பழுதுபார்ப்பு ஊழியர் மரணம்: அங்கீகரிக்கப்படாத கருவி பயன்படுத்தப்பட்டிருக்கலாம்

அங் மோ கியோ பேருந்­துப் பணி மனை­யில் கடந்த ஜூன் மாதம் பேருந்தை பழு­து­பார்த்­துக் கொண்­டி­ருந்த ஊழி­யர் ஒரு­வர் மரண மடைந்­தார்.

இந்­தச் சம்­ப­வத்­தில் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத வாக­னத்தை உயர்த்­தும் கருவி ‘ஜேக்’ பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­க­லாம் என்று மரண விசா­ரணை நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பேருந்­தில் அடி­யில் திரு தின் சூன் ஃபாட் வேலை செய்­து­கொண்­டி­ருந்­த­போது ஜேக் ஒன்று வலு விழந்­தது. இத­னால் அவ­ரது தலை சிக்­கிக் கொண்­டது என்­றும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

தலை­யில் படு­கா­யத்­து­டன் 43 வயது ஊழி­ய­ரான திரு தின் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார்.

இந்த அசம்­பா­வி­தத்தை விசா­ரித்த விசா­ரணை அதி­கா­ரி­யான ஆய்­வா­ளர் லி சின் ரோங், அந்­தச் ­ச­ம­யத்­தில் எஸ்­எம்­ஆர்­டி­யின் துணை நிறு­வ­ன­மான ஸ்ட்­ரெய்ட்ஸ் ஆட்­டோ­மேட்­டிவ் சர்­வி­சஸ் என்று நிறு­வ­னத்­துக்கு திரு தின் பணி­யாற்­றி­ய­தா­கத் தெரி­வித்­தார்.

சம்­பவ இடத்­துக்கு ஸ்ட்­ரைட்ஸ் நிறு­வ­னம் விநி­யோ­கிக்­காத ஜேக்­கு­களை திரு தின் கொண்டு வந்­தது விசா­ர­ணை­யில் தெரிய வந்­த­தா­க­வும் அவர் கூறி­னார்.

மனி­த­வள அமைச்­சின் வேலை தொடர்­பான பாது­காப்பு, சுகா­தா­ரப் பிரி­வின் திரு இங் சீ ஹிவி­யும் நேற்று சாட்­சி­யம் அளித்­தார்.

“சம்­பவ இடத்­தில் ஜேக்­கு­க­ளைக் கொண்டு வரு­வ­தற்கு கார­ணமே இல்லை. அவை தர­மான கரு­வி­களும் அல்ல,” என்று மரண விசா­ரணை அதி­கா­ரி­யான ஆடம் நக்­கோ­டா­வும் திரு இங் சொன்­னார்.

கடந்த ஆண்டு ஜூன் 6ஆம் தேதி திரு தின்­னும் அவ­ரது இரண்டு சகாக்­களும் மின்­சா­ரப் பேருந்தை பழு­து­பார்க்க அனுப்பி வைக்­கப் பட்­ட­னர். பேருந்­தின் மொத்த எடை 7.5 டன். பேருந்­தின் முன்­ப­குதி மட்­டும் மூன்று டன் எடை­யைக் கொண்­டது. பேருந்­தின் முன்­ப­கு­தி­யைத் தாங்­கிப் பிடிக்க இரண்டு ஜேக்­கு­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டன.

இரண்டு ஜேக்­கு­களும் மொத்­தம் இரண்டு டன் எடை­யைத் தாங்­கக் கூடி­யவை. பழு­து­பார்ப்­புப் பணி முடி­வ­டைந்­த­தும் வாக­னத்­தின் அடி­யி­லி­ருந்த திரு தின், ஒரு ஜேக்­கின் உய­ரத்­தைக் குறைத்­தி­ருக்­க­லாம்.

அதன் விளை­வாக மற்­றொரு ஜேக்­கின் மீது எடை கூடி அந்த ஜேக்­கின் பிடி விடு­பட்­டி­ருக்­க­லாம் என்று திரு இங் மேலும் தெரி­வித்­தார்.

இந்த விசா­ர­ணை­யில் திரு தின்­னின் சகாக்­களில் ஒரு­வ­ரும் சாட்­சி­ய­ம­ளித்­தார். முறை­யான ஜேக்கு களைப் பயன்­ப­டுத்த விரும்­பி­ய­தா­கக் கூறிய அவர், மேற்­பார்­வை­யா­ள­ரான திரு தின் அதனை ஏற்க மறுத்­து­விட்­ட­தாகச் சொன்­னார்.

மரண விசா­ரணை அதி­கா­ரி­யின் முடிவு இன்னொரு தேதி­யில் அறி­விக்­கப்­ப­ட­வி­ருக்­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!