கொவிட்-19 விதிமீறல் தொடர்பில் மாதுக்குச் சிறை

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வல் நேரத்­தில் நுரை­யீ­ரல் தொற்­றுக்­காக ஐந்து நாள் மருத்­துவ விடுப்பு அளிக்­கப்­பட்ட மாது சட்­ட­வி­ரோ­த­மாக வீட்­டி­லி­ருந்து வெளி­யே­றி­ய­தற்­காக ஐந்து வாரச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

மிஷெல் ஃபூ ஷி சிங் 2020ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி இரு­மல், தொண்டை அழற்சி ஆகி­ய­வற்­றுக்­காக மருத்­து­வ­ரைக் காணச் சென்­றார். தொற்­று­நோய்த் தடுப்­புச் சட்­டத்­தின்­கீழ் அவர் ஐந்து நாள்­களுக்கு வீட்­டி­லேயே இருப்­பது கட்­டா­யம் என்று மருத்­து­வர் நினை­வு­றுத்­தி­ய­போ­தும் 2020 ஜூலை 17ஆம் தேதி ஃபூ தனது மக­னைப் பள்­ளி­யில் கொண்­டு­வி­ட­வும் பின்­னர் வாடகை காரில் பய­ணம் செய்து திரை­ய­ரங்­குக்­குச் சென்று நண்­பர்­க­ளு­டன் படம் பார்க்­க­வும் வெளியே சென்­றார்.

மீண்­டும் வாடகை காரில் வீடு திரும்­பிய அவர் மறுநாள் அதி­காலை 3.30 மணி­ய­ள­வில் மீண்­டும் வாடகை காரில் வெளியே சென்று ஏழு மணி நேரம் கழித்து வீடு திரும்­பி­னார்.

பிடி­பட்­ட­வு­டன் தான் வெளியே சென்­றதை முத­லில் அவர் மறுத்­த­தா­கக் கூறப்­பட்­டது. மன உளைச்­ச­லால் ஃபூ அவ்­வாறு நடந்­து­கொண்­ட­தாக அவ­ரது வழக்­க­றி­ஞர் நீதி­மன்­றத்­தில் கூறி­னார். இருப்­பி­னும் குற்­றச்­செ­ய­லுக்­கும் இதற்­கும் தொடர்­பில்லை என்று கூறிய நீதி­பதி ஃபூவிற்கு ஐந்து வாரச் சிறைத்­தண்­டனை விதித்­தார்.

நாளை வரை அவர் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!