எல்லை திறப்பு: சிங்கப்பூர் அமைச்சருடன் மலேசிய அமைச்சர் இன்று பேச்சு நடத்துவார்

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட மக்­க­ளுக்­கான விமா­னப் பயண வழித்­த­டம் ஒன்றை ஏற்­ப­டுத்தி அதன் மூலம் எல்­லை­யைத் திறந்­து­வி­டு­வது பற்றி மலே­சி­யா­வும் சிங்­கப்­பூ­ரும் விவா­திக்­கும் என்று மலே­சிய சுற்­றுலா, கலை, கலா­சார அமைச்­சர் நேன்சி சுக்ரி தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரின் வர்த்­தக, தொழில் அமைச்­சரை இன்று சந்­தித்து இது பற்றி தான் விவா­திக்­கப்போவ­தா­க­வும் அவர் கூறி­னார்.

"இது பற்றி வெள்­ளிக்­கி­ழமை (இன்று) விவா­திக்­கப்­படும்," என்று அவர் நேற்று கோலா­லம்­பூர் நாடாளுமன்­றத்­தில் செய்தி­யா­ளர்­களி­டம் தெரி­வித்­தார்.

மலே­சியா வெளி­நாட்­டுப் பய­ணி­களுக்குத் தன் எல்­லை­களை வரும் டிசம்­பரில் திறந்துவிடு­வது பற்றி ஆராய்ந்து வரு­கிறது.

அதற்­கான ஒரே­மா­தி­ரி­யான நடை­முறை­கள் இப்­போது தயா­ராகி வரு­கின்­றன.

மலே­சி­யா­வில் லங்­காவி தீவுக்கு மட்டும் இப்­போது அனைத்­து­லக பய­ணி­கள் அனுமதிக்­கப்­ப­டு­கி­றார்­கள். அவர்­கள் நவம்­பர் 15ஆம்­ தேதி முதல் முன்­னோடிப் பயணத் திட்­டத்­தின் மூலம் லங்­காவி வர­லாம் என்று பிர­த­மர் இஸ்மாயில் சப்ரி யாக்­கோப் ஏற்கெனவே அறி­வித்து உள்ளார்.

இருந்­தா­லும் அந்த யோச­னையை தேசிய பாது­காப்பு மன்­றம் ஏற்­றுக்­கொண்ட பிற­கு­தான் அது பற்­றிய அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு வெளி­யா­கும். எல்­லாம் திட்­ட­மிட்­ட­படி நடந்­தால் அத்திட்டம் பற்றி பிர­தமர் அறி­விப்பு விடுப்­பார் என்று மலே­சிய சுற்­றுலா, கலை, கலா­சார அமைச்­சர் நேன்சி சுக்ரி மேலும் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!