ஆசிய ஊடக விருதுகளில் தமிழ் முரசு செய்தியாளருக்கு விருது

தமிழ் முரசு துணை செய்தியாசிரியர் இர்‌‌‌ஷாத் முஹம்மது, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்களுடன் இணைந்து எழுதிய செய்தி ஆசிய ஊடக விருதுகளில் தங்க பதக்கம் வென்றுள்ளது.

WAN-IFRA எனும் உலகச் செய்தி பதிப்பாளர்கள் சங்கத்தின் ஆசிய ஊடக விருதுகள் 2022 நிகழ்ச்சியில் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு மொத்தம் நான்கு விருதுகள் கிடைத்தன.

நான்கு ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்களுடன் இணைந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தஞ்சோங் பகாரில் நடந்த சாலை விபத்து குறித்து தமிழ் முரசின் திரு இர்ஷாத் முஹம்மது எழுதிய “தீப்பற்றிய கார் விபத்தில் ஐவர் மரணம்” எனும் செய்தி தலைசிறந்த உடனடிச் செய்தியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

நீதிமன்றச் செய்தி தொகுப்பாளர் டேவிட் சன், போக்குவரத்துச் செய்தியாளர் கோக் யுஃபெங், செய்தியாளர் ஃபேபியன் கோ, பல்லூடகச் செய்தியாளர் சியோ சூ-ஆன், செய்தியாளர் எங் வெய் காய் ஆகியோருடன் இணைந்து இவ்விருதினை திரு இர்ஷாத் வென்றுள்ளார்.

“சீனப் புத்தாண்டின் இரண்டாவது நாளானது, என்னுடைய பணியில் மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது. அன்று அதிகாலை நடந்த சாலை விபத்து குறித்து செய்தி திரட்டும் பணி கொடுக்கப்பட்டபோது, ஐந்து பேர் பலியான ஒரு கொடூரமான சம்பவமாக அது இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. சம்பவ இடத்துக்குச் சென்றபோதுதான் அதன் வீரியம் எங்களுக்கு தெரிந்தது,” என்று திரு இர்ஷாத் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

அன்று காலை, சடலங்கள் தூக்கி செல்லப்படாத நிலையிலிருந்து, மூடப்பட்ட சாலைகள் திறக்கப்படும் வரை, செய்திகளை மக்களுக்கு இணையத்தளம் மூலம் கொண்டு சேர்க்க ஒரு குழுவாக இயங்கினர் இச்செய்தியாளர்கள்.

“எந்தவொரு திட்டமும் இன்றி, திடீரென ஒரு குழு நடவடிக்கையில் தள்ளப்பட்டது போன்றதோர் உணர்வு ஏற்பட்டது. இருப்பினும், ஒருவருடன் ஒருவர் கைகோர்த்து அன்று நடந்தவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினோம்,” என்றார் அவர்.

விருதுகள் வென்றதை குறித்து கருத்து தெரிவித்த எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருவாட்டி டியோ லே லிம், “செய்தித்தாள் வடிவமைப்பு, கட்டுரைக் கருத்துகள், புகைப்பட இதழியல், தகவல் வரைகலை, விளம்பரம் ஆகியவற்றில் தலைசிறந்த பதிப்புத் தரங்களை ஊக்குவிக்கும் நோக்கமுடைய இந்த வருடாந்திர விருது நிகழ்வில் நாம் நான்கு விருதுகளைப் பெற்றுள்ளோம். செய்தித்தாள் பதிப்புத் துறையில் நாம் தலைசிறந்து விளங்குகிறோம் என்பதற்கு நமது செய்தியாளர்களின் சாதனைகளே சான்று,” என்றார்.

விளையாட்டுப் புகைப்படப் பிரிவில் தங்க பதக்கம் வென்றார், சாவ்பாவின் புகைப்படச் செய்தியாளர் திரு குவோங் காய் சுங். அதே பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்றார், ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸின் புகைப்படச் செய்தியாளர் கெவின் லிம்.

தலைசிறந்த நாளிதழ் விளம்பரப் பிரிவில் வான்பாவ் நாளிதழின் வாசகர்களை ஷின் மின் நாளிதழின் பக்கம் ஈர்க்க முயன்ற விளம்பரத்துக்காக எஸ்பிஎச் மீடியா டிர்ஸ்ட் நிறுவனத்துக்கு வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!