுயி­ரி­யல், தொற்றுநோய் சங்­கத்­தின் தலை­வர் பேரா­சி­ரி­யர் பால் தம்­பையா கூறி­யுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!