கொவிட்-19 மாத்திரைக்கு சிங்கப்பூர் அனுமதி

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்­குச் சிகிச்சை அளிக்க ஃபைசர் நிறு­வ­னத்­தின் பேக்ஸ்­லோ­விட் எனும் மாத்­தி­ரையை சிங்­கப்­பூ­ரில் பயன்­ப­டுத்த அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் நேற்று இதைத் தெரி­வித்­தது.

"மித­மான கொவிட் தொற்று ஏற்­பட்டு, அது கடு­மை­யான நோயாக மாறக்­கூ­டிய அபா­யத்­தில் உள்ள பெரி­ய­வர்­க­ளுக்கு சிகிச்சை அளிப்­ப­தற்­காக சிங்கப்­பூ­ரில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள முதல் மாத்­திரை இது.

"மருத்­து­வ­மனை சிகிச்சை தேவைப்­ப­டு­வ­தை­யும் மர­ணத்­தை­யும் குறைப்­பது இதன் குறிக்­கோள்," என்று ஆணை­யம் கூறி­யது.

சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­தின் கிரு­மிப்­ப­ர­வல் சிறப்பு அனு­மதி நடை­மு­றை­யின் கீழ் அந்த மாத்­தி­ரைக்கு கடந்த மாதம் 31ஆம் தேதி இடைக்­கால அனு­மதி வழங்­கப்­பட்­டது.

மருந்­து­கள் ஆலோ­ச­னைக்­ கு­ழு­வி­டம் ஆலோ­சனை பெற்று ஆணை­யம் மாத்­தி­ரைக்கு ஒப்­பு­தல் வழங்­கி­யது.

பேக்ஸ்­லோ­விட் மாத்­தி­ரையை ஐந்து நாள்­க­ளுக்கு, தின­மும் இரண்டு முறை எடுத்­துக்­கொள்ள வேண்­டும்.

அதை கொவிட்-19 அறி­கு­றி­கள் தொடங்­கிய ஐந்து நாள்­களுக்­குள் கூடிய விரைவில் கொடுக்கப்பட வேண்­டும்.

சுகா­தார அமைச்­சின் ஆணைப்­படி, கடும் நோய் அபா­யத்­தில் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளித்து இந்த மாத்­திரை வழங்­கப்­படும் என்று ஆணை­யம் கூறி­யது.

நிர்­மட்­ரெல்­விர், ரிட்­டொ­ன­விர் எனும் இரண்டு மருந்­து­க­ளை­யும் கலந்து இந்த மாத்­திரை தயா­ரிக்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!