அங் மோ கியோவில் டாக்சி மோதி 20 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டவர் மரணம்

டாக்சி மோதி ஏறக்­கு­றைய 20 மீட்­டர் தூரத்­திற்கு நேற்று முன்­தி­னம் இரவு சாலை­யில் இழுத்­துச் செல்­லப்­பட்ட 61 வயது மாது ஒரு­வர் உயி­ரி­ழந்­தார்.

அங் மோ கியோ ஸ்தி­ரீட் 21ல் இரவு 10.25 மணிக்கு இச்­சம்­ப­வம் குறித்து காவல்­து­றைக்­குத் தக­வல் அளிக்­கப்­பட்­டது.

அந்த மாது சம்­பவ இடத்­தி­லேயே இறந்­து­விட்­ட­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யைச் சேர்ந்த மருத்­துவ ஊழி­யர் ஒரு­வர் அறி­வித்­தார்.

டிரான்ஸ்-கேப் டாக்சி நிறு­வ­னத்­தைச் சேர்ந்த 53 வயது ஓட்­டு­நர், கவ­னக்­கு­றை­வு­டன் டாக்­சியை ஓட்டி மர­ணம் விளை­வித்­த­தற்­காக கைது செய்­யப்­பட்­டார்.

அந்­தப் பாத­சாரி மீது டாக்­சியை மோதி­விட்டு, குறிப்­பிட்ட தூரத்­திற்­குச் சென்று 'யூ-டர்ன்' செய்­த­போது­தான் தாம் யாரையோ மோதி­விட்டதை அந்த ஓட்­டு­நர் உணர்ந்­தார்.

இந்­தச் சம்­ப­வத்­தால் அந்த ஓட்டு­நர் மிகுந்த வேதனை அடைந்­த­தா­க­வும் அவரை அமை­திப்­ப­டுத்த அவ­ரு­டைய குடும்­பத்­தார் அழைக்­கப்­பட்­ட­தா­க­வும் கூறப்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வம் குறித்து டிரான்ஸ்-கேப் நிறு­வ­னத்­தி­டம் அந்த ஓட்­டு­நர் நேற்று தெரி­யப்­ப­டுத்­தி­ய­தாக டிரான்ஸ்-கேப் பொது நிர்­வாகி ஜாஸ்­மின் டான் கூறி­னார்.

"இந்­தச் சம்­ப­வத்­துக்­காக நாங்­கள் வருந்­து­கி­றோம். இறந்­த­வ­ரின் குடும்­பத்­தா­ரைத் தொடர்­பு­கொண்டு அவர்­க­ளுக்­குத் தகுந்த உத­வியை வழங்க எங்­கள் காப்­பு­றுதி நிறு­வனம் முயற்சி செய்து வரு­கிறது.

"இந்­நி­லை­யில், காவல்­து­றை­யின் விசா­ர­ணைக்கு நாங்­கள் உதவி வரு­கி­றோம்," என்று அவர் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!