திடீர் வெள்ளத்தைக் கையாள மேம்பட்ட சாதனங்கள்

தீவில் தீடீர் வெள்­ளம் ஏற்­படும் வாய்ப்­புள்­ளது என்ற விவ­ரம் தெரிந்­த­வு­டன் உடனே 30 நிமி­டங்­க­ளுக்குள் அப்­ப­கு­திக்கு விரைந்து சென்­றி­வி­டு­வார் பொதுப் பய­னீட்­டுக் கழக துணைப் பொறி­யா­ளர் திரு தேவ் கிரித்­தி­வா­சன். கழ­கத்­தின் உட­னடி நட­வ­டிக்­கைக் குழு­வில் இடம்­பெ­றும் திரு தேவ், 2007ஆம் ஆண்­டி­லி­ருந்து கழ­கத்­தில் பணி­யாற்றி வரு­கி­றார்.

உடனடி நடவடிக்கை குழு உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட வெள்ளப் பகுதியை அடைந்தவுடன் சாலைப் போக்குவரத்து சீராக இயக்குவதை உறுதி செய்வர். வாக­னத்தை பாதிக்­கப்­பட்ட இடம் அருகே நிறுத்தி, மற்ற வாக­னங்­கள் பாது­காப்­பாக வழி­யில் செல்ல வழி­வ­குப்­பர். "அண்மையில் பாசிர் ரிஸ் டிரைவ் 12, தெம்­ப­னிஸ் அவென்யூ 10 சந்­திப்­பில் ஏற்­பட்ட திடீர் வெள்­ளத்­தில் சில வாக­னங்­கள் பகு­தி­ அளவு மூழ்கி, நின்­று­விட்­டன. சிக்கிக்­கொண்ட ஓட்டுநர்­கள் உணர்ச்­சி­வ­சப்­பட்­ட­போ­தி­லும் நிதா­னத்தைக் கடைப்­பி­டித்து, அவர்­களை மீட்­டோம்.

பாதிக்­கப்­பட்ட பகு­திக்கு வாக­னங்­கள் வரா­மல் இருக்க, திசை திருப்­பி­னோம். நிலைமை சீரா­ன­தும், வெள்­ளம் ஏற்­பட்ட கார­ணத்தைக் கண்­ட­றியும் பணியில் குழு ஈடுபட்டது," என்று கூறி­னார் 49 வயது திரு தேவ். தங்­க­ளது பணியை இன்­னும் துரி­த­மா­க­வும் ஆக்­க­பூர்­வ­மா­க­வும் மேற்­கொள்ள 13 புதிய வாக­னங்­க­ளை­யும் மேம்­படுத்­தப்­பட்ட முன்­க­ணிப்பு, கண்­கா­ணிப்பு தொழில்­நுட்ப சாதனங்­க­ளை­யும் பொதுப் பய­னீட்டு கழ­கம் அறி­மு­கம் செய்­துள்­ளது.

இந்­தப் புது ரக வாக­னங்­கள் 70 சென்ட்டி மீட்­டர் உயர ஆழ தண்­ணீர் அள­வில் கடந்து செல்­லக் கூடி­யவை. வாக­னத்­தில் பொருத்­தப்­பட்­டுள்ள ஜிபி­எஸ் கருவி­யும் கேம­ராக்­களும் நேரலை காட்சி­களையும் தகவல்களையும் கழ­கத்­தின் கூட்டுச் செயல்­பாட்டு நிலை­யத்­து­டன் பகி­ர்ந்திடும் வெள்­ளத் தடுப்­பு­களை வாக­னத்­தில் சுமந்து செல்­வ­தற்­கும் வசதி உண்டு.

புதிய வாக­னங்­கள் மற்­றும் மழைப் பொ­ழி­வின் தீவி­ரத்­தைக் கணிக்க உத­வும் ரேடார் கரு­வி­கள் தரும் தக­வல்­க­ளை­யும் தீவு முழு­வ­தும் பொருத்­தப்­பட்­டுள்ள சிசி­டிவி கண்­கா­ணிப்பு கேம­ராக்­களில் பதி­வா­கும் நேர­லைக் காட்­சி­க­ளை­யும் 'இன்­டி­கி­ரேட்­டட் டேஷ்­போர்ட்' எனப்­படும் ஒருங்­கி­ணைந்த மின்­னி­லக்கப் பல­கை­யில் இடம்­பெ­றச்­செய்­துள்­ளது கழ­கம்.

கழ­கத்­தின் கூட்டுச் செயல்­பாட்டு நிலை­யத்­தில் இதனை பார்­வை­யி­டும் ஊழி­யர்­கள் தீடீர் வெள்­ளச் சூழ்­நிலை தொடர்­பில் கண்­காணிக்­க­வும், உட­ன­டி­யாக செயல்­ப­ட­வும், முக்­கிய முடி­வு­களை சீக்­கி­ர­மாக எடுக்­க­வும் வகை­செய்யும்.

பொதுப் பய­னீட்­டுக் கழ­கத்­தின் இணை­யப் பக்­கத்­தில் உள்ள தக­வல்­படி, இவ்­வாண்டு கனத்த மழை கார­ணத்­தால் 10 இடங்­களில் திடீர் வெள்­ளம் ஏற்­பட்­டது. இம்­மா­தத் தொடக்­கத்­தில் அதி­க­முறை வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட டன்­யர்ன் சாலை­யின் 450 மீட்­டர் பகு­தியை உயர்த்­தும் முயற்சி எடுக்­கப்­பட்­டது. 'சைம் டார்பி' நிலை­யத்­திற்­கும் கால்­டெக்ஸ் பெட்­ரோல் நிலை­யத்­திற்­கும் இடை­யி­லான பகுதி உயர்த்­தப்­பட்­டது. இவ்வாண்டு மட்டும் டன்யர்ன் சாலையில் மூன்று தீடீர் வெள்ளச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

மற்ற மேம்பாட்டுத் திட்டங்களில், ஜாலான் புசார் பகுதியில் வெள்ளச் சம்பவங்களைத் தடுக்க, சயது ஆல்வி சாலை அருகே 'டிட்டென்ஷன் டாங்க்' எனும் நிலத்தடி தண்ணீர் தேக்கத் தொட்டி அமைக்கப்படுகிறது.

அதோடு, பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் தானி­யங்கி வெள்­ளத் தடுப்பு கருவியை தெம்­ப­னிஸ் கண்­டோ­மி­னி­யம் ஒன்­றில் வெற்­றி­க­ர­மா­கச் சோதித்­துள்ளது.

அந்த ஒரு மீட்­டர் தடுப்பு ஃபோர்ச்­சி­யூன் பார்க் கண்­டோ­மி­னி­யத்­தின் வாச­லில் பொருத்­தப்­பட்­டுள்­ளது. நீர் மட்­டம் அதி­க­ரித்­தால் தடுப்பு செயல்­ப­டத் தொடங்கி தான­கவே உய­ரும். இதற்கு அதிக பரா­ம­ரிப்­புத் தேவை­யும் இருக்­காது.

ப. பாலசுப்பிரமணியம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!