உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு முழுமைத் தற்காப்பின் புதிய திட்டம்

புதுப்­பிக்­கப்­பட்ட முழு­மைத் தற்­காப்­புத் திட்­டத்­தில் இன்­னும் அதி­க­மான உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­கள் இதய இயக்­க­மீட்பு சிகிச்சை (சிபி­ஆர்) மற்­றும் தானி­யங்கி வெளிப்­புற இதய இயக்­க­மீட்பு சிகிச்சை (ஏஇடி) தொடர்­பான பயிற்சி­க­ளி­லும் சமூக தொண்­டூ­ழி­யத் திட்­டங்­களிலும் பங்­கேற்­பார்­கள் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முழு­மைத் தற்­காப்பு அடை­ யாளக் குறித் திட்­டத்­தின் கீழ், சீரு­டைக் குழுக்­க­ளின் உறுப்­பி­னர்­கள் மிக உயர்ந்த நிலையை அடை­ வ­தற்கு இவை புதிய தேவை­கள் என்று தற்­காப்பு அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் கூறி­யது.

தேசிய மாண­வர் ராணு­வப் படை, சிறு­மி­யர் படை போன்ற ஒன்­பது சீரு­டைக் குழுக்­களில் அங்­கம் வகிக்­கும் உயர்­நிலை ஒன்று முதல் மூன்று வரை­ பயிலும் சுமார் 30,000 மாண­வர்­கள் இந்த வரு­டாந்­திர பயிற்­சி­யில் பங்­கேற்­பார்­கள். ஆனால் இது கட்­டா­ய­மல்ல.

முழு­மைத் தற்­காப்பு தினம் ஒவ்­வோர் ஆண்­டும் பிப்­ர­வரி 15ஆம் தேதி அனு­ச­ரிக்­கப்­ப­டு­கிறது. முழுமைத் தற்­காப்­பில் ராணு­வம், குடிமை, பொரு­ளி­யல், சமூ­கம், உள­வி­யல், மின்­னி­லக்­கம் என ஆறு தூண்­கள் உள்­ளன.

1995ல் அறி­மு­க­மான முழு­மைத் தற்­காப்பு அடை­யா­ளச் சின்னத் திட்­டம், முழு­மைத் தற்­காப்பு பற்­றிய விழிப்­பு­ணர்­வை­யும் பங்­கேற்­பை­யும் பிர­ப­லப்­ப­டுத்­து­கிறது. இதில் பங்­கேற்­ப­வர்­கள் தங்­கள் திற­னுக்­கேற்ப வெண்­க­லம், வெள்ளி, தங்க அடை­யா­ளச் சின்னங்களைப் பெறு­வார்­கள்.

தங்க அடை­யா­ளச் சின்னத்தைப் பெறு­வ­தற்கு சீரு­டைக் குழுக்­க­ளின் உறுப்­பி­னர்­கள் சிபி­ஆர் சிகிச்சை, ஏஇடி சிகிச்சை தொடர்­பி­லான சான்­றி­த­ழைப் பெற்­றி­ருக்க வேண்­டும். மேலும் இந்­தச் சான்­றி­த­ழைப் பெற்­ற­வர்­கள் விரும்பினால் அவர் களுக்கு உள­வி­யல் முத­லு­தவி தொடர்­பில் பயிற்சி அளிக்­கப்­பட்டு, அதன் சான்­றி­த­ழும் வழங்­கப்­படும்.

புதுப்­பிக்­கப்­பட்ட இந்­தப் பயிற்சி முறை சுய­மாகக் கற்­றல், சமூ­கக் கண்­கா­ணிப்­புத் திட்­டம் போன்­ற­வற்­றில் தொண்­டூ­ழி­யம் ஆகி­ய­வற்றை வலி­யு­றுத்­து­கிறது.

சிபி­ஆர், ஏஇடி சான்­றி­தழ் திட்­டத்தை முழு­மைத் தற்­காப்­புக்­கான மத்­திய அமைப்­பான நெக்­சஸ், தெமா­செக் அற­நி­று­வ­னத்­தின் பங்கா­ளித்­து­வத்­து­டன் அறி­மு­கப் ­ப­டுத்­தி­யுள்­ளது.

"புதுப்­பிக்­கப்­பட்ட முழு­மைத் தற்­காப்பு அடை­யா­ளச் சின்னத் திட்­டம் மாறி­வ­ரும் சமூ­கத்­தைப் பிரதி ­ப­லிக்­கிறது. இத்­திட்­டத்­தின் மூலம் நமது சீரு­டைக் குழுக்­க­ளின் உறுப்­பி­னர்­கள் முழுத் தற்­காப்­பின் முக்­கி­யத்­து­வத்­தை­யும் அவ­சி­யத்­தை­யும் புரிந்­து­கொண்டு சமூ­கத்­துக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் தங்­கள் பங்கை ஆற்­று­வார்­கள் என்று நம்­பு­கி­றோம்," என்­றார் நெக்­சஸ் அமைப்­பின் இயக்கு­நர் கர்­னல் கோ ஜெரிக்கா.

முழு­மைத் தற்­காப்பு தொடர்­பிலான நட­வ­டிக்­கை­களையும் கண்­காட்­சி­களையும் சிங்­கப்­பூர் தேசிய அரும்­பொ­ரு­ள­கம், தேசிய நூலக வாரி­யம், சிங்­கப்­பூர் டிஸ்­க­வரி நிலை­யம் போன்ற இடங்­களில் காணலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!