இரண்டாம் உலகப் போரில் மாண்டோருக்குத் தொடர் மரியாதை

இரண்­டாம் உல­கப் போரில் மாண்­டோ­ருக்கு 80 ஆண்­டு­க­ளுக்­குப் பிற­கும் உற­வி­னர்­கள் தொடர்ந்து மரி­யாதை செலுத்தி வரு­கின்­ற­னர். இரண்­டாம் உல­கப் போரின்­போது ஜப்­பா­னி­யர்­க­ளால் கொல்­லப்­பட்­டோ­ருக்கு பீச் ரோட்டில் உள்ள நினை­வ­க­த்­துக்­குச் சென்று உற­வி­னர்­கள் இன்­றும் மரி­யாதை செலுத்­து­கின்­ற­னர்.

இரண்­டாம் உல­கப் போர் நிகழ்ந்த காலத்­தில் வாழ்ந்­தோ­ரில் தற்­போது உயி­ரோடு இருப்­போ­ரின் எண்­ணிக்கை மிக­வும் குறைவு என்று மாண்­டோ­ரின் உற­வி­னர்­கள் சிலர் குறிப்­பிட்­ட­னர். இரண்­டாம் உல­கப் போர் நினை­வு­கள் இளம் சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே குறைந்­து­கொண்டே வரு­வ­தைச் சொல்லி இவர்­கள் வருத்­தப்­ப­டு­கின்­ற­னர்.

இரண்­டாம் உல­கப் போரில் ஜப்­பா­னி­யர்­கள் ஆட்­சி­யில் மாண்ட சிங்­கப்­பூர் பொது­மக்களுக்கு மரி­யாதை செலுத்­தும் சடங்கு முழு­மைத் தற்­காப்பு தின­மான நேற்று 55வது முறை­யாக நடை­பெற்­றது. 1942ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதம் 15ஆம் தேதி­யன்று சிங்­கப்­பூர் ஜப்­பா­னி­யர்­க­ளின் பிடிக்­குச் சென்­றது.

1967ஆம் ஆண்­டி­லி­ருந்து சிங்­கப்­பூர் சீனர் வர்த்­த­கத் தொழிற்­சபை இச்­ச­டங்கை ஆண்­டு­தோ­றும் நடத்தி வரு­கிறது. இந்த ஆண்­டின் சடங்­கில் கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

"80 ஆண்­டு­க­ளுக்கு முன்பு சிங்­கப்­பூர் ஜப்­பா­னி­யர்­க­ளின் பிடிக்­குள் சென்­ற­போது நமது முன்­னோர்­ பலர் நக­ரின் மையப் பகு­தி­யி­லி­ருந்­து­ கால்நடையாகச் சென்றனர், அதா­வது இப்­போது நாம் இருக்­கும் இடத்திலிருந்து சாங்கி கடற்­கரைக்­குச் சென்­ற­னர்.

"அவர்களில் பலரை அதற்குப் பிறகு காணவில்லை," என்று திரு சான் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!