தீவு விரைவுச்சாலையில் இரு வேறு விபத்துகள்

சாங்கி விமான நிலை­யத்தை நோக்­கிச் செல்­லும் தீவு விரை­வுச்சாலை­யில் நேற்று முன்­தி­னம் இரவு அரு­க­ருகே இரு வேறு விபத்­து­கள் நடந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

யூனூஸ் மேம்­பா­லத்­துக்கு அருகே நடந்த இரண்டு விபத்­து­கள் குறித்­தும் செவ்­வாய்க்­கி­ழமை இரவு பத்­தரை மணி­ய­ள­வில் தக­வல் கிடைத்­த­தா­கக் காவல்­துறை கூறி­யது.

முத­லா­வ­தில் மோட்­டார் சைக்­கி­ளும் ஒரு காரும் மோதிக்­கொண்­டன. இதன் தொடர்­பில் 38 வயது கார் ஓட்­டு­நர் கைது­செய்­யப்­பட்­டார்.

அவர் மது அருந்­தி­விட்டு வாக­னத்தை ஓட்­டி­ய­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­வ­தா­கக் காவல்­துறை நேற்று தெரி­வித்­தது.

இரண்­டா­வது விபத்­தில் ஏழு கார்­கள் ஒன்­று­டன் ஒன்று மோதிக்­கொண்­ட­தா­கக் கூறப்­பட்­டது. இதில் தொடர்­பு­டைய இரு­வர் சுய­நி­னை­வு­டன் சாங்கி பொது மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­டுள்­ள­னர்.

இவர்கள் மோதிக்­கொண்ட கார்­கள் ஒன்­றின் 50 வயது ஓட்­டு­ந­ரும், அதில் இருந்த 54 வயது பய­ணி­யும் என்று தெரி­கிறது.

மேலும் மூவ­ருக்கு லேசான காயங்­கள் ஏற்­பட்­ட­தாக சிங்­கப்­பூர்க் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது. இவர்­கள் மருத்­து­வ­ம­னைக்­குச் செல்ல மறுத்து­விட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

'டிக்­டாக்'கில் பதி­வேற்­றப்­பட்டு பின்­னர் 'ஃபேஸ்புக்'கில் பகி­ரப்­பட்ட காணொளி ஒன்­றில் தீவு விரை­வுச்­சா­லை­யின் வலக்­கோ­டித் தடத்­தில் ஏழு கார்­கள் மோதிக்­கொண்டு நிற்­பது தெரி­கிறது.

'டொயோட்டா' கார் ஒன்று மற்­றொரு 'டொயோட்டா' காரின் மேல் ஏறி நிற்­ப­தையும், அவ­சர மருத்­துவ உதவி வாக­ன­ம் ஒன்றையும் காணமுடிகிறது.

விபத்­து­கள் குறித்த விசா­ரணை தொடர்­வ­தா­கக் காவல்­துறை தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!