தேசிய தடுப்பூசித் திட்டத்தில் சினோவேக்; 3 ஊசி கட்டாயம் சுகாதார அறிவியல் ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் அறிவிப்பு

சிங்­கப்­பூ­ரின் தேசிய தடுப்­பூசி செயல்­திட்­டத்­தில் சினோ­வேக் சேர்க்­கப்­படும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று அறி­வித்­தார்.

சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் அந்­தத் தடுப்­பூ­சிக்குச் சிறப்பு ஏற்­பாட்­டின் கீழ் தற்­கா­லிக அனுமதி வழங்கி இருக்­கிறது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

இரண்டு சினோ­வேக் தடுப்­பூ­சி­களைப் போட்­டுக்­கொள்­ளும் அனை­வ­ரும், இரண்­டா­வது ஊசி போட்­டுக்­கொண்­ட­ பிறகு நான்கு மாத காலத்­திற்கு அல்­லது இந்த ஆண்டு டிசம்­பர் 31ஆம் தேதி­வரை முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­வர்­க­ளாக கரு­தப்­ப­டு­வர்­.

இரண்­டா­வது தடுப்­பூ­சியைப் போட்­டுக்­கொண்­ட­ 90 நாள் கழித்து மூன்­றா­வது சினோ­வேக் ஊசியை அவர்­கள் போட்­டுக்­கொள்ள வேண்டும்.

ஏற்­கெ­னவே ஒரு முறை அல்லது இரு முறை சினோ­வேக் தடுப்­பூசியைப் போட்­டுக்­கொண்டு இருப்­ப­வர்­கள் உட்­பட, முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­களுக்­கும் மூன்று சினோ­வேக் தடுப்­பூசி வாய்ப்பை அமைச்சு வழங்­கும். இருந்­தா­லும் ஃபைசர்-பயோ­என்­டெக் அல்­லது மொடர்னா தடுப்­பூசியை முற்­றி­லும் போட்­டுக்­கொண்டு உள்ள, ஒவ்­வா­மை­யால் பாதிக்­கப்­ப­டா­த­வர்­க­ளுக்கு பூஸ்­டர் ஊசி­யாக சினோ­வேக்கை பயன்­படுத்த முடி­யாது.

இவை ஒரு­பு­றம் இருக்க, சினோ­வேக் தடுப்­பூசி 12 முதல் 17 வயது வரைப்­பட்ட சிறார்­க­ளுக்­கான பொது­வான தடுப்­பூ­சி­யாக அங்கீகரிக்­கப்­ப­ட­வில்லை என்பதை யும் அமைச்சு சுட்டியது.

இருந்­தா­லும் ஏற்­கெ­னவே தேசிய செயல்­திட்­டத்­தில் உள்ள தடுப்­பூ­சியை முற்­றி­லும் போட்­டுக்­கொள்ள மருத்­துவ ரீதி­யில் தகுதி இல்­லா­த­வர்­க­ளுக்கு மூன்று சினோ­வேக் தடுப்பூசி வாய்ப்பை அமைச்சு வழங்­கும் என்­றும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

சுகா­தார அமைச்சு ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு நிலை­யத்­தில் அமைத்து இருக்­கும் தடுப்­பூசி நிலை­யத்­தி­லும் 11 குறிப்­பிட்ட பொது சுகா­தார ஆயத்தநிலை மருந்­த­கங்­களி­லும் தனி­யார் மருந்­த­கங்­களிலும் சினோ­வேக் ஊசியை இல­வ­ச­மாக போட்­டுக்­கொள்­ள­லாம் என்றும் அமைச்சு தெரிவித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!