ரயீசா கான் புகார் மீதான விரிவான விசாரணை நிறைவு

பாட்­டா­ளிக் கட்­சி­யின் முன்­னாள் எம்.பி. ரயீசா கான் நாடா­ளு­மன்­றத்­தில் பொய் கூறிய புகாரின் முழு­மை­யான விசா­ரணை குறித்த முடி­வு­க­ளை­யும் பரிந்­து­ரை­களை­யும் உரிய நேரத்­தில் நாடா­ளு­மன்­றத்­தின் சிறப்­பு­ரி­மைக் குழு சமர்ப்­பிக்­கும் என்று நாடா­ளு­மன்ற நாய­கர் டான் சுவான் ஜின் தெரி­வித்­துள்­ளார்.

சிறப்­பு­ரி­மைக் குழு எந்­த­வொரு முறை­யா­கச் சமர்ப்­பிக்­கப்­படும் எந்­த­வொரு புகா­ரை­யும் கடு­மை­யாக எடுத்­துக்­கொள்­கிறது என்­றும் நாடாளு­மன்ற சிறப்­பு­ரி­மை­யின் புனி­தத்­தன்­மை­யை­யும் நேர்மையை­யும் நிலை­நி­றுத்­து­வ­தற்­காக அத்­த­கைய புகார்­க­ளைக் கவ­னிக்க வேண்­டிய பொறுப்பு உள்­ளது என்­றும் அவர் கூறி­னார்.

"கடந்த ஆண்டு 39 மசோ­தாக்­களை நாடா­ளு­மன்­றம் நிறை­வேற்­றி­யது. மேலும் அது முதல் முறை­யாக அமர்­வு­க­ளின் நேரடி ஒளி­பரப்பை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி­யன்று அன்று நாடா­ளு­மன்­றத்­தில் ஓர் உரை­யின்போது, ரயீசா பொய் சொன்­னதை ஒப்­புக்­கொண்­டதை அடுத்து, அவ­ரது நடத்­தையை ஆராய்­வ­தற்­காக சிறப்­பு­ரி­மை­கள் குழு டிசம்­ப­ரில் விசா­ர­ணை­மேற்கொண்டது," என்று திரு டான் நேற்று முன்­தி­னம் தமது வலைப்­ ப­தி­வில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளான ஒரு பெண்­ணு­டன் தான் காவல் நிலை­யத்­திற்கு சென்­ற­தா­க­வும், காவல்­து­றை­யின் உணர்ச்­சி­யற்ற கேள்­வி­க­ளால் அந்த பெண் கண்­ணீர் விட்­ட­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார்.

ஆனால் நவம்­பர் 1ஆம் தேதி­யன்று, தாம் ஓர் ஆத­ர­வுக் குழு­வின் கதை­யைக் கேட்டு அவ்­வாறு கூறி­யதை ஒப்­புக்­கொண்­டார். நவம்­பர் 30ஆம் தேதி ரயீசா எம்.பி.பத­வி­யில் இருந்து வில­கி­னார்.

நாடா­ளு­மன்­றச் சலு­கை­கள் சட்­ட­ரீ­தி­யான விளை­வு­க­ளைப் பற்­றிய அச்­ச­மின்றி, நாடா­ளு­மன்­றத்­தில் சுதந்­தி­ர­மா­க­வும் வெளிப்­ப­டை­யா­க­வும் பேச அனு­ம­திக்­கும் அதே வேளை­யில், "இந்­தச் சிறப்­பு­ரி­மை­யைப் பயன்­ப­டுத்­தும்­போ­தும் உரிய விடா­மு­யற்­சி­யை­யும் பொறுப்­பை­யும் கடைப்­பி­டிக்க வேண்­டிய பொறுப்பு ஒவ்­வொரு எம்.பி.க்கும் உள்­ளது," என்று திரு டான் எம்.பி.க்க­ளுக்கு நினை­வூட்­டி­னார்.

"அறிக்­கை­கள் உண்­மை­கள் அல்­லது நன்கு நிரூ­பிக்­கப்­பட்ட தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யில் இருக்க வேண்­டும்," என்று அவர் கூறி­னார்.

"நாங்­கள் பார்த்த இந்த அண்­மைய புகார், எம்.பி.க்கள் ஒரு எம்.பி.யாக இருப்­ப­தன் மூலம் அவர்­களுக்கு அளிக்­கப்­படும் சிறப்புச் சலு­கை­களை வேண்­டு­மென்றே தவ­றா­கப் பயன்­ப­டுத்­தக்கூடாது என்­ப­தற்­கான முக்­கி­ய­மான நினை­வூட்­ட­லா­கும்.

"சிறப்­பு­ரி­மைக் குழு என்­பது நாடா­ளு­மன்­றத்­தின் செயல்­பா­டு­க­ளின் முக்­கிய அம்­ச­மாக இருக்­கும் நிலைக்­கு­ழுக்­களில் ஒன்­றா­கும். அத்­த­கைய குழுக்­கள் வர­வு­செ­ல­வுத் திட்­டத்தை ஆழ்ந்து ஆரா­யும் முக்­கி­ய­மான பங்கை ஆற்­று­கின்­றன", என்று திரு டான் மேலும் கூறி­னார்.

2021ஆம் ஆண்­டில் நாடா­ளு­மன்­றத்­துக்கு ஒரு பர­ப­ரப்­பான ஆண்­டாக இருந்­த­தா­கக் கூறிய திரு டான், சிங்­கப்­பூ­ரின் வெளி­நாட்­டுத் திற­மைக் கொள்கை குறித்த நீண்ட விவா­தம் செப்­டம்­பர் 14ஆம் தேதி காலை 11 மணி முதல் செப்­டம்­பர் 15ஆம் தேதி பின்­னி­ரவு 12.30 மணி வரை மொத்­தம் 13.5 மணி நேரம் நீடித்­தது என்­றார்.

"உண்­மை­யில், இந்­தத் தேதி­களில் பிறந்த இரண்டு எம்.பி.க்கள் தங்­கள் பிறந்­த­நாளை நாடா­ளு­மன்ற அவை­யில் கொண்­டா­டி­னர்," என்ற திரு டான், சிங்­கப்­பூ­ரர்­க­ளின் வேலை­கள், வாழ்­வா­தா­ரங்­க­ளைப் பாது­காப்­பது குறித்த நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் கொண்டு வந்த தீர்­மா­னத்­தின் மீதான விவா­தம், சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்­சி­யின் உறுப்­பி­னர் லியோங் மன் வாயின் போட்­டித் தீர்­மா­னம் ஆகி­யவை அதிக நேரம் எடுத்­துக்­கொண்­டன என்­றார் திரு டான்.

கொவிட்-19 பெருந்­தொற்­றின் பிர­தி­ப­லிப்­பாக மன்­றத்­தில் எம்.பி.க்கள் சில இருக்­கை­களிலிருந்து தள்ளி அமர்ந்­தது, கண்­ணா­டித் திரை­க­ளுக்­குப் பின்­னால் பேசு­வது போன்ற பாது­காப்­பான நிர்­வாக நட­வ­டிக்­கை­கள் அமல்­ப­டுத்­தப்­பட்­டன.

எம்.பி.க்கள் 2,601 நாடா­ளு­மன்­றக் கேள்­வி­களை எழுப்பி அவற்றுக் கான பதில்­களைப் பெற்­ற­னர் என்றும் திரு டான் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!