குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி கங்காதேவி: தீயில் உடல் உருகுவதுபோல உணர்ந்தேன்

ஜன­வரி மாதம் 29ஆம் தேதி அதி­காலை 4.45 மணிக்கு சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை அதி­காரி லெஃப்டி­னென்ட் கங்­கா­தேவி ரௌட்­டன், தெலுக் பிளாங்கா ரைஸ், புளோக் 39ல் தீ மூண்ட இடத்தை அடைந்­த­தும், புளோக்­கின் 10வது மாடி­யி­லி­ருந்து ஆரஞ்சு நிறத்­தில் தீப்பிழம்­பு­கள் ஆக்­ரோ­ஷ­மாக வெளிக்­கி­ளம்­பு­வ­தைப் பார்த்­தார்.

தீயின் கடும் வேகத்­தால் அந்த வீவக புளோக்­கின் கண்­ணாடி மற்­றும் கான்­கிரீட் துண்­டு­கள் கீழே விழுந்­து­கொண்­டி­ருந்­தன.

பீதி­யில் இருந்த குடி­யி­ருப்­பாளர்­கள், தூக்­கத்­தி­லி­ருந்து எழுந்து, புளோக்­கின் கீழே கூடத் தொடங்­கி­னர்.

பாதிக்­கப்­பட்ட வீட்­டின் முன்­கதவு வழி­யாக தீப்பிழம்­பு­கள் வெளி­வந்து கொண்­டி­ருந்­தன.

தெலுக் பிளாங்கா தீச் சம்­ப­வத்­தைக் கடந்த வாரம் ஊட­கத்­துக்கு நினை­வு­கூர்ந்த அலெக்­சாண்­டிரா தீய­ணைப்பு நிலை­யத்­தின் துணைப் படைப் பிரி­வின் தலை­வ­ரான 35 வயது லெஃப்டி­னென்ட் கங்­கா­தேவி, "எனது 15 ஆண்டு அனு­பவத்­தில் நான் பார்த்த மிகப் பெரிய தீச்சம்­ப­வம் இது. கொழுந்துவிட்­டெ­ரி­யும் அந்த வீட்­டுக்­குள் செல்ல நான் பயப்­ப­ட­வில்லை. ஆனால், அங்­கி­ருந்த வெப்­பம் மிக அதி­க­மாக இருந்­தது. அந்­தத் தீயில் எனது உடல் உருகு­வ­து­போல நான் உணர்ந்­தேன்," என்­றார்.

இத்­தீச்சம்­ப­வத்­தில் கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூ­ரில் பணி­யாற்­றிய 48 வயது இந்­தோ­னீ­சி­யப் பணிப்­பெண் மாண்­டார். இன்­னொ­ரு­வர் புகையை அதி­கம் சுவா­சித்­த­தால், மருத்­து­வ­ம­னைக்கு அனுப்­பப்பட்­டார்.

தீ மூண்ட வீட்­டில் வசித்த 72 வயது சியா கெக் யோங், தனது குறும்­புச் செய­லால் தீ மூட்டியதற்காக ஜன­வரி 29ஆம் தேதி­யன்று குற்­றம் சாட்­டப்­பட்­டார். அவர் மன­ந­லப் பரி­சோ­த­னைக்­காக விசா­ர­ணைக் காவ­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார்.

பாது­காப்பு கருதி, 280 பேர் தங்­கள் வீடு­க­ளி­லி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­ட­னர். நீரைப் பீய்ச்­சி­ய­டிக்­கும் இரண்டு சாத­னங்­க­ளைக் கொண்டு தீ ஒரு மணி நேரத்­தில் அணைக்­கப்­பட்­டது.

இந்­தத் தீய­ணைப்பு நட­வ­டிக்­கை­யில் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் 14 வாக­னங்­களும் 45 தீய­ணைப்­பா­ளர்­களும் ஈடு­பட்­ட­னர்.

சமை­ய­ல­றை­யி­லி­ருந்து எரி­வா யுக் கசிவு ஏற்­பட்­டி­ருக்­க­லாம் என்று சந்­தே­கப்­பட்ட கங்­கா­தேவி, தீய­ணைப்பு நட­வ­டிக்­கை­யின் மேல­தி­கா­ரி­யான லெஃப்டி­னென்ட் கர்­னல் ஹூ வெய் குன்­னி­டம் தெரி­விக்க, கர்­னல் ஹூ, புளோக்­கின் எரி­வாயு விநி­யோ­கத்தை நிறுத்த உத்­த­ர­விட்­டார்.

"எரி­வாயு விநி­யோ­கம் நிறுத்­தப்­பட்­ட­வு­டன், தீய­ணைக்­கும் நட­வடிக்­கை­யின் கடுமை சற்று தணிய தொடங்­கி­யது. தீயின் கடு­மையை மேலும் மோச­மாக்­கிய எரி­வாயு விநி­யோ­கத்தை நிறுத்தியிராவிடில், தீயை அணைப்­பது முடி­யா­த­தாகி இருக்கும்," என்­றார் கர்­னல் ஹூ.

தீயு­டன் போரா­டும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டா­த­வர்­கள் புளோக்­கின் அடி­யில் குடி­யி­ருப்­பா­ளர்­களை அப்­பு­றப்­ப­டுத்­து­தல், அவர்­க­ளுக்கு மருத்­துவக் கவ­னிப்பு அளித்­தல் போன்­ற­வற்­றில் உதவி புரிந்­த­னர்.

தீய­ணைப்பு நட­வ­டிக்கை முடி­வடைந்­த­வு­டன் தீய­ணைப்­பா­ளர்­கள் தங்­கள் வீட்­டுக்­குச் செல்ல அனு­மதிக்­கப்­பட்­ட­னர்.

அப்­போது தமது கைபே­சி­யைப் பார்த்த கங்­கா­தேவி தமது 12, 10 வயது மகள்­கள் தம்மை கைபே­சி­யில் பல­முறை அழைத்­ததை அறிந்து ­கொண்­டார். கங்­கா­தே­வி­யின் கண­ வ­ரும் ஒரு தீய­ணைப்­பா­ளர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

"வீட்டை அடைந்­த­தும் எனது குடும்­பத்­தி­னர் எனக்குப் பாலும் நீரும் கொடுத்­த­னர். எனது இளைய மகள் எனது கை கால்­க­ளைப் பிடித்துவிட்டு நான் நல­மாக இருக்­கி­றேனா என்று கேட்­டார். நான் அவர்­க­ளி­டம் தீயை அணைத்து மக்­க­ளைக் காப்­பாற்­று­வதன் முக்­கி­யத்­து­வத்தை விளக்­கி­னேன்," என்­றார் கங்காதேவி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!