உலகம் முழுவதும் கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்தாலும் சிங்கப்பூரர்களின் வெளிநாட்டுப் பயணம் தொடர்கிறது

திரு­வாட்டி சித்தி நூர் இமான் இரண்டு ஆண்­டு­க­ளாக வெளி­நாடு செல்­ல­வில்லை. கடை­சி­யாக ஜன­வரி 2020ல் தேனி­ல­வுக்­காக தென்ெகா­ரி­யா­வில் அவர் 12 நாட்­களை செல­வ­ழித்­தார். தற்­போது கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டுள்ள நிலை­யில் வரும் செப்­டம்­பர் 15 முதல் 30 வரை அவர் மீண்­டும் வெளி­நாடு செல்­லத் திட்­ட­மிட்­டுள்­ளார்.

இம்­முறை தனது கண­வர், ஒரு வயது மக­ளு­டன் குடும்­பத்­தி­ன­ரைச் சந்­திப்­ப­தற்­காக வடி­வ­மைப்­பா­ள­ரான அவர், மெல்­பர்ன் செல்­ல­வி­ருக்­கி­றார். 2019 டிசம்­ப­ருக்­குப் பிறகு அவர் தனது குடும்­பத்­தி­னரை இன்று வரை சந்­திக்­க­வில்லை.

தலைப்­புச் செய்­தி­யா­கி­யுள்ள பய­ணப் பிரச்­சி­னை­கள் பற்றி ேகட்­ட­போது, நாங்­கள் எங்­கள் பய­ணத்தை ஒத்­தி­போ­டவோ ரத்து செய்­யவோ திட்­ட­மில்லை என்று சித்தி உறு­தி­யோடு கூறி­னார்.

இருந்­தா­லும் பாது­காப்­பான பய­ணத்­திற்­காக பய­ணக்­காப்­பு­று­தியை அவர் வாங்­கி­வைத்­துள்­ளார்.

பிரிட்­டன், ஐரோப்­பிய நாடு­கள், ஆஸ்­தி­ரே­லியா உட்­பட பல இடங்­களில் அதி­வே­க­மா­கப் பர­வக்­கூ­டிய பிஏ.4, பிஏ.5 ஒமிக்­ரான் துணைக் கிரு­மி­க­ளால் கொவிட்-19 தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­து­வ­ரு­கின்­றன. அதே சம­யத்­தில் கடந்த சில மாதங்­க­ளாக விமான நிலை­யங்­களில் சமா­ளிக்க முடி­யாத அள­வுக்கு பய­ணங்­கள் அதி­க­ரித்­துள்­ளன. பய­ணி­கள் கோராத பய­ணப் பெட்­டி­கள் தேங்­கிக் கிடக்­கின்­றன. சில இடங்­களில் பய­ணப் பெட்­டி­ க­ளுக்­காக அதிக நேரம் காத்­தி­ருக்க வேண்­டி­யி­ருப்­ப­தால் பய­ணி­கள் வெறுப்­ப­டைந்­துள்­ள­னர்.

லண்­டன் ஹீத்ரோ விமான நிலை­யம், ஜூன் 20ஆம் தேதிக்­கான விமா­னப் பய­ணங்­களில் பத்து விழுக்­காட்டை ரத்து செய்­யு­மாறு விமான நிறு­வ­னங்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டுள்­ளது. இத­னால் 90 விமா­னங்­களில் பய­ணம் செய்­யும் 15,000 பய­ணி­கள் பாதிக்­கப்­ப­டு­வார்­கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஆனால் சிங்­கப்­பூ­ரர்­களை இத்­த­கைய இடை­யூ­று­கள் தடுத்­து­நி­றுத்­த­வில்லை என்று பய­ணத் துறை­யி­னர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­துள்­ள­னர்.

‘ஈயூ ஹாலி­டேஸ்’ எனும் நிறு­வ­னத்­தின் சந்­தை­மய நிர்­வா­கி­யான மேண்டி சான், “கொவிட்-19 தொற்றுநோ­யு­டன் வாழ்­வதை மக்­கள் ஏற்­றுக்கொண்­டுள்­ள­னர். இனி­யும் அவர்­க­ளுக்கு அச்­ச­மில்லை,” என்­றார். இதையே வலி­யு­றுத்­திய ‘ஹோங் தாய் டிரா­வல்’ மூத்த சந்­தை­மய நிர்­வா­கி­யான ஸ்டெல்லா சோவ், சிங்­கப்­பூ­ரர்­கள் இவ்­வாண்டு இறுதி வரை விடு­மு­றைக்கு முன்­ப­திவு செய்து வரு­கின்­ற­னர் என்று கூறி­னார்.

ஆசியா எக்ஸ்­பீ­டியா குழு­மத்­தின் பொதுத்­தொ­டர்பு தலை­வ­ரான லாவி­னியா ராஜா­ராம், அனைத்­து­ல­கப் பய­ணத்­திற்­கான தேவை அதி­க­ரித்­துள்­ளதை கண்­கூ­டா­கக் காண முடி­கிறது என்று கூறி­யுள்­ளார்.

செப்­டம்­பர் மாத விடு­மு­றை­யில் சிங்­கப்­பூர் குடும்­பங்­கள் செல்ல விரும்­பும் இடங்­களில் ஆஸ்­தி­ரே­லியா, தாய்­லாந்து, பாலி ஆகி­யவை பிர­ப­ல­மாக விளங்­கு­கின்­றன என்று ‘சான் பிர­தர்ஸ்’ மூத்த, சந்­தை­மய தொடர்பு நிர்­வாகி ஜெர­மையா வோங் தெரி­வித்­துள்­ளார்.

இருந்­தா­லும் சில சிங்­கப்­பூ­ரர்­கள் வெளி­நாடுப் பய­ணங்­களை மேற்­கொள்­வ­தில் இன்­ன­மும் எச் ­ச­ரிக்­கை­யா­கவே இருக்­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!