ரயீசா கான் விவகாரம்: உரிமைக் குழுவுக்கு இருவர் நியமனம்

பாட்­டா­ளிக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரயீசா கானுக்கு எதி­ரான புகார் குறித்து விசா­ரிக்­கும் நாடா­ளு­மன்ற உரி­மைக் குழு­வில் கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­சர் எட்­வின் டோங், தொடர்பு, தக­வல் அமைச்­சுக்­கான நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் ரஹாயு மக்­ஸாம் இரு­வ­ரும் இடம்­பெ­று­வர்.

சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம், பிர­த­மர் அலு­வலக அமைச்­சர் குமாரி இந்­தி­ராணி ராஜா ஆகிய இரு­வ­ருக்­கும் பதி­லாக அந்த இரு­வ­ரை­யும் தான் நிய­மித்து இருப்­ப­தாக நாடா­ளு­மன்ற நாய­கர் டான் சுவான்-ஜின் அறி­வித்­தார்.

நாடா­ளு­மன்­ற அவைத் தலை­ வ­ராக உள்ள குமாரி இந்­தி­ராணி ராஜா­தான் பட்­டா­ளிக் கட்சி உறுப்­பி­ன­ருக்கு எதி­ராக புகார் தெரி­வித்­தார். போலிசை மேற்­பார்­வை­யி­டும் பொறுப்­பில் உள்ள அமைச்­ச­ராக திரு சண்­மு­கம் இருக்­கி­றார்.

ஆகை­யால், இந்த இரு­வ­ரும் நாடா­ளு­மன்ற உரி­மைக் குழு­வில் இருந்து தாங்­களே வில­கி­ விட்­ட­னர். திரு­வாட்டி ரயீசா கான், பாலி­யல் துன்­பு­றுத்­தல் சம்­ப­வம் ஒன்றைப் பற்­றிய விவ­ரங்­களை நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார். அந்­தச் சம்­ப­வத்தை போலி­சார் தவ­றா­கக் கையாண்­ட­தாக அவர் கூறினார்.

அந்­தச் சம்­ப­வம் பற்றி தான் பொய் சொன்னதாக மன்­றத்­தில் பிறகு அவர் ஒப்­புக்­கொண்­டார்.

அதை­ய­டுத்து திரு­வாட்டி ரயீசா கானுக்கு எதி­ராக நாடா­ளு­மன்ற அவைத் தலை­வ­ரான குமாரி இந்­தி­ராணி ராஜா புகார் தெரி­வித்­தார். அந்­தப் புகாரை நாடா­ளு­மன்ற உரி­மைக் குழு­வுக்கு அனுப்­பும்­படி அவர் கோரிக்கை விடுத்­தார். அதை மன்ற நாய­கர் ஏற்­றுக்­கொண்­டார்.

திரு­வாட்டி ரயீசா கானுக்கு எதி­ரான புகாரை விசா­ரிக்­கும் நாடாளு­ மன்­றக் குழு­வில் எட்டு பேர் இடம்­பெற்று இருக்­கி­றார்கள். நாடா­ளு­மன்ற நாய­கர் அதற்­குத் தலை­வ­ராக இருக்­கி­றார்.

நாடா­ளு­மன்ற (உரி­மை­கள், தடைக்­காப்­பு­கள், அதி­கா­ரங்­கள்) சட்­டத்­தின்­கீழ் நாடா­ளு­மன்ற உரிமை­களை மீறி இருப்­ப­தா­கத் தெரி­ய­வ­ரும் உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க மன்றத்­துக்கு அதி­கா­ரம் உள்ளது.

நடப்பு நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தொ­டர் காலத்­திற்­குட்­பட்ட அளவுக்குச் சிறைத்­தண்­டனை, $50,000 வரை அப­ரா­தம், இடைக்­கால நீக்­கம், நாடா­ளு­மன்ற நாய­கரின் கண்டிப்பு ஆகி­யவை தவறி­ழைக்­கும் உறுப்­பி­ன­ருக்­கான தண்­ட­னை­களில் அடங்­கும்.

அதோடு மட்­டு­மின்றி, உறுப்­பி­ன­ருக்­கான உரி­மை­களும் தடைக்­காப்­பும் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­ப­ட­லாம். இப்­படி நிறுத்தி வைக்­கப்­பட்­டால், அந்த உறுப்­பி­னர் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­த­வற்றுக்கு எதி­ராக வழக்­குத் தொடுக்க முடி­யும்.

இத­னி­டையே, திரு­வாட்டி ரயீசா கான் செயல்­பட்டு இருப்­பது பற்றி ஆராய்­வ­தற்­காக பாட்­டா­ளிக் கட்சி ஒழுங்கு நட­வ­டிக்கை குழு ஒன்றை அமைத்து இருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!