புக்கிட் மேரா, குவீன்ஸ்டவுனில் புதிய ‘பிடிஓ’ வீடுகள்

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் புதி­தாக இரண்டு இடங்­களில் தேவைக்­கேற்ப கட்­டப்­படும் வீடு­களை ('பிடிஓ') விற்­ப­னைக்கு விட­வுள்­ளது.

இந்த மாத இறு­தி­யில் விற்­ப­னைக்கு விடப்­படும் மொத்தம் ஐந்து நிலப்­ப­கு­தி­களில் புக்­கிட் மேரா, குவீன்ஸ்­ட­வுன் ஆகி­ய­வற்­றில் அமை­ய­வி­ருக்­கும் இந்த வீடு­க­ளுக்­கான இடங்­களும் அடங்­கும். புக்­கிட் மேரா­வில் ஏறக்­கு­றைய 1,660 மூன்­றறை, நான்­கறை வீடு­கள் கட்­டப்­படும்.

ஹெண்­டர்­சன், தியோங் பாரு, லோவர் டெல்டா சாலை­க­ளுக்கு அருகே இவற்­றுக்­கான நிலப்­பகுதி அமைந்­துள்­ளது.

குவீன்ஸ்­ட­வு­னில் கிட்­டத்­தட்ட 860 மூன்­றறை, நான்­கறை வீடு­கள் கட்­டப்­ப­ட­வி­ருக்­கின்­றன. இவற்­றுக்­கான நிலப்­பகுதி கிம் மோ ரோட்­டில் போனா விஸ்டா ரயில் நிலை­யத்­திற்கு அருகே அமைந்­துள்­ளது.

'பிரைம் லோக்­கே­ஷன் பப்­ளிக் ஹவு­சிங்' எனப்­படும் 'பிஎல்­எச்' வகை­யைச் சேர்ந்த இந்த வீடு­களுக்கு விற்­பனை தொடர்­பில் கடு­மை­யான விதி­மு­றை­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

குறைந்­தது 10 ஆண்­டு­கள் உரி­மை­யா­ளர்­கள் இவற்­றில் குடி­யி­ருக்க வேண்­டும் என்­ப­தும் விதி­களில் ஒன்று. இம்மாதம் ஏறக்குறைய 4,500 'பிடிஓ' வீடுகள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!