வேலைச் சந்தையில் அதிக வெளிநாட்டு ஊழியர்கள்

நாட்­டின் எல்­லை­கள் படிப்­ப­டி­யாக மீண்­டும் திறக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் நிறு­வ­னங்­கள் கூடு­த­லான வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலைக்கு எடுப்­ப­தா­கக் கூறப்­பட்­டுள்­ளது.

இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.

கட்­டு­மா­னத் துறை­யில் 'ஒர்க் பெர்­மிட்' எனப்­படும் வேலை அனு­ம­திச் சீட்டு வைத்­தி­ருக்­கும் ஊழி­யர்­கள் மீண்­டும் வேலைக்கு அமர்த்­தப்­ப­டு­வ­தால் இது சாத்­தி­ய­மா­ன­தாக மனி­த­வள அமைச்­சின் முன்­னோடி மதிப்­பீட்­டில் தெரி­ய­வந்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் 2022ன் முதல் காலாண்­டுக்­கான மொத்த வேலை­வாய்ப்பு உயர்­வில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் பங்கு கணி­ச­மா­னது என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

வேலை­பார்க்­கும் சிங்­கப்­பூர்­வாசி­க­ளைக் காட்­டி­லும் இவர்­க­ளின் எண்­ணிக்கை குறிப்­பி­டத்­தக்க அளவு அதி­கம் என்று அது கூறி­யது.

வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்­க­ளைத் தவிர்த்து சிங்­கப்­பூ­ரில் இந்த ஆண்­டின் முதல் காலாண்­டுக்­கான மொத்த வேலை­வாய்ப்பு 41,000க்கும் மேல் அதி­க­ரித்­த­தா­கக் கூறப்­பட்­டது.

சென்ற ஆண்­டின் நான்­காம் காலாண்­டை­விட இது குறைவு என்­றா­லும், இந்த ஆண்­டின் முதல் காலாண்­டி­லும் மொத்த வேலை­வாய்ப்பு எண்­ணிக்கை மிக­வும் அதி­க­ரித்­த­தாக அமைச்சு கூறி­யது. 2021ன் இறு­திக் காலாண்­டில் மொத்த வேலை­வாய்ப்பு எண்­ணிக்கை 47,900 அதி­க­ரித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!