கூசுத் தீவில் வெளிநாட்டு ஊழியர்களின் உல்லாசச் சுற்றுலா

கி.ஜனார்த்­த­னன்

வெளி­யில் முழு சுதந்­தி­ரத்­து­டன் நட­மாட இய­லா­மல், வேலை­யி­டம், தங்­கு­வி­டுதி என முடங்கி இருந்த வெளி­நாட்டு ஊழி­யர்­களில் ஒரு சில­ருக்கு, கூசுத் தீவுக்­குச் செல்­லும் அரிய வாய்ப்பு கிடைத்­தது.

மனி­த­வள அமைச்­சின் 'ஃபாஸ்ட்' குழு­வைச் சேர்ந்த உறுப்­பி­னர்­கள் உட்­பட 51 பேர், இந்­தச் சுற்­று­லா­வில் பங்­கேற்­ற­னர். தங்­கு­வி­டுதி ஊழி­யர்­க­ளுக்­கும் நடத்­து­நர்­க­ளுக்­கும் ஃபாஸ்ட் குழு உதவி வரு­கிறது.

உட்­லண்ட்ஸ் தங்­கு­வி­டுதி, நார்த் கோஸ்ட் தங்­கு­வி­டுதி ஆகிய விடுதி­ க­ளி­லும் கேலாங் பிஆர்பி சென்ட்­ர­லில் உள்ள வீடு­க­ளி­லும் தங்­கிய ஊழி­யர்­கள் இதில் கலந்­து­கொண்­ட­னர். ஜன­வரி 30ஆம் தேதி காலை 11 மணிக்­குத் தொடங்கி பிற்­ப­கல் 3 மணிக்கு முடி­வுற்­றது அவர்­களின் பய­ணம். கூசுத் தீவி­லுள்ள இயற்­கைக் காட்­சி­கள், கடற்­க­ரை­கள், 'துவா பெக் கோங்' சீனக் கோவில், முஸ்­லிம் பெரு­மக்­கள் மூவ­ரின் கல்­ல­றை­கள் அடங்­கிய 'கிரா­மாட்' நினை­வி­டம் போன்ற பல இடங்­களை ஊழி­யர்­கள் சுற்­றிப் பார்த்­த­னர்.

ஊழி­யர்­க­ளு­டன் சென்­றி­ருந்த மனி­த­வள அமைச்சு அதி­கா­ரி­கள், தங்­கள் வீட்­டில் செய்து வைத்­தி­ருந்த தின்­பண்­டங்­களை அவர்­களு­டன் பகிர்ந்துகொண்­ட­னர். அனை­வ­ரும் ஒன்­றாக மதிய உணவு சாப்­பிட்ட பின்­னர் விளை­யாட்­டு­களில் ஈடு­பட்­ட­னர்

பய­ணத்­தில் பங்­கு­பெற்­றவர் களில் ஒரு­வரான நாகப்­பட்­டி­னத்­தைச் சேர்ந்த கட்­டு­மான ஊழி­யர் வீர­பத்­தி­ரன் சர­வ­ணன், 38, தீவி­லுள்ள சீனக் கோயில்­க­ளைக் கண்டு ரசித்­த­தா­கக் கூறி­னார். சிங்­கப்­பூ­ரின் பழங்­கால வர­லாறு பற்றி மேலும் தெரிந்­து­கொள்­ளும் இது­போன்ற வாய்ப்பு எங்­க­ளுக்கு அதி­கம் கிடைப்­ப­தில்லை என்று அவர் கூறி­னார்.

தமி­ழ­கத்­தின் புதுக்­கோட்டை மாவட்­டத்­தி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு 2000ஆம் ஆண்டு வேலைக்கு வந்­தார் கல்­யாணி கண்­ணன், 47.வெவ்­வேறு நாடு­க­ளைச் சேர்ந்த தாம் அனை­வ­ரும் அன்­பு­டன் பழ­கி­யது மிக­வும் பிடித்­தி­ருந்­த­தாக அவர் குறிப்­பிட்­டார்.

இரண்டு ஆண்­டு­க­ளாக நீடித்­துள்ள நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­கள் சங்­க­டத்தை ஏற்­ப­டுத்தி இருந்­தா­லும் இத்­த­கைய சிறிய நட­வ­டிக்­கை­க­ளின் மூலம் அர­சாங்­கம் தங்­கள் மீது கொண்­டுள்ள அக்­க­றையை உணர்­வ­தாக அவர் கூறி­னார்.

'சிண்டோ' பய­ணக் கப்­பல் நிறு­வனம் ஊழி­யர்­கள் அனை­வ­ருக்­கும் பட­குப் பய­ணத்­துக்­கான நுழை­வுச் சீட்­டு­களை இல­வ­ச­மாக வழங்­கி­யது.

"ஊழி­யர்­களில் பலர் மகிழ்ச்சி அடைந்­த­தைக் கண்­டேன். பலர் இதற்கு முன்­ன­தாக இத்­த­கைய பட­கில் சென்­ற­தில்லை," என்று சுற்­றுலா ஏற்­பாட்­டா­ளர்­களில் ஒரு­வரும் மனி­த­வள அமைச்சு தொண்­டூ­ழி­ய­ரு­மான கணே­சன் தெரி­வித்­தார். இத்­த­கைய நட­வ­டிக்­கை­கள் ஊழி­யர்­க­ளுக்கு உற்சாகத்தைத் தரு­கிறது என்று அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!