நெருக்கடி காலத்தில் மிளிர்ந்த தலைமைத்துவ பண்புகள்

மசெகவின் 4ஆம் தலைமுறைத் தலைவராகத் தேர்வு பெற்றுள்ள அமைச்சர் லாரன்ஸ் வோங்

பெருந்­தொற்று நெருக்­கடி காலத்­தின்­போது, நிதி அமைச்­சர் மற்­றும் கொவிட்-19 நோய்ப்­ப­ர­வ­லுக்கு எதி­ரான அமைச்­சு­கள்­நி­லைப் பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வர் ஆகிய பொறுப்­பு­களில் திரு லாரன்ஸ் வோங் (படம்) வெளிப்­ப­டுத்­திய தலை­மைத்­துவ பண்­பு­கள், மக்­கள் செயல் கட்­சி­யின் (மசெக) நான்­காம் தலை­மு­றைக் குழு­வுக்கு தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­ட­தற்கு முக்­கிய கார­ணங்­கள் என்று அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

நெருக்­கடி கால நிர்­வா­கத்­தி­லும் கொள்­கை­க­ளைக் கையாள்­வ­தி­லும் அவ­ருக்கு உள்ள அனு­ப­வம் அவரை நம்பகத்தன்மைமிக்க தலை­வ­ராக அடை­யா­ளம் காட்­டி­யி­ருக்­கிறது.

அடுத்த பொதுத் தேர்­தல் வரு­வ­தற்கு இன்­னும் மூன்று ஆண்­டு­கள் இருக்­கும் நிலை­யில், நான்­காம் தலை­மு­றைக் குழு­வின் தலை­வர் என்ற முறை­யில் சிங்­கப்­பூர் வாக்­கா­ளர்­க­ளி­டம் தமது அர­சி­யல் ஆத­ர­வைப் பலப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்று அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கருத்­து­ரைத்­த­னர்.

நான்­காம் தலை­மு­றைக் குழுவை வழி­ந­டத்­தும் தலை­வ­ராக 49 வயது திரு வோங்கை தாங்­கள் ஆத­ரிப்­ப­தாக அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்­கள் ஏக­ம­ன­தாக முடி­வெ­டுத்­துள்­ள­னர் என்று பிர­த­மர் லீ சியன் லூங் நேற்று முன்­தி­னம் அறி­வித்­தார்.

அந்த முடி­வுக்கு பின்­னர் நடந்த கட்சிக் கூட்­டத்­தில் மசெ­க­வின் அனைத்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஒப்­பு­தல் அளித்­த­னர்.

"2020 ஜன­வ­ரி­யில் அமைக்­கப்­பட்ட கொவிட்-19 நோய்ப்­ப­ர­வ­லுக்கு எதி­ரான அமைச்­சு­கள்­நி­லைப் பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வர் பொறுப்­பேற்­றி­ருந்த திரு வோங், நெருக்­கடி காலத்­தில் தமது தலை­மைத்­துவ பண்­பு­க­ளைச் சிறப்­பாக வெளிக்­காட்­டி­னார்," என்று மூத்த ஆய்­வா­ளர் டாக்­டர் வூ ஜுன் ஜி கூறி­னார்.

இவ்­வாண்டு அர­சாங்­கத்­தின் வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தைத் தாக்­கல் செய்த திரு வோங், ஒரு பிர­த­ம­ருக்கு இருக்­க­வேண்­டிய உயர்­தர தலை­மைத்­துவ பண்­பு­களை தமது அறிக்­கை­யில் வெளிப்­ப­டுத்­தி­னார்.

பொருள், சேவை வரி அதி­க­ரிக்­கப்­ப­டு­வ­தன் அவ­சி­யத்தை மிகத் தெளி­வாக விளக்­கிய திரு வோங், அந்த உயர்வு வசதி குறைந்­த­வர்­க­ளைப் பாதிக்­காது என்­றும் அதை ஈடு­கட்­டும் வகை­யில் நட­வ­டிக்­கை­களை அறி­வித்­தது கவ­ரும் விதத்­தில் இருந்­தது என்று சிலர் கூறி­னர்.

"கொவிட்-19 நிலை­மை­யை­யும் நிதி அமைச்­சர் பொறுப்­பை­யும் திரு வோங் சிறப்­பா­கக் கையாண்­டார்," என்று முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு இந்­தர்­ஜித் சிங் தெரி­வித்­தார்.

நான்­காம் தலை­மு­றைக் குழு­வின் தலை­வ­ரைத் தேர்ந்­தெ­டுக்­கும் போட்டியில் சில இளம் அமைச்­சர்­க­ளுக்கு இடையே கடும் போட்டி நில­வி­னா­லும் தமக்­குக் கொடுக்­கப்­பட்ட பொறுப்­பு­களில் மிளிர்ந்து தமது மூத்த அமைச்­ச­ரவை சகாக்­களின் நம்­பிக்­கையை திரு வோங் வென்­றுள்­ளார் என்­றும் திரு சிங் கருத்­து­ரைத்­தார்.

"திரு வோங் அமை­தி­யா­கக் காணப்­ப­டு­ப­வர். எதை­யும் ஆழ்ந்து சிந்­தித்து தமது பேச்­சுத்திற­னால் எதை­யும் தெளி­வாக விளக்­கக்­கூடிய ஆற்றல் பெற்­ற­வர். இத­னால் அவ­ருக்கு அனைத்­து­லக அரங்­கில் வர­வேற்பு கிடைக்­கும்," என்­றார் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சமூ­க­வி­யல் இணைப் பேரா­சி­ரி­யர் டான் எர்ன் செர்.

முன்­னாள் அர­சாங்க அதி­காரி யான திரு வோங், 2011 பொதுத் தேர்­த­லில் போட்­டி­யிட்டு வென்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­னார்.பின்­னர் 2014ல் முழு அமைச்சரா­னார். திரு வோங் இது­வரை கலா­சார, சமூக, இளை­யர்­துறை; தேசிய வளர்ச்சி; கல்வி; நிதி அமைச்­சர் ஆகிய பொறுப்­பு­களை ஏற்­றுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!