தாதிமைத் துறையின் மனிதவள நெருக்கடியை சமாளிப்பது முக்கியம்

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்­றுச் சம்­ப­வங்­கள் உச்­சத்­தைத் தொட்டு வந்­தா­லும் நோயாளி எண்­ணிக்­கை­யைச் சமா­ளிக்­கும் ஆற்­றல், நாட்­டின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்புக் கட்டமைப்புக்கு உள்­ள­தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்துள்­ளார். இருப்­பி­னும், தாதி­யரின் வேலைப் பளு­வைக் குறைப்­ப­தற்­குத் தாதி­மைத் துறை­யில் நிலவி­வ­ரும் மனி­த­வ­ளப் பிரச்­சினையை எதிர்­கொள்­வது அவ­சியம் என்­றும் அவர் சுட்­டி­னார்.

சிங்­ஹெல்த் குழு­மத்­தின் தாதி­யர் தினக் கொண்­டாட்­டத்­தில் நேற்று கலந்­து­கொண்டு பேசிய திரு ஓங், "மருத்­து­வ­மனை நில­வரம் எப்­படி உள்ளது? அதி­க­மான வேலை ஆனா­லும் சமா­ளிக்­கும் வகை­யில் இருக்­கிறது," என்­றார்.

புதி­தாக 6,175 கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் நேற்று முன்­தி­னம் பதி­வா­கி­யி­ருந்­தன. அத்­து­டன் மருத்­து­வ­ம­னை­யில் 738 கொவிட்-19 நோயா­ளி­கள் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

சிங்­கப்­பூ­ரர்­கள், வெளி­நாட்­டி­னர் எனப் பல­த­ரப்­பட்­டோ­ரைக் கொண்­ட­தாக சிங்­கப்­பூ­ரின் தாதி­யர் வட்­டம் அமைந்­துள்­ளது. இதைக் குறிப்­பிட்ட திரு ஓங், தாதி­யரின் வேலைப் பளு­வைக் குறைப்­ப­தற்கு மனி­த­வளத் தட்­டுப்­பாட்டை சமாளித்தாக வேண்­டும் என்­றார்.

கொண்­டாட்­டத்­தில் கலந்­து­கொண்ட சுமார் 400 தாதி­யரை நோக்கி அவர், "தாதி­யர்­ இன்­ன­மும் விடுப்­பில் செல்­ல­லாம். வேலைப் பளு கார­ண­மாக யாரும் களைப்பு மிகு­தியை உண­ரக்­கூ­டாது என்­பதை உறு­தி­செய்­வதே மிக முக்­கியம். நீங்­கள் உங்­க­ளது முக்­கி­ய­மான பணி­யைத் தொடர்ந்து செய்­வதை நாங்­கள் உறு­தி­செய்­கி­றோம்," என்­றார்.

"வாரந்­தோ­றும் அனைத்து மருத்­து­வ­ம­னைக் குழு­மங்­க­ளி­லும் பணியை விட்டு வில­கு­வோ­ரின் விகி­தத்தை நான் கண்­கா­ணித்து வரு­கி­றேன். தற்­போது அது நிலையாக உள்ளது. ஆண்­டி­று­தி­வரை அவ்­வாறே இருக்கும் என்ற நம்­பிக்கை உள்ளது. இதற்­குத்­தான் நாங்­கள் முன்­னு­ரிமை தரு­கி­றோம் என்­பதை உறு­தி­ப­டக் கூறு­வேன்," என்­றார் திரு ஓங்.

சிங்­ஹெல்த் குழு­மத்­தில் 11,700க்கும் மேற்­பட்ட தாதி­யர்­ உள்­ள­னர். ஆகஸ்ட் 1ஆம் தேதி அனு­ச­ரிக்­கப்­படும் தாதி­யர் தினத்தை முன்­னிட்டு குழு­மம் நேற்று அதன் வரு­டாந்­திர தாதி­யர் தினக் கொண்­டாட்­டத்­திற்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

குழு­மத்­தின்­கீழ் பணி­யாற்­றும் தாதி­யர்­, தங்­கள் படிப்­பைத் தொடர்­வ­தற்கு $5 மி. நன்­கொடைத் திட்­டம் ஒன்றை நேற்­றைய நிகழ்­வின்­போது 'வீ அற­நி­று­வ­னம்' அறி­வித்­தது. இத்­திட்­டத்­தின்­வழி இளங்­க­லைப் பட்­டம், பட்­ட­த்துக்குப் பிந்திய பட்­ட­யக்கல்வி, முது­க­லைப் பட்­டம், முனை­வர் பட்­டம் ஆகிய கல்­வித் தகுதி பெற தாதி­யர்­ படிக்­க­லாம். அத்துடன் மின்­னி­லக்­க­ம­யம், தர­வுப் பகுப்­பாய்வு, புத்­தாக்­கம் போன்ற அம்­சங்­கள் தொடர்­பான பாடங்களுக்கும் பயிற்­சித் திட்­டங்­களுக்கும் நிதித் திட்டம் உதவும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!