வட்டத்தீவு வழித்தடத்தின் முதல் பாதி திறக்கப்பட்டது

75 கி.மீ. நீள பசு­மைப்­பாதை: வடகிழக்­கிலிருந்து தென்­பு­றத்­திற்­குத் தடையின்றி செல்லலாம்

சிங்­கப்­பூரைப் சுற்றி தொட­ர்ந்­தாற்­போல் நடந்­தும் சைக்­கி­ளி­லும் செல்­வ­தற்­குத் தோதாக அமைக்­கப்­பட்­டு­வ­ரும் வட்­டத்­தீவு வழித்­த­டத்­தின் முதல் பாதி திறக்கப்பட்டது.

மக்­கள் இப்­போது வடகிழக்­கில் இருந்து தென்­பு­றத்­திற்­குத் தடையில்­லா­மல் சென்று வர­லாம். அந்த 75 கி.மீ. நீள பசு­மைப்­பாதை, ஆறு­கள் வழி­யாக, கிழக்­குக் கடற்­கரை ஓர­மாக, சிங்­கப்­பூர் ஆற்றை ஒட்­டி­ய­படி நீண்டு செல்­கிறது.

லேப்­ரடார் காட்­டுப் பகு­திக்கு அருகே பெர்லயார் கிரீக்­கில் போய் அது முடி­கிறது.

வட்­டத்­தீவு வழித்­த­டத்­தின் எஞ்சிய பகுதி 2035ல் அமை­யும். அப்­போது அந்த வழி­தான், தீவை உள்­ள­டக்கி அதைச் சுற்­றி­லும் அமைந்­தி­ருக்­கும் ஆக நீள­மான பொழு­து­போக்கு இணைப்­புப் பாதை­யாக இருக்­கும்.

வட்­டத்­தீவு வழித்­த­டத்­தின் முதல் பாதி திறப்பை நினை­வு­கூ­ரும் வகை­யில் அந்­த வழி­யில் சாங்கி பே பாய்ண்ட்டில் துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட், இரு மரக்­கன்று­களை நேற்று நட்­டார்.

கடற்­கரை ஓர­மா­கவே பொது­மக்­கள் நடந்து செல்ல, மெது­வோட்­டத்­தில் ஈடு­பட, சைக்­கி­ளில் செல்ல ஏது­வாக தீவைச் சுற்றி ஒரு­ பாதையை அமைக்­க­லாம் என்ற ஒரு யோசனை 2008ல் நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யத்­திற்கு ஏற்­பட்­டது. 150 கி.மீ. தொலை­வுக்­குச் செல்­லும் அத்­த­கைய ஒரு வழித்­தடத்தை அமைப்­ப­தற்­கான திட்­டங்­க­ளை அப்போதைய துணைப் பிர­த­மர் டியோ சீ ஹியன் நான்கு ஆண்டு­கள் கழித்து அறிவித்­தார்.

நகர்ப் பகு­தி­களில் இருக்­கும் பார­ம்­ப­ரிய இடங்­களைக் கிழக்­குக் கடற்­க­ரைப் பகு­தி­க­ளு­டன், வடக்கி­லும் மேற்­கி­லும் இருக்­கும் காட்டு வளப்­ப­கு­தி­க­ளு­டன் அது இணைக்­கிறது.

வட்­டத்­தீவு வழித்­த­டத்­தின் முதல்­பாதி வழி நெடு­கி­லும் சூரிய சக்தி மின்­னேற்­றிக் கூடங்­கள், ஓய்­வி­டங்­கள், உல்­லாச இடங்­கள், இயற்கை அழகு ரசிப்­பி­டங்­கள் போன்ற பல்­வேறு வசதிகளும் அமைந்­தி­ருக்­கின்­றன.

இத­னி­டையே, நேற்­றைய நிகழ்ச்சி­யில் பேசிய துணைப் பிர­த­மர், சிங்­கப்­பூர் பசு­மைத்­திட்­டம் 2030ன் கீழ் சிங்­கப்­பூரை இயற்கை நக­ராக்க மாற்­றும் முயற்­சி­க­ளின் ஒரு பகுதி­யாக இந்­தப் பாதை திறக்­கப்­பட்டு உள்­ளது என்­றார்.

சிங்கப்பூரில் 2030ல் ஒவ்­வொரு குடும்­ப­மும் தன் வீட்டில் இருந்து பத்து நிமி­டம் நடந்­தால் போதும், ஒரு பூங்­காவை எட்­டி­வி­டலாம் என்­றார் திரு ஹெங்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!