ஒரு சொடுக்கில் இனி தமிழ் முரசு இலவசம்

பல்லாண்டு கால வரலாற்றைப் பெற்றுள்ள தமிழ் முரசு நாளிதழ், அதன் மின்னிலக்கப் பயணத்தைத் தொடங்கியதை அடுத்து, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குக் கற்றல், கற்பித்தலிலும் கைகொடுக்கவுள்ளது. புதிய 'உங்கள் விரல்நுனியில் செய்திகள்' திட்டத்தின்வழி இனி திங்கள்கிழமைகளில் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் தமிழ் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழ் முரசின் மின்னிலக்கப் பதிப்பு இலவசமாக வழங்கப்படவுள்ளது. இப்புதிய திட்டம் குறித்த மேல்விவரங்களையும் மாணவர்கள், ஆசிரியர்களின் கருத்துகளையும் தொகுத்து வழங்குகிறது இவ்வார இளையர் முரசு.

மாதங்கி இளங்­கோ­வன்

தமிழ் முரசு நாளி­த­ழில் இடம்­பெ­றும் இளை­யர் முரசு பக்­கம், 1999ஆம் ஆண்­டு­மு­தல் சிங்­கப்­பூர் இளை­யர்­க­ளின் தமிழ்ப் பாடங்­களில் முக்­கி­யப் பங்கு ஆற்றி வரு­கிறது. இளை­யர்­கள் புரிந்து வரும் சாத­னை­கள், அவர்­க­ளின் படைப்­பு­கள் எனப் பல்­வேறு சுவா­ர­சி­ய­மான அங்­கங்­கள் இளை­யர் முர­சில் ஒவ்­வொரு வார­மும் இடம்­பெற்று வரு­கின்­றன.

மாண­வர்­க­ளின் கற்­ற­லுக்கு உறு­து­ணை­யாக இளை­யர் முர­சுப் பக்­க­மும் தமிழ் முரசு நாளி­த­ழும் விளங்க, கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று 'உங்­கள் விரல் நுனி­யில் செய்­தி­கள்' என்ற புதிய திட்­டம் தொடங்­கப்­பட்­டது.

இதன்­படி கல்வி அமைச்­சின்­கீழ் இயங்­கும் அனைத்து உயர்­நி­லைப்­பள்­ளி­க­ளுக்­கும் தமிழ் முர­சின் மின் நாளி­தழ் இல­வ­ச­மாக வழங்­கப்­ப­ட­வி­ருக்­கிறது.

அக­மது இப்­ரா­ஹிம் உயர்­நி­லைப்­பள்­ளி­யில் கல்வி அமைச்சு, நீ ஆன் கொங்சி, எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட் (எஸ்­எம்டி) ஆகிய முத்­த­ரப்­பி­ன­ரும் கையொப்­ப­மிட்ட புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தப்­படி புதிய திட்­டம் அமல்­ப­டுத்­தப்­படும்.

ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தான நிகழ்­வின்­போது அக­மது இப்­ரா­ஹிம் உயர்­நி­லைப்­பள்­ளி­யைச் சேர்ந்த தமிழ் மாண­வர்­கள், தங்­க­ளு­டைய மொழிக் கற்­ற­லுக்கு தமிழ் முரசு மற்­றும் அதில் இடம்­பெ­றும் இளை­யர் முரசு பக்­கம் எவ்­வாறு கைகொ­டுத்­துள்­ளன என்­பதை கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் மற்­றும் எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட் தலை­வர் கோ பூன் வான் ஆகிய இரு­வ­ருக்­கும் விளக்­கி­னார்­கள்.

தமிழ் முர­சில் வெளி­யான படங்­கள், இணை­யக் காணொ­ளி­கள் போன்­ற­வற்­றைப் பயன்­ப­டுத்தி தமிழ்­மொழி மீது தாங்­கள் கொண்­டுள்ள ஆர்­வத்­தை­யும் மொழி­யின் பெரு­மை­யை­யும் தங்­க­ளின் பேச்­சின் மூலம் மாண­வர்­கள் வெளிப்­ப­டுத்­தி­னர்.

"செய்­தித்­தாள் படிக்­கும்­போது, உல­கில் நடக்­கும் பிரச்­சி­னை­க­ளைப் பற்றி எங்­க­ளால் அறிந்­து­கொள்ள முடி­கிறது. தேர்­வு­க­ளுக்­குத் தக­வல் சேக­ரிக்­க­வும் செய்­தித்­தாள் உதவு­கிறது," என்று உயர்­நிலை நான்­கில் பயி­லும் ஜானுப்­பி­ரியா கும­ர­வேல் கூறி­னார்.

உயர்­நிலை மூன்­றில் படிக்­கும் நூருள் மர்­லியா, "செய்­தித்­தாள் படிப்­ப­தால் என்­னு­டைய பேச்­சுத்­தமி­ழில் முன்­னேற்­றம் தெரி­கிறது. இத­னால் வாய்­மொ­ழித் தேர்­வு­களின்­போ­தும் என்­னால் சிறப்­பா­கப் பேச முடி­கிறது. செய்­தித்­தா­ளில் அறிந்­தி­டும் தக­வல்­களை வாய்­மொழித் தேர்­வில் கருத்­து கூறப் பயன்­ப­டுத்­து­கி­றேன். என்­னு­டைய எழுத்­தி­லும் முன்­னேற்­றம் உள்­ளது," என்­றார்.

இளை­யர் முர­சில் உயர்­நி­லைப்­பள்ளி மாண­வர்­க­ளுக்­கெ­னச் சிறப்பு அம்­சங்­கள் இடம்­பெற்­றால் அந்த மாண­வர்­கள் இதழ்­களை மேலும் விரும்­பிப் படிப்­பார்­கள் என்று இரு மாண­வி­ய­ரும் குறிப்­பிட்­ட­னர்.

அத்­து­டன் இளை­யர்­கள் எழு­தும் கதை­கள், கட்­டு­ரை­கள் வெளி­யி­டப்­பட்­டால் தமிழ்­மொ­ழி­யில் மாண­வர்­க­ளின் ஆர்­வத்­தை­யும் படைப்­பாற்­ற­லை­யும் ஊக்­கு­விக்­க­லாம் என்­றும் அவர்­கள் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

"தற்­போது சொல்­வ­ளத்­தைப் பெருக்­கிக்­கொள்ள மாண­வர்­கள் தமிழ் முரசை வகுப்­பில் பயன்­படுத்து ­கி­றார்­கள். இத்­து­டன் தங்­க­ளின் கட்­டு­ரைக்­குப் பொருத்­த­மான தக­வல்­க­ளை­யும் கண்­ட­றி­வ­தற்­குப் பயன்­ப­டுத்­து­கி­றார்­கள்," என்று அக­மது இப்­ரா­ஹிம் உயர்­நி­லைப்­பள்­ளி­யின் தமிழ்­மொ­ழித் துறை ஒருங்­கி­ணைப்­பா­ளர் திரு பால­விநா­ய­கம் குறிப்­பிட்­டார்.

'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சின் 2021ஆம் ஆண்­டுக்­கான சிறந்த சிங்­கப்­பூ­ரர்' விருது சக்­தி­பா­லன் பால­தண்­டா­யு­தம், 28, என்­ப­வ­ருக்கு வழங்­கப்­பட்­டது. இவர் அக­மது இப்­ரா­ஹிம் உயர்­நி­லைப் பள்­ளி­யின் முன்­னாள் மாண­வர் என்று பெரு­மி­தத்­து­டன் நிகழ்­வின்­போது கூறப்­பட்­டது. தமக்கு அறி­மு­க­மில்­லாத ரேயா என்ற குழந்­தைக்கு திரு சக்­தி­பா­லன் தமது கல்­லீ­ர­லின் ஒரு பகு­தியைத் தானம் செய்­தி­ருந்­தார்.

இதைப்­பற்றி தமிழ் முரசு நாளி­தழ் செய்தி வெளி­யிட்­டதை அடுத்து விருதை அவர் தட்­டிச் சென்­றதை அனைத்து மொழி நாளி­தழ்­களும் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தன.

தமிழ்ச் சமூ­கத்­தி­லும் சமு­தாயத்­தி­லும் முன்­னு­தா­ர­ண­மாக விளங்­கும் நபர்­க­ளுக்­குத் தகுந்த அங்­கீ­கா­ரம் அளிக்­கும் உள்­ளூர் நாளி­த­ழாக தமிழ் முரசு விளங்­கு­கிறது என்று அக­மது இப்­ரா­ஹிம் உயர்­நி­லைப் பள்­ளி­யின் தமிழ் ஆசி­ரி­யர்­களும் மாண­வர்­களும் பகிர்ந்து­கொண்­ட­னர்.

சக்­தி­பா­லன் போன்ற இளை­யர்­க­ளின் நற்­செ­யல்­க­ளைப் பற்­றி­யும் இதர இளை­யர்­க­ளின் சாத­னைப் பய­ணங்­க­ளைப் பற்­றி­யும் படிக்­கும் மாண­வர்­கள், தாங்­களும் வாழ்க்­கை­யில் முன்­னே­ற­வும் நற்­பணி ஆற்­ற­வும் ஊக்­கம் பெறு­வர் என்று எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட் நம்­பு­கிறது.

இந்த நம்­பிக்­கைக்கு ஏற்ப தமிழ் முரசு மற்­றும் அதில் இடம்­பெ­றும் இளை­யர் முரசு இவ்­வி­ரண்­டும் மாண­வர்­க­ளின் தமிழ்­மொ­ழிப் புழக்­கத்தை அதி­க­ரிக்­கச் செய்­யும். அத்­து­டன் மாண­வர்­க­ளது சொல்­வ­ளத்­தைப் பெருக்­கும் நோக்­கத்­து­ட­னும் தொடர்ந்து தர­மான செய்­தி­களை வெளி­யிட முனை­யும்.

சமூக ஊடகங்களில் வலம்வரும் தமிழ் முரசு

தமிழ் முரசின் இன்ஸ்டகிராம் பக்கம் (@tamil_murasu), டிக்டாக் கணக்கு (tamilmurasu_sg), யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்கள் என வெவ்வேறு சமூக ஊடகத் தளங்களில் இளையர்களுக்காகவே தனித்துவமான காணொளிகளும் படச் செய்திகளும் இடம்பெறுகின்றன. தமிழ் முரசின் இணையப் பக்கத்திலும் காணொளிகள், வலையொலிப் பதிவுகள் ஆகியவற்றைப் பார்த்தும் கேட்டும் ரசிக்கலாம்.

 

மாணவர்களுக்கான முரசு

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக பிரசுரிக்கப்படும் தமிழ் முரசின் மாணவர் முரசு இதழையும் இளையர்களுக்காக வெளிவரும் இளையர் முரசு பக்கத்தையும் தமிழ் முரசின் திங்கள்கிழமை பதிப்பில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். தொடக்கநிலை மாணவர்களுக்கான சிறப்புக் கட்டுரைகளை மாணவர் முரசு வாரந்தோறும் தாங்கி வருகிறது. இளையர் முரசு இளையர்களின் சாதனைகள், இளையர் சார்ந்த தகவல்கள், கட்டுரைகள், அவர்களது படைப்புகள் ஆகியவற்றை ஏந்தி வருகிறது. மாணவர் முரசு, இளையர் முரசு இரண்டும் மாணவர்களிடையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தை வளர்த்து வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!