விதிமுறை மாற்றத்தால் குழப்பம், அதிருப்தி, கோபம்

கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் புதிய விதி­

மு­றை­யின்­படி நேற்று முதல் உண­வங்­காடி நிலை­யங்­க­ளி­லும் காப்­பிக்­க­டை­க­ளி­லும் உண­வ­ருந்த முடி­யாது.

ஆனால் புதிய விதி­மு­றையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில் குழப்­பம் நில­வு­வ­தாக தெரி­விக்­கப்­

பட்­டுள்ளது. புதிய விதி­முறை எவ்­வாறு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கிறது என்­ப­தைத் தெரிந்­து­கொள்ள பல உண­வங்­காடி நிலை­யங்­க­ளுக்­கும் காப்­பிக்­க­டை­க­ளுக்­கும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி­யா­ளர்­கள் நேற்று சென்­ற­னர்.

சில இடங்­களில் வாடிக்­கை­

யா­ளர்­க­ளின் தடுப்­பூசி நிலை சரி­பார்க்­கப்­பட்­ட­தா­க­வும் சில இடங்­களில் சரி­பார்க்­கப்­ப­ட­வில்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

ஹவ்­காங் 203 காப்­பிக்­க­டை­யில் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தடுப்­பூசி நிலை­யைச் சரி­பார்ப்­ப­தில் அங்­கு உள்ள உண­வுக்­க­டைக்­கா­ரர்­கள் மும்­மு­ரம் காட்­டி­னர்.

காப்­பிக்­க­டை­யில் உள்ள ஓர் உண­வுக்­க­டை­யி­லி­ருந்து இன்­னோர் உண­வுக்­க­டைக்­குச் செல்­லும்­போது தமது தடுப்­பூசி சரி­பார்க்­கப்­ப­டு­வது எரிச்­சலை ஏற்­ப­டுத்­தி­ய­தாக வாடிக் ­கை­யா­ளர் திரு கே. டேங் தெரி­வித்­தார்.

“தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தாக வாடிக்­கை­யா­ளர்­கள் பலர் தெரி­வித்­த­னர். ஆனால் டிரேஸ்­டு­கெ­தர் செய­லியை அவர்­கள் என்­னி­டம் காட்­ட­வில்லை. தங்­கள் கைபே­சி­களை மேசை­யி­லேயே வைத்­து­விட்­ட­தாக அவர்­கள் கூறி­னர்,” என்று ஹவ்­காங் 203 காப்­பிக்­க­டை­யில் உண­வுக்­கடை வைத்­தி­ருக்­கும் 30 வயது திரு கோ லுவோ வெய் கூறி­னார். தடுப்­பூசி நிலை குறித்து கேட்­கும்­போது வாடிக்­கை­யா­ளர்­கள் சிலர் கோப­ம­டைந்ததாக­வும் கடைக்­கா­ரர்­கள் சிலர் தெரி­வித்­த­னர். உணவு வாங்க இவ்­

வ­ளவு சிர­மங்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ள­தாகப் பலர் முகம்­

சு­ளித்­த­தாக உண­வுக்­க­டைக்­கா­ரர்­கள் கூறினர்.

தியோங் பாரு ஈரச்­சந்தை, உண­வங்­காடி நிலை­யத்­திற்கு நேற்று காலை உண­வு சாப்பிடச் சென்ற வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் அவர்­க­ளது தடுப்­பூசி நிலையை தேசிய சுற்­றுப்­புற வாரிய அதி­கா­ரி­கள் சரி­பார்த்­

த­னர். உண­வங்­காடி நிலை­யத்­தில் சாப்­பிட முடி­யாது என்­றும் சாப்­பாட்டை வாங்­கிச் செல்ல மட்­டுமே அனு­மதி உள்­ளது என்­றும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத பெண் ஒரு­வ­ரி­டம் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். தெம்­ப­னிஸ் ஸ்திரீட் 11ல் உள்ள ஃபுட்சிட்டி காப்­பிக்­க­டைக்கு ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி­யா­ளர்­கள் சென்­ற­போது வாடிக்­கை­யா­ளர்­

க­ளின் தடுப்­பூசி நிலையை சரி­பார்க்க அதி­கா­ரி­களோ பாது­காப்பு இடை­வெளி தூதர்­களோ இல்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கோவ­னி­லும் தெம்­ப­னிஸ் வட்­டா­ரத்­தி­லும் உள்ள உண­வங்­காடி நிலை­யங்­களில் தடுப்­பூசி நிலை­யைச் சரி­பார்க்க பாது­காப்பு இடை­வெ­ளித் தூதர்­கள் இல்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தடுப்­பூசி நிலையைச் சரி­பார்க்க வேண்­டும் என்று யாரும் தங்­க­ளி­டம் சொல்­ல­வில்லை என்று உண­வுக்­க­டைக்­கா­ரர்­கள் சிலர் தெரி­வித்­த­னர். உண­வங்­காடி நிலை­யங்­க­ளின் நுழை­வா­யி­லில் பாது­காப்பு இடை­வெ­ளித் தூதர்­கள் இல்­லா­த­தால் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தடுப்­பூசி நிலையை சரி­பார்க்க வேண்­டுமா என்ற சந்­தே­கம் தங்­க­ளுக்கு ஏற்­பட்­ட­தாக செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அவர்­கள் கூறி­னர்.

அடிக்­கடி மாறும் விதி­முறை குறித்து கோவன் 209 ஈரச்­சந்தை, உண­வங்­காடி நிலை­யத்­தில் உண­வுக்கடை வைத்­தி­ருக்­கும் 65 வயது திரு வில்­லி­யம் லிம் அதி­ருப்தி தெரி­வித்­தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!