வேலையிட மரணம்: அதிகாரிக்கு சிறை

கட்­டு­மான ஊழி­ய­ரின் உயி­ரைப் பறிக்­கும் அள­வுக்கு கவ­னக்­

கு­றை­வாக நடந்­து­கொண்ட கட்­டு­மா­னத்தள மேற்பார்வை அதிகாரிக்கு நேற்று 11 மாத சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. கோங் சியூ ஃபூக், 55, எனப்­படும் அந்த மலே­சி­யர், ஸ்ப்ரிங்­வியூ எண்­டர்­பி­ரை­சஸ் என்­னும் நிறு­வ­னத்­தில் வேலை செய்­தார்.

ஹவ்­காங் பகு­தி­யில் உள்ள அரூஸூ அவென்யூ பகுதி­யில் 2018 டிசம்­ப­ருக்­கும் 2019 ஆகஸ்ட்­டுக்­கும் இடைப்­பட்ட பகு­தி­யில் இரண்டு மாடி வீடு ஒன்றை இடித்­துக் கட்­டும் திட்­டத்­தின் மேற்­பார்­வை­யா­ள­ராக அவர் இருந்­தார்.

வீட்டை விதி­மு­றைப்­படி இடிப்­

ப­தற்­கான வரை­ப­டங்­க­ளு­டன் கூடிய விவ­ரங்­கள் கோங்­கி­டம் தரப்­பட்­டன.

2019 மார்ச் 4ஆம் தேதி இரண்­டா­வது மாடி­யிலுள்ள சுவர்­களை வெட்டி உடைக்­கு­மாறு ஊழி­யர்­

க­ளுக்கு அவர் உத்­த­ர­விட்­டார். அந்­தப் பணி­களை மேற்­கொண்ட ஊழி­யர்­க­ளின் பெயர் சேன்டோ, பொன்­னிர், டின் ஷஹாப் என்று மட்­டும் தெரி­விக்­கப்­பட்­டன.

சுவர்­களை பாது­காப்பு விதி

­க­ளின்­படி ஊழி­யர்­கள் உடைக்­கி­றார்­களா என்­ப­தைக் கவ­னிக்­கத் தவ­றிய கோங், வேறொரு கட்­டு­மா­னத் தளத்­திற்­குச் சென்று­ விட்­டார்.

ஊழி­யர்­கள் கட்­ட­டத்தை உடைத்­துக்­கொண்­டி­ருந்த போது பால்­க­னி­யின் சிமெண்ட் பலகை (சிலாப்) உடைந்து விழுந்­தது. அத­னுள் சேன்டோ மாட்­டிக்­கொண்­டார். மற்­றோர் ஊழி­ய­ரான பொன்­னிர் தூக்கி எறி­யப்­பட்­டார்.

உட­ன­டி­யாக அங்கு ஓடி­வந்த மற்ற ஊழி­யர்­கள் அகழ்­பொ­றி­யால் சிமெண்ட் பலகையைத் தூக்கி சேன்­டோவை வெளி­யில் இழுத்­த­னர். ஆனால் தலைக்­

கா­யம் கார­ண­மாக அவர், சம்­பவ இடத்­தி­லேயே மாண்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது.

மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட பொன்னிர், பலவித எலும்பு முறிவுகளுக்காக 2 மாதம் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!