இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை

முதன்­மு­றை­யாக மார்­ப­கப் புற்­று­நோய் பரி­சோ­த­னையை மேற்­கொள்­ளும் பெண்­கள் இல­வ­ச­மாக இந்­தச் சேவை­யைப் பெற ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. பிஷான் - தோபாயோ - சின் மிங் வட்­டா­ரத்­துக்கு மாதந்­தோ­றும் செல்­லும் சமூக பரி­சோ­தனை பேருந்­தில் இந்த சேவை வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

கூடு­த­லான பெண்­க­ளைப் பரி­சோ­த­னையை மேற்­கொள்­ள­ வைக்க அற­நி­று­வ­னம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. மார்­ப­கப் புற்­று­நோய், உல­க­ள­வில் பெண்­க­ளின் உயி­ருக்கு ஆக அதிக ஆப­த்தை விளை­விக்­கக்­கூ­டிய புற்­று­நோயாக உள்ளது.

சிங்­கப்­பூ­ரில் இதுவே பெண்­க­ளி­டையே மிகப் பர­வ­லா­கக் காணப்­படும் புற்­று­நோய்.

சிங்கப்பூரில் தினந்தோறும் சராசரியாக ஆறு பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது.

தீவு முழு­வ­தும் உள்ள பொது மருந்­த­கங்­களில் 50 வய­துக்­கும் மேற்­பட்ட பெண்­க­ளுக்கு இல­வ­ச­மாக மார்­ப­கப் பரி­சோ­த­னையை மேற்­கொள்ள உதவ மார்­ப­கப் புற்று­நோய் அற­நி­று­வ­னம் நிதி ஒன்­றைத் தொடங்­கி­யுள்­ளது. முதன்­மு­றை­யாக பரி­சோ­த­னையை மேற்­கொள்­ள­வி­ருக்­கும் இந்த வய­துப் பிரி­வில் உள்ள பெண்­க­ளுக்கு இது பொருந்­தும். சின் மிங் கோர்ட்­டில் அமைந்­துள்ள மார்­ப­கப் புற்­று­நோய் அற­நிறு­வ­னத்தின் புதிய மார்­ப­கப் புற்று­நோய் நிலை­யத்­தில் இத்­திட்­டங்­கள் அறி­விக்­கப்­பட்­டன.

சிங்­கப்­பூ­ரின் முதல் மார்­ப­கப் புற்­று­நோய் நிலை­ய­மான இதை அதி­பர் ஹலிமா யாக்­கோப் நேற்று திறந்­து­வைத்­தார். இந்­நி­கழ்­வில் பிர­த­மர் அலு­வ­லக அமைச்­ச­ரும் நிதி, தேசிய வளர்ச்சி ஆகி­ய­வற்றுக்­கான இரண்­டாம் அமைச்­சருமான இந்­தி­ராணி ராஜா­வும் கலந்­து­கொண்­டார்.

“முன்­ன­தா­கவே அடை­யா­ளம் கண்டு சிகிச்சை அளித்­தால், மார்­பகப் புற்­று­நோய்க்கு ஆளா­வோர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்­பு­களை அதி­க­ரிக்கலாம், அதன் மூலம் மார்­ப­கப் புற்­று­நோயை உயி­ருக்கு ஆபத்து விளை­விக்­கும் நோய் என்ற நிலையை முற்­றி­லும் மாற்­றலாம்,” என்று குமாரி ராஜா கூ­றி­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!