வெளிநாட்டு ஊழியர்கள் விடுமுறையில் தேக்கா செல்ல தேவைப்படும் அனுமதி குறித்து பல்வேறு கருத்துகள்

யுகேஷ் கண்­ணன்

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அதி­கம் கூடும் லிட்­டில் இந்­தியா, கேலாங் சிராய், சைனா­ட­வுன், ஜூரோங் ஈஸ்ட் ஆகிய இடங்­க­ளுக்கு ஞாயிற்­றுக்கிழ­மை­க­ளி­லும், பொது விடு­முறை நாள்­க­ளி­லும் செல்­லும் முன்­னர் தங்­கு­வி­டு­தி­யில் வசிக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சிறப்பு அனு­ம­திச்­சீட்­டுக்கு விண்­ணப்­பிக்க வேண்­டும் என்ற புதிய நடை­முறை குறித்து பல­ரும் தமிழ் முர­சி­டம் மாறு­பட்ட கருத்­து­க­ளைத் தெரி­வித்­துள்­ள­னர்.

புதிய நடை­முறை இம்­மா­தம் 24ஆம் தேதி­யி­லி­ருந்து நடப்­பில் இருக்­கும் என்று மனி­த­வள அமைச்சு அறிவித்துள்ளது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றின் பாதிப்­பைக் கட்­டுப்­ப­டுத்­து­வது இதன் நோக்­கம்.

ஆறு மாதத்­திற்கு ஒரு­முறை தேக்கா செல்­லும் தன்­னைப் போன்­ற­வர்­க­ளுக்கு இத்­திட்­டம் பெரிய பாதிப்பை ஏற்­ப­டுத்­தாது என்­றார் கட்­டு­மான ஊழி­ய­ரான சிவக்­கு­மார். முக்­கி­ய­மான வேலை­களுக்­காக மட்­டுமே தேக்கா செல்­லும் அவர், தேவை­யான பெரும்­பா­லான பொருள்­கள், சேவை­கள், வச­தி­கள் அனைத்­தும் தங்­கு­வி­டு­தி­யி­லேயே கிடைத்­து­வி­டு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

தங்­கு­வி­டு­தி­க­ளின் மேலா­ளர்­கள் அனு­ம­திச்­சீட்­டுக்கு விண்­ணப்­பித்து உத­வு­வ­தாக அவர் கூறி­னார்.

விடு­தி­யில் தங்­க­ளுக்கு இந்த அனு­ம­திச்­சீட்­டைப்­ பற்­றி­யும் அதற்கு எவ்­வாறு விண்­ணப்­பிக்க வேண்­டும் என்­ப­தைப் பற்­றி­யும் விளக்­கப்­பட்­ட­தா­கக் கூறி­னார் கட்­டு­மா­னத் துறை­யில் பணி­பு­ரி­யும் பெயர் குறிப்­பிட விரும்­பாத வெளி­நாட்டு ஊழி­யர் ஒரு­வர். அத­னால், இனி தானும் தன் நண்­பர்­களும் இந்த அனு­ம­திச்­சீட்­டைப் பெற்ற பிறகே தேக்கா செல்ல முடி­யும் என்­றார் அவர்.

ஆனால் செம்­ப­வாங்­கில் உள்ள தங்­கு­வி­டுதி ஒன்­றில் வசிக்­கும் ராஜா, தனக்கு இது­வரை இந்த அனு­ம­திச்­சீட்­டைப் பற்றி எது­வும் தெரி­யாது என்­றார்.

தேக்­கா­விற்கு எப்­போ­தா­வது நண்­பர்­க­ளைச் சந்­திக்க மட்­டும் செல்­லும் அவர், இத்­திட்­டத்­தி­னால் தன்­னைப் போன்­ற­வர்­கள் தேக்­கா­விற்கு செல்­வது பெரி­தும் குறைந்து­வி­டும் என எண்­ணு­கி­றார்.

அனு­ம­திச்­சீட்­டிற்கு எவ்­வாறு பதிவு செய்ய வேண்­டும் என்று இது­வரை தனக்­குத் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை எனக் கூறி­னார் மற்­றொரு வெளி­நாட்டு ஊழி­ய­ரான சரண்­ராஜ். நடை­முறை தெரிந்த பிறகு நிச்­ச­யம் அனு­மதி பெற்ற பின்பே தேக்­கா­விற்குச் செல்­லப் போவ­தாக அவர் தெரி­வித்­தார்.

தங்­கு­வி­டு­தி­களும் தாங்­கள் பணி­பு­ரி­யும் நிறு­வ­னங்­களும் இந்த அனு­ம­திச்­சீட்­டைப் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தி­னால் சிறப்­பாக இருக்­கும் எனக் கரு­து­கி­றார் திரு விஜ­ய­கு­மார்.

ஆனால், இத்­திட்­டத்­தி­னால் கடை உரி­மை­யா­ளர்­கள் தங்­க­ளது வியா­பா­ரம் மந்­த­ம­டை­யும் என அச்­சம் கொண்­டுள்­ள­னர்.

கேம்­பல் லேனில் அமைந்­துள்ள டிஷோன் மொத்த விற்­பனை கடை­யின் உரி­மை­யா­ளர் சந்­துரு, "கொவிட்-19 பாது­காப்பு விதி­முறைகள் தளர்த்­தப்­பட்­ட­பின், கடந்த சில வாரங்­க­ளா­கத்­தான் வியா­பா­ரம் நன்­றாக நடந்­து­வ­ரு­கிறது. ஆனால், இத்­த­கைய திட்­டத்­தால் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தேக்­கா­ வ­ரு­வது பெரு­ம­ளவு குறைந்து விடும். இத­னால், எங்­க­ளது வியா­பா­ர­மும் பாதிப்­ப­டை­யும்," எனக் கூறி­னார்.

தங்­கு­வி­டு­தி­க­ளி­லேயே மளி­கைப் பொருள்­கள், காய்­க­றி­கள் போன்­ற­வற்றை விற்­கும் சிறிய கடை­கள் இருப்­ப­தால் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தேக்கா வரு­வ­தற்­கான தேவை பெரி­தும் குறைந்துவிட்­டது. ஆனால், இச்­சிறு கடை­கள் தேக்­கா­வி­லி­ருக்­கும் மொத்த விற்­ப­னைக் கடை­க­ளி­லி­ருந்து பொருளை வாங்கி, லாப நோக்­கத்­து­டன் விலையை அதி­க­ரித்து விற்க வாய்ப்­புள்­ளது என்­றார் அவர்.

இந்தத் ­திட்­டம் அனைவரும் பாது­காப்­பாக இருக்­கும் வாய்ப்பை அதி­க­ரித்­தா­லும் வியா­பார வேகத்­தைக் குறைத்­து­வி­டும் என்­ப­தால் சற்று வருத்­த­ம­ளிப்­ப­தா­கக் கூறி­னார் ரசூல் மளி­கைக் கடை­யில் பணி­பு­ரி­யும் செல்­வ­கு­மார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!