ரயீசா கான் விவகாரம்: குழு அமைத்தது பாட்டாளிக் கட்சி

பாட்­டா­ளிக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரயீசா கான், பாலி­யல் வன்­கொ­டுமை சம்­ப­வம் ஒன்­றின் தொடர்­பில் நாடா­ளு­மன்­றத்­தில் தான் பொய் சொன்­ன­தாக ஒப்­புக்­கொண்டு இருக்­கி­றார்.

அத­னை­ய­டுத்து அவர் செயல் பட்ட விதம் பற்றி ஆராய்­வதற்­காக பாட்­டா­ளிக் கட்சி ஒழுங்கு நட­வடிக்கைக் குழு ஒன்றை அமைத்து இருக்­கிறது.

திரு­வாட்டி ரயீசா, நாடா­ளு­மன்றத்­தில் ஒப்­புக்­கொண்ட விவகாரம் பற்றி அந்­தக் குழு ஆராயும் என்று கட்சியின் பேச்­சாளர் ஒரு­வர் நேற்று கூறி­னார்.

பாட்­டா­ளிக் கட்சி தலை­மைச் செய­லா­ளர் பிரித்­தம் சிங், தலை­வர் சில்­வியா லிம், துணைத் தலை­வர் ஃபைசல் மனாப் ஆகி­யோர் அந்­தக் குழு­வில் இடம்­பெற்று இருக்­கி­றார்­கள்.

குழுவின் பணி முடிந்­த­தும், அது தான் ஆராய்ந்து அறிந்­த­வற்­றை­யும் பரிந்­து­ரை­க­ளை­யும் கட்சியின் மத்­திய செயற்­கு­ழு­வி­டம் தாக்­கல் செய்­யும் என்று பேச்சாளர் தெரி­வித்­தார்.

கட்­சி­யின் ஒழுங்கு நட­வ­டிக்கை குழு­வின் பணி­யும் நாடா­ளு­மன்ற உரி­மைக் குழு எடுக்­கும் எந்த முடி­வும் தனித்­த­னி­யா­னவை என்­றும் அந்­தச் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

திரு­வாட்டி ரயீசா, அந்­தப் பாலி­யல் துன்­பு­றுத்­தல் சம்­ப­வம் தொடர்­பில் முன்பு தான் தெரி­வித்­தவை பொய் என்று திங்­கட்­கி­ழமை மன்­றத்­தில் ஒப்­புக்­கொண்­டார்.

சிங்­கப்­பூர் போலி­சி­டம் அவர் மன்­னிப்­பும் கேட்­டுக்­கொண்­டார். ஏற்­கெ­னவே அந்­தச் சம்­ப­வம் பற்றி தான் தெரி­வித்­த­வற்றை அவர் மீட்­டுக்­கொண்­டார்.

திரு­வாட்டி ரயீசா மூன்று முறை நாடா­ளு­மன்­றத்­தில் பொய் சொல்லி இருக்­கி­றார் என்று நாடா­ளு­மன்­றத் தலை­வ­ரான இந்­தி­ராணி ராஜா குறிப்­பிட்­டார்.

திரு­வாட்டி ரயீசா, 27, தனக்­குரிய நாடா­ளு­மன்ற உரி­மை­களை மீறி இருக்­கி­றார் என்று அவ­ருக்கு எதி­ராக அதி­கா­ர­பூர்­வ­மான முறை­யில் திரு­வாட்டி இந்­தி­ராணி ராஜா புகார் செய்­தார்.

இந்த விவ­கா­ரத்தை நாடா­ளு­மன்ற உரி­மைக் குழு விசாரணைக்கு அனுப்­பும்­படி அவர் கேட்­டுக்­கொண்­டார். அதற்கு நாடா­ளு­மன்ற நாய­கர் டான் சுவான்-ஜின் இணக்­கம் தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்ற உரிமை மீறல் தொடர்­பான புகார்­களை அந்­தக் குழுவே ஆரா­யும்.

இத­னை­ய­டுத்து திங்­கட்­கி­ழமை எதிர்த்­த­ரப்பு தலை­வர் பிரித்­தம் சிங் ஓர் அறிக்கை விடுத்­தார்.

திரு­வாட்டி ரயீசா உண்மை அல்­லாத தக­வல்­களைத் தெரி­வித்து இருக்­கக்கூடாது என்று அறிக்­கை­யில் எதிர்த்­த­ரப்பு தலை­வர் குறிப்­பிட்­டார்.

நாடா­ளு­மன்ற (உரி­மை­கள், தடைக்­காப்­பு­கள், அதி­கா­ரங்­கள்) சட்­டம், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுதந்­தி­ர­மாக தன் கருத்­து­க­ளைத் தெரி­விக்க வகை­ செய்­கிறது.

அப்­படி தெரி­விக்­கும் கருத்­து­கள் தொடர்­பில் நாடா­ளு­மன்­றத்­துக்கு வெளியே யாரும் கேள்வி எழுப்ப முடி­யாது.

நீதி­மன்­றத்­தில் குற்­றம் சுமத்­த­வும் முடி­யாது என்­பதைத் திரு பிரித்­தம் சிங் சுட்­டிக்­காட்­டி­னார்.

இருந்­தா­லும் ஒரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரின் நோக்­கம் நல்­ல­தாக இருந்­தா­லும்­கூட, அவர் பொய்­யான தக­வல்­க­ளைத் தெரி­விக்க அந்­தப் பேச்சு சுதந்­தி­ரம் அனு­ம­திக்­காது என்­றும் சிங் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!