பிணைக்கைதிகளை மீட்கும் ஆயுதப் படை

தேசிய தின அணிவகுப்பில் ஆச்சரியமூட்டும் காட்சி

மாதங்கி இளங்­கோ­வன்

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­கள், இவ்­வாண்­டின் தேசிய தின அணி­வ­குப்­பில் பேருந்­தி­லி­ருந்து கடத்­தப்­பட்ட பிணைக்­கை­தி­க­ளாக இருப்­போரை மீட்­டெ­டுக்­கும் பாவ­னைப் பயிற்­சியை முதல் முறை­யாக செய்து காட்­ட­வி­ருக்­கின்­ற­னர். பேருந்­தின் சன்­னலை உடைத்து பிணைக் கைதி­கள் காப்­பாற்­றப்­ப­டு­வ­தைப் பார்­வை­யா­ளர்­கள் நேர­டி­யா­கக் காண­லாம். இறு­தி­யாக 2017ஆம் ஆண்­டில் படைக்­கப்­பட்ட முழு­மைத் தற்­காப்­புக் காட்சி, இவ்­வாண்டு மீண்­டும் அரங்­கே­று­கிறது.

நீரி­லும் நிலத்­தி­லும் கடற்­படை முக்­கு­ளிப்­புப் பிரி­வைச் சேர்ந்­த­வர்­களும் ராணுவ 'லெப்­பர்ட்' பீரங்கி வண்­டி­களும் மரினா பே மிதக்­கும் மேடை­யில் ஊர்­வ­ல­மா­கச் செல்­ல­வுள்­ள­னர்.

இந்­தக் காட்­சி­யில் 500க்கும் மேற்­பட்­டோர் கலந்­து­கொள்­வ­தோடு சிங்­கப்­பூர் பாது­காப்பு மற்­றும் தற்­காப்பு அமைப்­பு­க­ளின் 50க்கும் மேற்­பட்ட சாத­னங்­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. புதிய 'சினுக்' ஹெலி­காப்­டர்­களும் 'ஹண்­டர் ஏஎ­ஃப்வி' பீரங்கி வாக­னங்­களும் அடுத்த தலை­முறை காவ­லர்­க­ளின் கார்­களும் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் தீய­ணைப்பு இயந்­தி­ர­மும் இவ்­வங்­கத்­தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் 'ரெட் ரைனோ' தீய­ணைப்பு வாக­னம், காவ­லர்­க­ளின் மோட்­டார் சைக்­கிள்­கள், ராணு­வப் படை வீரர்­கள் அணி­வ­குப்­பில் பங்­கெ­டுக்­கின்­ற­னர்.

தேசிய தின அணி­வ­குப்­பில் நேர­டி­யாக பங்­கேற்­ப­வர்­கள் மட்­டு­மல்­லா­மல் காணொளி மூல­மா­க­வும் பாட­கர் குழு உட்­பட வெவ்­வேறு குழுக்­கள் கலந்­து­கொள்­வது இன்­னொரு சிறப்பு அம்­ச­மாக அமை­கின்­றது.

தேசிய சேவை­யின் 55வது ஆண்டு நிறைவை முன்­னிட்டு தேசிய சேவையை முடித்த, தற்­போ­தைய தேசிய சேவை­யா­ளர்­களை கௌர­விக்­கும் அங்­க­மும் இடம்­பெ­று­கிறது. இதில் இளம் படை வீரர்­கள் 'NS55' எனும் வடி­வத்தை உரு­வாக்கி தேசிய சேவை­யா­ளர் களுக்கு மரி­யாதை செலுத்­து­கின்­ற­னர். லெஃப்டி­னண்ட் கர்­னல் டெஸ்­மண்ட் ஃபூ இவ்­வாண்­டின் அணி­வ­குப்பை வழி­ந­டத்­து­வார்.

சகோ­த­ரர்­க­ளான விஷ்­ணு­ராம் பெரி­ய­சாமி,24, சந்­தோஷ் பெரி­ய­சாமி, 15, இரு­வ­ரும் இவ்­வாண்டு அணி­வ­குப்­பில் பங்­கேற்­கின்­ற­னர். தேசிய சேவையை முடித்த கையோடு ராணு­வத்­தில் விஷ்ணு ராம் சேர்ந்­தார்.

"முதல் முறை­யாக தேசிய தின அணி­வ­குப்­பில் மரினா பே மிதக்­கும் மேடையை வலம் வர வாய்ப்பு கிடைத்­த­தில் எனக்கு மிக்க மகிழ்ச்சி," என்று விஷ்­ணு­ராம் பெரி­ய­சாமி தெரி­வித்­துள்­ளார்.

அதே­போல முதன்­மு­றை­யாக இவ்­வ­ணி­வ­குப்­பில் கலந்­து­கொள்­ளும் சந்­தோஷ் பெரி­ய­சாமி, "என் அண்­ண­னு­டன் சேர்ந்து அணி வகுப்­பில் பங்­கெ­டுப்­பது பெரு­மை­யாக இருக்­கிறது," என்­றார்.

அணி­வ­குப்­பில் தமது பங்கை ஆற்­ற­வி­ருக்­கும் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­க­ளின் கார்ப்­ப­ரல் அட்­டிலி கிரீத்தி ஆதித்ய குமார், 20, "இரண்டு ஆண்டு தேசிய சேவை­யின்­போது இதில் பங்­கேற்க வேண்­டும் என்ற ஆர்­வம் மேலோங்­கி­யது. தற்­போது இவ்­வாண்டு அணி­வ­குப்­பில் கலந்­து­கொள்­வது பெரு­மை­ அ­ளிக்­கிறது என்­றார்.

மூன்று வரு­டங்­க­ளுக்குப் பின்பு மொத்­தம் 2,000 பேர் கொண்ட 37 நேரடி மற்­றும் மெய்­நி­கர் குழுக்­கள் முழுமைத் தற்­காப்புக் காட்­சி­யில் கலந்­து­கொண்டு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­ப­ட்ட­தற்கு முன்­பி­ருந்த அள­வில் தேசிய தின அணி­வ­குப்பு நடக்­கும் என பார்­வை­யா­ளர்­கள் எதிர்­பார்க்­க­லாம்.

கொவிட்-19க்கு முந்­தைய வழக்­க­மான காலத்­திற்­குத் திரும்­பும் நோக்­கத்­தோடு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள, கடந்த மூன்று ஆண்டு­ களில் இல்­லாத மாபெ­ரும் அணி­ வ­குப்­பில் 2,000க்கும் மேற்­பட்­டோர் பங்­கேற்­கின்­ற­னர்.

மரினா பே மிதக்­கும் மேடை­யில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தேசிய அணி­வ­குப்­பின் ­விவரங்­களை ஏற்­பாட்­டா­ளர்­கள் வெளி­யிட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!