வேலையிட மரணங்கள் அதிகரிப்பு

சிங்­கப்­பூ­ரில் கடந்த ஆண்டு 37 வேலை­யிட மர­ணங்­கள் பதி­வா­கின. கொவிட்-19 நெருக்­க­டி­

நி­லைக்கு முன்பு 2019ஆம் ஆண்­டில் பதி­வான 39 வேலை­யிட மர­ணங்­களை இது நெருங்­கி­யுள்­ளது.

2020ஆம் ஆண்­டில் 30 பேர் வேலை­யி­டங்­களில் ஏற்­பட்ட விபத்து ­கள் கார­ண­மாக மாண்­ட­னர்.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக பல வேலை­யி­டங்­களில் பணி­கள் தடை­பட்­ட­தால் 2020ஆம் ஆண்­டில் வேலை­யிட மரண எண்­ணிக்கை வெகு­வா­கக் குறைந்­த­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

வேலை­யிட மர­ணங்­க­ளைத் தவிர்க்க நிறு­வ­னங்­களில் கண்­

கா­ணிப்பை மேம்­ப­டுத்­த­வும் ஊழி­யர்­க­ளுக்­குக் கூடு­தல் பயிற்சி அளிக்­க­வும் மனி­த­வள அமைச்சு தயா­ராக இருக்­கிறது.

2019ஆம் ஆண்­டி­லும் கடந்த ஆண்­டி­லும் வேலை­யிட மரண விகி­தம் ஒவ்­வொரு 100,000 ஊழி­யர்­

க­ளுக்கு 1.1ஆகப் பதி­வா­னது.

வேலை­யிட மரண விகி­தத்தை ஒவ்­வொரு 100,000 ஊழி­யர்­க­ளுக்கு ஒன்­றுக்­குக் கீழ் கொண்டுவருவதே சிங்­கப்­பூ­ரின் இலக்கு.

இந்த இலக்கை 2028ஆம் ஆண்­டுக்­குள் எட்ட சிங்­கப்­பூர் இலக்கு கொண்­டி­ருப்­ப­தா­க­வும் இதை அடைய திட்­ட­மிட்­டப்­படி எல்­லாம் சரி­யாக நடந்­து­கொண்­டி­ருப்­ப­தா­க­வும் மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது தெரி­வித்­தார்.

வேலை­யி­டத்­தில் ஊழி­யர்­கள் காயம் அடை­வ­தை­யும் மர­ண­ம­டை­வ­தை­யும் தவிர்க்க வேலை­யி­டங்­களில் உள்ள கரு­வி­கள், பாது­காப்­பான முறை­யில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதை உறுதி செய்ய தவ­றிய முத­லா­ளி­கள் மற்­றும் நிறு­வ­னங்­க­ளுக்கு மேலும் கடு­மை­யான அப­ரா­தங்­கள் விதிக்­கப்­படும். குறிப்­பாக, உற்­பத்­தித்­து­றைக்கு இது பொருந்­தும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

சத்­தம் அதி­க­முள்ள, ரசா­ய­னப் புழக்­க­முள்ள வேலை­யி­டங்­களில் கண்­கா­ணிப்பு அதி­க­ரிக்­கப்­படும். அங்கு வேலை­யில் சேரும் புதிய ஊழி­யர்­க­ளுக்­குக் கூடு­தல் பயிற்சி அளிக்­கப்­படும்.

"வேலை­யி­டங்­கள் தொடர்ந்து பாது­காப்­பா­ன­தாக இருப்­பதை உறுதி செய்­வ­தில் அனை­வ­ரும் பொறுப்­பு­டன் நடந்­து­கொள்ள வேண்­டும்," என்­றார் திரு ஸாக்கி.

ஊழி­யர்­க­ளுக்­குப் பாது­காப்­பான சூழலை அமைத்­துத் தர­வும் சுகா­தா­ரத்­தைக் காக்­க­வும் முத­லா­ளி­கள் கடப்­பாடு கொண்­டி­ருக்க வேண்­டும் என அவர் வலி­யு­றுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!