பிரித்தம் சிங்: பொய்யை சரிசெய்வதில் ரயீசா கானுக்குத் தெரிவு வழங்கப்படவில்லை

பாட்­டா­ளிக் கட்சி தலை­மைச் செய­லா­ளர் பிரித்­தம் சிங், ஒரு வாரத்­தில் இரண்­டா­வது முறை­யாக கடந்த புதன்­கி­ழமை சிறப்பு சலு­கை­கள் குழு­வின் முன் முன்­னிலை­யா­ன­போது, திரு­மதி ரயீசா கானுக்கு தெளி­வு­ப­டுத்­து­வ­தற்­கும் அவ­ரது பொய்­யைக் காப்­பாற்­று­வ­தற்­கும் இடையே ஒரு தெரிவை அவர் வழங்­கி­ய­தா­கக் கூறப்­ப­டு­வதை மறுத்­துள்­ளார்.

அக்­டோ­பர் 4ஆம் தேதி நாடாளு­மன்­றத்­தில் அவ­ரது பொய் விவ­கா­ரம் எப்­படி வர வேண்­டும் என்று திரு­மதி ரயீ­சா­வி­டம் பேசிய திரு சிங், "இது உங்­கள் முடிவு" என்று கூறி­ய­தன் அர்த்­தம் பற்றி தெளிவு­படுத்­து­வ­தற்­காக குழு அவரை மீண்­டும் அழைத்­தது.

கடந்த திங்­கட்­கி­ழமை நடந்த விசா­ர­ணை­யில், பாட்­டா­ளிக் கட்­சித் தலை­வர் சில்­வியா லிம், நவம்­பர் 29ஆம் தேதி­யன்று ரயீ­சா­வின் நடத்­தையை ஆராய கூட்­டப்­பட்ட பாட்­டா­ளிக் கட்­சி­யின் ஒழுங்­குக் குழு முன் ரயீசா தோன்­றி­ய­போது எடுத்த குறிப்­பு­க­ளைப் பகிர்ந்து கொண்­டார்.

நாடா­ளு­மன்­றத்­தில் பிரச்­சினை எழுந்­தால், அக்­டோ­பர் 4ஆம் தேதி என்ன செய்­வது என்­பதை ரயீசா தான் முடிவு செய்ய வேண்­டும் என்று திரு சிங் கூறி­ய­தா­கக் குறிப்பு­க­ளி­லி­ருந்து தெரி­கிறது என்று திரு­வாட்டி லிம் குழு­வி­டம் கூறி­னார்.

புதன்­கி­ழமை தனது சாட்­சி­யத்­தில் திரு சிங், நாடா­ளு­மன்­றத்­தில் பொய்­யு­ரைத்­த­தற்கான முழு பொறுப்­பை­யும் ரயீ­சா­தான் ஏற்க வேண்­டும் என்று அவ­ரி­டம் மிக­வும் தெளி­வாகத் தாம் தெரி­வித்­த­தா­கக் கூறி­னார்.

"உங்­கள் முடிவு" என்ற சொற்­றொ­ட­ரைப் புரிந்­து­கொள்ள முடி­கிறது என்று ரயீசா ஒப்­புக்­கொண்­டார்.

அக்­டோ­பர் 4ஆம் தேதி நாடாளு­மன்­றத்­தில் தான் பொய்­யு­ரைத்­தது பற்றி விசா­ரித்­தால், உண்­மை­யைச் சொல்­வதா அல்­லது தொடர்ந்து பொய் சொல்­வதா என்­பதை அவர்­தான் முடிவு செய்ய வேண்­டும் என்று அக்­டோ­பர் 3ஆம் தேதி­யன்று திரு­மதி ரயீ­சா­வி­டம் திரு சிங் கூறி­னார்.

ஆனால் திரு சிங், "உங்­கள் முடிவு" என்று தெரி­வித்­த­போது, நாடா­ளு­மன்­றத்­தில் தான் கூறி­ய­தற்கு திரு­மதி ரயீசா பொறுப்­பேற்க வேண்­டும் என்று அவர் கூறி­னார்.

நவம்­பர் 29ஆம் தேதி அன்று நடந்த ஒழுங்­கு­மு­றைக் குழுக் கூட்­டத்­தில் அவர்­தான் திரு­மதி ரயீ­சா­வி­டம் கூறி­யதை சரி­யான கண்­ணோட்­டத்­தில் பார்க்க வேண்­டும் என்று திரு சிங் கூறி­னார்.

திரு சிங், திரு­மதி ரயீ­சா­வி­டம் "பொய் சொல்ல முடி­யாது, சரியா?" என்று கேட்­ட­தை­யும் திரு­வாட்டி லிம்­மின் குறிப்­பு­கள் காட்­டின. அதற்கு அந்த முன்­னாள் செங்­காங் குழுத்­தொ­குதி எம்­பி­யும் ஒப்­புக்­கொண்­டார்.

நாடா­ளு­மன்­றத்­தில் உண்­மை­யைச் சொல்ல வேண்­டும் என்று திரு­மதி ரயீ­சா­வி­டம் அவர் ஏன் தெளி­வா­கக் கூற­வில்லை என்று கேட்­ட­போது, தான் மிக­வும் அதிர்ச்சி­யான சம்­ப­வத்தை அனு­பவித்­த­தாக ரயீசா குழு­வி­டம் தெரி­வித்­த­தாக திரு சிங் கூறி­னார்.

இதன் கார­ண­மாக, ரயீசா தனது குடும்­பத்­து­டன் அச்­சம்­ப­வத்­தைப் பற்றி முத­லில் பேச முடிவு செய்­தார்.

அதன் பிறகு அவர் பொய்­யுரைத்­த­தைப் பற்றி தொடர்ந்து பேச­லாம் என்று முடி­வெ­டுத்­தோம் என்று திரு சிங் விவ­ரித்­தார்.

இதற்­கி­டையே, திரு சிங், அக்­டோ­பர் மாதத்­தின் பிற்­பா­தி­யில் ரயீ­சா­வின் தந்­தை­யி­டம், நாடா­ளு­மன்­றத்­தில் அவர் மகள் கூறிய பொய்க்கு ரயீ­சாவே பொறுப்­பேற்க வேண்­டும் என்று கூறி­ய­தாக சிறப்­புச் சலு­கை­கள் குழு­வி­டம் கூறி­னார்.

ரயீசா தன் தந்­தை­யி­ட­மும் குடும்­பத்­தா­ரி­ட­மும் உண்­மை­யைச் சொல்­வார் என்று தான் எதிர்­பார்த்­த­தைச் சுட்­டிக்­காட்­டு­வ­தற்­கா­கவே தான் இதைக் குழு­வின் முன் கொண்டு வந்­த­தா­க­வும் திரு சிங் கூறி­னார்.

திரு சிங் மற்­றும் ரயீ­சா­வின் தந்தை திரு ஃபரிட் கான் இடை­யே­யான பரி­மாற்­றம் பாட்­டா­ளிக் கட்சி, சிறப்பு சலு­கை­கள் குழு­விடம் சமர்ப்­பித்த 100 பக்க ஆவ­ணங்­களில் இருந்­தது.

சிறப்பு சலு­கை­கள் குழு­வால் கோரப்­பட்ட ஆவ­ணங்­களை இன்­னும் வழங்­கா­மல் இருக்­கும் பாட்­டா­ளிக் கட்­சி­யின் உயர்­மட்­டத் தலை­வர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் ஆணை அனுப்­பப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!